கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்:
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம்
தற்போது தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார். நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
4 தென் மாநிலங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற மத்திய அமைச்சரவை விரைவில் நடவடிக்கை எடுக்கும். இந்த திட்டம் 60,000 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும். கோதாவரி நதியில் இருந்து 1,100 டிஎம்சி நீர் கடலில் வீணாவது தடுக்கப்படும் என்று கூறினார்.
ரூ.60,000 கோடி திட்ட நிதியில் 90% மத்திய அரசும், 10% நிதி மாநிலங்களும் செலவிடும்
அறுபதாயிரம் கோடி திட்ட நிதியில் 90 விழுக்காடு மத்திய அரசும், பத்து விழுக்காடு நிதி இந்த திட்டத்தால் பயன்பெறும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் செலவிடும். மேலும் இந்த திட்டத்திற்கான நிதியை உலக வங்கியிடமோ அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்தோ, பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் பாலாறு, தென்பெண்ணை, வெள்ளாறு, காவிரி போன்ற ஆறுகள் பயன் பெறும். மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களும் பயன்பெறும்.
திட்டத்தை உடனடியாக செயல்படுத்த விவசாயிகள் வேண்டுகோள்
இந்நிலையில் நமது செய்தியாளரிடம் பேசிய விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு, அறிவிப்போடு நில்லாமல் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment