Wednesday, June 5, 2019

தமிழக இடைத்தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்! தி.மு.க கைப்பற்றும் தொகுதிகள் எத்தனை? மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என பெரும்பலான தேசிய ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது

தமிழக இடைத்தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்! தி.மு.க கைப்பற்றும் தொகுதிகள் எத்தனை?
மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என பெரும்பலான தேசிய ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழக இடைத்தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்! தி.மு.க கைப்பற்றும் தொகுதிகள் எத்தனை? மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என பெரும்பலான தேசிய ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 14 இடங்களில் திமுக வெற்றி பெறும் என இந்தியா டூடே நடத்திய கருத்துகணிப்பில் தெரிவித்துள்ளனர்.
தமிழக இடைத்தேர்தல் முடிவை பொறுத்தே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்குமா? இருக்காதா? என்று கூறமுடியும்.
அதிமுகவுக்கு சட்டசபையில் தற்போது பெரும்பான்மை பலம் ஊசலாடும் நிலையில் உள்ளது.
மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என பெரும்பலான தேசிய ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் தி.மு.க 15-17 இடங்களில் வெற்றி பெரும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்தன.
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற 22 இடைத்தேர்தல்களில் யார் அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பு முடிவை இந்தியா டூடே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியா டுடே நடத்தி உள்ள கருத்துக் கணிப்பு முடிவில் திமுக 14 தொகுதிகளிலும் அதிமுக 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணித்து உள்ளது.
5 தொகுதிகள் இழுபறியாகவே இருக்கும் என்றும் இந்திய டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

முருகன் பூவடி புகுந்த பசும்பொன் தேவரே போற்றி

முருகன் பூவடி புகுந்த பசும்பொன் தேவரே போற்றி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினம்
மாவீரர்களுக்கு கள்ளர் முரசு சார்பாக வீர வணக்கம்...
உப்பிட்டு சாப்பிடும் நேரம் எல்லாம் உம் வீரம் பேசுவோம்
குண்டுகள் தாங்கிய உங்கள் நெஞ்சத்தின் வலிமையை பேசுவோம் !
நிழல் ஆட்சியில் உங்களின் நிஜங்களை பேசுவோம் !
தூத்துக்குடி மக்களின் நல்வாழ்வுக்காக
வீர மரணம் பெற்றவர்கள்
என்றும் அழிவதில்லை...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை.
கள்ளர் முரசு சார்பாக வீரவணக்கம்..! வீரவணக்கம்

ஆட்சி பறிபோகும் நிலை! சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு!

ஆட்சி பறிபோகும் நிலை! சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு!
நேற்று இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக கட்சிக்கு 14இடமும்,அதிமுக அணிக்கு 3 இடமும், 5 இடங்களில் இழுபறி நிலை இருக்கும் என்று அறிவித்தனர். இதனால் தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக வராது என்ற நிலை உருவாகியுள்ளதால் அதிமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலோடு காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதையடுத்து மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.
இப்போது இந்த இடைத்தேர்தல்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் நடத்திய அந்த கருத்துக்கணிப்பில் திமுக 14 இடங்களிலும் அதிமுக 3 இடங்களிலும் வெல்லும் என சொல்லப்பட்டது. மீதமுள்ள 5 இடங்களில் இரண்டுக் கட்சிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் அதானல் அந்த 5 தொகுதிகளில் இழுபறி நிலவும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.இப்படியான சூழலில் ஆட்சி இழக்கும் நிலை அதிமுகவுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.திமுகவோடு சேர்ந்து தினகரன் ஆட்சியை கலைக்க முயற்சி செய்வதை தடுக்க சசிகலாவிடம் சமாதானம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் சமாதானம் பேச அவரது மனைவியை பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறைக்கு அனுப்பியதாக ஒரு செய்தி வெளியானது.அதை உறுதி செய்யும் விதமாக சசிகலாவை முதல்வர் மனைவி சந்தித்தது குறித்து உறுதியான தகவலை அதிமுக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஓ.பி.எஸ் மனைவியும் சந்தித்தாக கூறப்பட்டது ஆனால் அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை

பாராளுமன்ற தேர்தலில் 2 வது முறையாக வென்ற பாரத பிரதமர் மோடிஜி அவர்களுக்கு கள்ளர் முரசு சார்பாக நல்வாழ்த்துக்கள்

பாராளுமன்ற தேர்தலில் 2 வது முறையாக
வென்ற பாரத பிரதமர் மோடிஜி அவர்களுக்கு
கள்ளர் முரசு சார்பாக நல்வாழ்த்துக்கள்

தினகரனுக்கு விழுந்த அடி!

தினகரனுக்கு விழுந்த அடி!
இந்த தேர்தலில் அனைவராலும் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட தினகரனின் அமமுகாவுக்கு எதிர் பார்த்த வாக்கு வங்கி கிடைக்காததால் பெரிய அதிர்ச்சியில் அக்கட்சியினர் உள்ளனர்.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல் அதிகமாக காணப்பட்டது.இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் பிரிந்து சென்று தர்மயுத்தம் நடத்தி தனி கட்சி தொடங்குவதாக இருந்தது.பின்பு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றார்.

அதற்குப் பிறகு தினகரன் அதிமுகவில் பிரிந்து அமமுக கட்சி ஆரம்பித்து ஆர்.கே .நகர் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.இதனால் தமிழகத்தில் தனி பெரும் கட்சியாக இந்த தேர்தலில் இடம் பெறுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது.ஆனால் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் அமமுக கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் போதுமான ஓட்டு வாங்காமல் மிகக் குறைந்த ஓட்டுகள் மட்டுமே வாங்கியதால் அக்கட்சியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதில் புதிதாக களம் கண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சென்னையில் அனைத்து தொகுதியிலும் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.மேலும் தினகரன் இந்த தேர்தலில் கிங் மேக்கராக இருப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அவரது கட்சி வாங்கிய ஓட்டுகளால் அதிமுக கட்சிக்கு பெரிதும் பாதிப்பில்லை என்பதால் அரசியலில் இது தினகரனுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திமுகவின் பெரிய வெற்றியும், ''ஜீரோ'' பலனும்!! பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்பதால் திமுகவுக்கு எந்த பலனும் இல்லை.

தமிழகத்தில் திமுகவின் பெரிய வெற்றியும், ''ஜீரோ'' பலனும்!!
பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்பதால் திமுகவுக்கு எந்த பலனும் இல்லை.
நடந்து முடிந்த 17வது சட்டமன்றத் தேர்தலில் ஏறக்குறைய 37 இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இவ்வளவு இடங்களில் திமுக வெற்றி வாய்ப்பை எட்டினாலும், மத்தியில் இவர்களது ஆதரவு இல்லாமல் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் தற்போது ஏற்பட்டு இருப்பதால் திமுகவுக்கு எந்த பலனும் இல்லை.

தலை தப்பித்ததா அதிமுக ஆட்சி? அந்த 3 எம்.ஏல்.ஏக்கள் கையில் தான் எல்லாமே இருக்கு

தலை தப்பித்ததா அதிமுக ஆட்சி?
அந்த 3 எம்.ஏல்.ஏக்கள் கையில் தான் எல்லாமே இருக்கு!
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் தமிழக தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிவுகள் அப்படியே தலைக்கீழாக புரட்டிப்போட்டு விட்டது. மத்தியியில் பாஜக 342 இடங்களிலும், காங்கிரஸ் 91 இடங்களிலும், இதர கட்சிகள் 109 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. எனவே, மீண்டும் பாஜகவே ஆட்சி அமைப்பதும், மோடியே மீண்டும் பிரதமர் என்பதும் உறுதியாகிவிட்டது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக 37 இடங்களிலும், அதிமுக 2 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. எனவே, இதில் திமுக அதிக இடங்களை பெறுவது உறுதியாகியுள்ளது. ஆனால், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் தற்போதையை நிலவரப்படி திமுக 14 இடங்களிலும், அதிமுக 8 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.
234 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தமிழக சட்டசபையின் தற்போதைய எண்ணிக்கை 212. இதில் அ.தி.மு.க.-111 (சபாநாயகர் சேர்த்து), அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களாக (இரட்டை இலை சின்னத்தில் போட்டி) தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகிய 3 பேர் உள்ளனர். இவர்களையும் சேர்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 114 ஆக இருக்கிறது.
ஆனால் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரில் தனியரசு தவிர மற்ற 2 பேரும் அ.தி.மு.க. எதிர்ப்பு நிலையில் இருப்பதாலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய 3 பேரும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக இருப்பதாலும் அவர்களை கழித்து பார்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 109 ஆக உள்ளது.
போதுமான அளவு மெஜாரிட்டி இல்லாமல் அ.தி.மு.க. அரசு நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க. மெஜாரிட்டி பெற அதிகபட்சமாக 9 இடங்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் அதிமுக அரசு தற்போது ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில் 3 எம்.எல்.ஏக்கள் முடிவு மிகவும் முக்கியமான ஒன்று. 22 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அரசு 10 இடங்களை எளிதாக கைப்பற்றினாலும் இந்த 3 எம்.எல்.ஏக்கள் சிக்கலும் இன்னும் நீடிக்கிறது.
தேனி பாராளுமன்ற தேர்தலில் நமது முக்குலத்து சமுதாயத்தை சேர்ந்த திருO.P. ரவீந்திரநாத் குமார் அவர்கள் வெற்றி பெற்றதுக்கு கள்ளர் முரசு நிறுவனர் ,ஆசிரியர் நேரில் நல்வாழ்த்துக்கள் கூறிய போது

`உன்னால நான் கெட்டேன்...என்னால நீ கெட்ட!’ அ.தி.மு.க–பி.ஜே.பி உரசல் ஆரம்பம்!

`உன்னால நான் கெட்டேன்...என்னால நீ கெட்ட!’ அ.தி.மு.க–பி.ஜே.பி உரசல் ஆரம்பம்!
தேர்தல் முடிவுகள் மிக மோசமாகி விட்டதால் யாரால் யாருக்குத் தோல்வி என்ற கேள்வி எழுந்துள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே இரண்டு கட்சியினருக்கும் இடையே இதுதொடர்பான விவாதங்களும், உரசல்களும் சூடுபிடித்துள்ளன.
`உன்னால நான் கெட்டேன்...என்னால நீ கெட்ட!’ அ.தி.மு.க–பி.ஜே.பி உரசல் ஆரம்பம்!
அ.தி.மு.க அரசு நீடிப்பதற்கு பி.ஜே.பி அரசு பலவகைகளிலும் உதவி செய்தது உண்மைதான். அதனால்தான், தேர்தலுக்குப் பின்பு கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்ற ஆலோசனையை பி.ஜே.பி தலைமையிடம் தெரிவித்தோம். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது அவர்கள் தனி மெஜாரிட்டியுடன் ஜெயித்து விட்டார்கள். அதனால் கூட்டணிக்கட்சியின் தயவு தேவையில்லை. ஒருவேளை பி.ஜே.பி-யுடன் சேராமல் நாங்கள் தனித்து நின்றிருந்தால் நாங்களும் கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்றிருப்போம். இந்தத் தேர்தலில் எங்களுக்குத்தான் இழப்பு. நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சி என்கிற அளவிற்கு அதிகளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தோம். ஆனால், இப்போது மிகக் கேவலமான தோல்வியை அடைந்திருக்கிறோம்’’ என்றார்கள்.
அமித் ஷா - பி.ஜே.பி. தலைவர்
பி.ஜே.பி மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்... ‘‘கீழே இரட்டைஇலைக்கும் மேலே உதயசூரியனுக்கும் ஒருவர் வாக்களிக்கிறார் என்பதற்கு பி.ஜே.பி மீதான வெறுப்புதான் காரணம் என்பதை ஏற்க முடியாது. அ.தி.மு.க தலைமை, நாடாளுமன்றத் தொகுதிகளில் ஜெயிப்பதைப் பற்றிக் கவலையேபடவில்லை. 22 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே அதிகக் கவனம் செலுத்தினார்கள். அதற்காகப் பணத்தையும் வாரியிறைத்தார்கள். ஒருசில தொகுதிகளில் வாக்குக்கு 4,000 ரூபாய்வரை கொடுத்ததாகத் தகவல்கள் வந்தன. அவ்வளவு பணம் கொடுத்தும் 9 தொகுதிகளில் மட்டும்தான் அவர்கள் ஜெயிக்க முடிந்துள்ளது என்றால், தமிழக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்புதான் காரணம். உண்மையைச் சொல்வதென்றால், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, பெரும்பான்மையையும் இழந்துள்ள அ.தி.மு.க அரசை நாங்கள்தான் காப்பாற்றுகிறோம் என்ற கோபம் தமிழக மக்களிடம் இருக்கிறது. எங்கள் கட்சி வேட்பாளர்களை இவ்வளவு மோசமாகத் தோற்கடிப்பதற்கு இதுவும் முக்கியக் காரணம் என்று கருதுகிறோம்’’ என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வலுவாகக் காலூன்றுவதற்கு கூட்டணி வைக்க வேண்டுமென்றே அ.தி.மு.க அரசை பல வழிகளிலும் பி.ஜே.பி அரசு காப்பாற்றிவந்தது. ஆனால், இப்போது அந்தக் கட்சிக்கு அ.தி.மு.க-வின் ஆதரவு எந்த வகையிலும் தேவைப்படாது. அதனால் அ.தி.மு.க.வைக் கழற்றி விடுமோ என்ற எதிர்பார்ப்பும் தமிழக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. இரண்டு கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த உரசல் பெரிதானால் அது விரைவாகவே நடந்துவிடுவதற்கும் வாய்ப்பு அதிகம்.
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்:
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம்
தற்போது தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார். நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
4 தென் மாநிலங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற மத்திய அமைச்சரவை விரைவில் நடவடிக்கை எடுக்கும். இந்த திட்டம் 60,000 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும். கோதாவரி நதியில் இருந்து 1,100 டிஎம்சி நீர் கடலில் வீணாவது தடுக்கப்படும் என்று கூறினார்.
ரூ.60,000 கோடி திட்ட நிதியில் 90% மத்திய அரசும், 10% நிதி மாநிலங்களும் செலவிடும்
அறுபதாயிரம் கோடி திட்ட நிதியில் 90 விழுக்காடு மத்திய அரசும், பத்து விழுக்காடு நிதி இந்த திட்டத்தால் பயன்பெறும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் செலவிடும். மேலும் இந்த திட்டத்திற்கான நிதியை உலக வங்கியிடமோ அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்தோ, பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் பாலாறு, தென்பெண்ணை, வெள்ளாறு, காவிரி போன்ற ஆறுகள் பயன் பெறும். மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களும் பயன்பெறும்.
திட்டத்தை உடனடியாக செயல்படுத்த விவசாயிகள் வேண்டுகோள்
இந்நிலையில் நமது செய்தியாளரிடம் பேசிய விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு, அறிவிப்போடு நில்லாமல் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக - அமமுக இணைப்பு எப்போது.. என்ன பிளான்.. பரபரக்கும் அரசியல் களம்

அதிமுக - அமமுக இணைப்பு எப்போது.. என்ன பிளான்.. பரபரக்கும் அரசியல் களம்
சென்னை: ரொம்ப நாளைக்கு பிறகு, இவங்க ரெண்டு பேரும் எப்ப சேர போறாங்க என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.. வேறு யாரு.. அதிமுக, அமமுக தரப்புகள்தான்! திமுக வலுவான நிலையில் தமிழகத்தில் உள்ளதை இந்த லோக்சபா தேர்தல் நிரூபித்து விட்டது. என்னதான் 9 சட்டசபைத் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றாலும் கூட அதன் தடுமாற்ற நிலையை மக்கள் உள்பட அனைவருமே இந்த தேர்தலில் பார்த்து விட்டனர். இப்படிப்பட்ட நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைககள் விரைவில் முடுக்கி விடப்படவுள்ளனவாம். நீங்கள் ஒன்றாக வேண்டும். வேறு வழியே இல்லை என்று பாஜக தரப்பிலிருந்து அதிமுகவுக்கு தெளிவாக சொல்லப்பட்டு விட்டதாம். இதனால் அதிமுக தலைமை பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது.
மனநிலை பாஜக சொன்னால்தான் என்றில்லை, அதிமுகவினரே கூட இப்போது நாம் பிரிந்து போனதுதான் பெரும் பாதகமாகி விட்டது. மறுபடியும் இணைந்தால் நம்மை வெல்ல யாராலும் முடியாது என்ற மன நிலைக்கு வந்துள்ளனராம். தோல்வி காரணம் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவின் வெற்றியை திமுக பறித்தது என்று சொன்னாலும் கூட பல தொகுதிகளில் அமமுககவும் கூட அதிமுகவின் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. 3வது கட்சியாக அமமுக உருவெடுத்துள்ளது. அக்கட்சி மட்டும் அதிமுகவுடன் இணைந்திருந்தால், நிச்சயம் திமுகவுக்கு டஃப் கொடுத்திருக்கும். திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத் தேர்தலிலும் அதிமுகவின் தோல்விக்கு அமமுகதான் காரணம். குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக, அமமுக வாங்கிய ஓட்டுக்களைச் சேர்த்தால், திமுக தோல்வி அடைந்திருக்கும். இதுபோலத்தான் பல தொகுதிகளில் நிலவரம் உள்ளது. மக்கள் நீதி மய்யம் இதுபோதாதென்று நாம் தமிழர் கட்சி ஒரு பக்கம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் தமிழர் கட்சி வருகிற சட்டசபை பொதுத் தேர்தலில் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோலத்தான் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும். 2-ம் கட்ட தலைவர்கள் இப்படி பல ரூபங்களில் போட்டிகள். ஜெயலலிதா இல்லாதது, பாஜகவின் பேச்சைக் கேட்டு எல்லாவற்றையும் செய்வது, மக்கள் மனதில் கடும் வெறுப்பை சம்பாதித்து வைத்திருப்பது, வாரிசுகளுக்கு மட்டும் சீட் கொடுத்தது என்று அதிமுக மிகப் பெரிய அளவில் டேமேஜ் ஆகியுள்ளது. இதை சரிசெய்ய ஒரே வழி அதிமுக - அமமுக இணைப்புதான் என்ற எண்ணம் தொண்டர்கள் 2ம் கட்ட தலைவர்கள், எம்எல்ஏக்கள் மத்தியிலும் வந்துள்ளதாம்.
ஒற்றுமை அமமுகவை மீண்டும் அதிமுகவில் கொண்டு வர வேண்டும். சசிகலாவை நம் பக்கம் அழைத்து வர வேண்டும். ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மக்கள் மனதைக் கவரும் வகையில் செயல்பட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா போல ஏழை எளிய மக்களின் அன்பை மீண்டும் பெற வேண்டும். அப்படிச் செய்தால்தான் அதிமுகவைக் காப்பாற்ற முடியும் என்ற எண்ணத்திற்கு அதிமுக வந்துள்ளதாம்.
ஒருங்கிணைப்பு ஆனால் தினகரன் மட்டும்தான் இந்த இணைப்புக்கு பெரும் இடையூறாக இருக்கிறதாம். தினகரனை சேர்க்க பலருக்கும் விருப்பமில்லை. ஆனால் இணைய வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருக்கிறது. இதற்கு விரைவில் ஒரு முடிவு கட்டப்பட வேண்டும் என்ற பேச்சுக்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளதாம். பார்க்கலாம், அதிமுக ஒருங்கிணையுமா என்பதை.
தமிழக நலன் இவர்கள் இருவரும் ஒருங்கிணைவதை விட முக்கியமானது, பாஜக சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு தமிழக மக்களின் நலன்கள், உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டால் இணைந்தாலும் கூட லாபம் இருக்காது... இப்போது கிடைத்த ரிசல்ட்தான் சட்டசபைத் தேர்தலிலும் கிடைக்கும் என்பதை அதிமுக நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
d

ஓபிஎஸ் மகன் பற்றி நடிகை கஸ்தூரி சர்ச்சை ட்வீட்

ஓபிஎஸ் மகன் பற்றி நடிகை கஸ்தூரி சர்ச்சை ட்வீட்!

சமீப காலமாக நடிகை கஸ்தூரி அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.தேர்தல் முடிவு வெளியாவதுக்கு முன்பே ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆன மாதிரி ஒரு கல்வெட்டில் அவரது பெயர் பொறிக்கப்பட்டது.இது அரசியலில் பெரும் சர்ச்சை மற்றும் விவாதத்தை கிளப்பியது.இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சர் ஆன மாதிரி ஒரு போட்டோஷாப் செய்யப்பட்ட அழைப்பிதழ் பரவி வருகிறது.அதை நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ ட்வீட் செய்துள்ளார்.இதனால் மீண்டும் பெரும் சர்ச்சை அரசியல் வட்டாரங்களில் கிளம்பியுள்ளது.

நீ எந்த ஊரு.. என்ன ஜாதி.. நிருபரை பார்த்து கேட்ட கிருஷ்ணசாமி.. பிரஸ்மீட்டில் கொந்தளிப்பு

நீ எந்த ஊரு.. என்ன ஜாதி.. நிருபரை பார்த்து கேட்ட கிருஷ்ணசாமி.. பிரஸ்மீட்டில் கொந்தளிப்பு
சென்னை: செய்தியாளர் சந்திப்பில், நிருபரை பார்த்து, நீ எந்த ஊரு, என்ன பேரு என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமும், அவரது உதவியாளர்கள், நிருபர்களை நோக்கி பாய்ந்த விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி தொகுதியில், பாஜக-அதிமுக கூட்டணியில் களமிறங்கியவர் கிருஷ்ணசாமி. ஆனால், திமுகவின், தனுஷ் குமாரிடம் கிருஷ்ணசாமி தோல்வியை தழுவினார். தனுஷ்குமார் 4,76,156 வாக்குகளை பெற்ற நிலையில், கிருஷ்ணசாமி 3,55,870 வாக்குகளை பெற்றார். மேலும் 28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக, திமுக தென்காசி தொகுதியை வென்று சாதனைபடைத்தது.
இந்த நிலையில் சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்தார் கிருஷ்ணசாமி. அப்போது தேர்தல் தோல்விகள் தொடர்பாகவும், சரமாரியாக கேள்விகள் எழுந்தன.
நன்றி சொல்கிறேன்
கிருஷ்ணசாமி கூறியதாவது: எனக்காக வாக்கு சேகரித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பிரேமலதா விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றி வாய்ப்பை இழந்தாலும், கூட்டணி கட்சி தலைவர்கள், சோர்ந்து போகக் கூடாது. புது சகாப்தம் தமிழகத்தில் 2021 வரை, எடப்பாடி பழனிச்சாமி அரசை நிம்மதியாக ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும். சுதந்திரம் வழங்க வேண்டியது அவசியம். 2021ல் புதிய தமிழகம்
புது சகாப்தத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும். அதற்காக மாநிலம் முழுக்க கிராமங்கள் தோறும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். வாக்குவாதம் அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், ஏன் உங்கள் கட்சியை தென்காசி மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். அப்போது கிருஷ்ணசாமிக்கும், அந்த நிருபருக்கும் நடுவே, வாக்குவாதம் ஏற்பட்டது. "ஒரு கிருஷ்ணசாமியா தோத்தாரு.. 38 பேரு தோத்துருக்கோம்ங்க. அளவோடு பேசு" என்றார் கிருஷ்ணசாமி. ஜாதி என்ன பதிலுக்கு அந்த நிருபர், "கிருஷ்ணசாமி சார் தோத்துருக்கார். நீங்க ஏன் தோத்தீங்கன்னு உங்ககிட்டதான் சார் கேட்க முடியும்" என்றார். பதிலுக்கு கிருஷ்ணசாமி, "ஏம்ப்பா நீ இப்படி பேசுற. சொல்றத கேளு.. உனக்கு ஏம்ப்பா இவ்வளவு? ஏய்" என்றார். அப்போது அந்த நிருபர், ஏய்லாம் சொல்ல கூடாது என பதிலுக்கு கத்தினார். இதையடுத்து நிருபர்களை பார்த்த கிருஷ்ணசாமி, அந்த பையன் எப்போதும் இப்படித்தான் கேக்குறான். இவனுக்கு எப்போதும் இதே நோக்கம் என்ற கிருஷ்ணசாமி, அந்த நிருபரை பார்த்து, உனக்கு எந்த ஊரு என கேள்வி எழுப்பினார். அதற்கு நிருபர் ராம்நாடு என்று, பதில் சொல்கிறார். இதையடுத்து, நீ என்ன ஜாதி என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்புகிறார். இதனால் பிரஸ் மீட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
தெருவை கூட கேட்பேன் நிருபர்கள், கிருஷ்ணசாமியை சூழ்ந்து கொண்டு, ஜாதி பெயரையெல்லாம் எப்படி கேட்கலாம் என்று வாக்குவாதம் செய்தனர். அப்போது, கிருஷ்ணசாமி கட்சிக்காரர் ஒருவர், நிருபர்களை நோக்கி பாய்ந்து வந்தார். அவரை சிலர் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர். கிருஷ்ணசாமி மேலும் தொடர்ந்து பேசுகையில், ஜாதி அடிப்படையில்தான் அவன் கேள்வி கேட்கிறான். நீ மனுஷனாவே கேள்வி கேட்கவில்லை. அவனுக்கு என்ன நோக்கம் என்று தெரிய வேண்டுமல்லா? என்ன தெரு என்று கூட கேட்பேன். இவ்வாறு கிருஷ்ணசாமி ஆவேசமாக கூறினார். இவ்வாறு பிரஸ் மீட் பெரும் அமளி துமளி நடுவே முடிவுக்கு வந்தது.