`உன்னால நான் கெட்டேன்...என்னால நீ கெட்ட!’ அ.தி.மு.க–பி.ஜே.பி உரசல் ஆரம்பம்!
தேர்தல் முடிவுகள் மிக மோசமாகி விட்டதால் யாரால் யாருக்குத் தோல்வி என்ற கேள்வி எழுந்துள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே இரண்டு கட்சியினருக்கும் இடையே இதுதொடர்பான விவாதங்களும், உரசல்களும் சூடுபிடித்துள்ளன.
`உன்னால நான் கெட்டேன்...என்னால நீ கெட்ட!’ அ.தி.மு.க–பி.ஜே.பி உரசல் ஆரம்பம்!
`உன்னால நான் கெட்டேன்...என்னால நீ கெட்ட!’ அ.தி.மு.க–பி.ஜே.பி உரசல் ஆரம்பம்!
அ.தி.மு.க அரசு நீடிப்பதற்கு பி.ஜே.பி அரசு பலவகைகளிலும் உதவி செய்தது உண்மைதான். அதனால்தான், தேர்தலுக்குப் பின்பு கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்ற ஆலோசனையை பி.ஜே.பி தலைமையிடம் தெரிவித்தோம். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது அவர்கள் தனி மெஜாரிட்டியுடன் ஜெயித்து விட்டார்கள். அதனால் கூட்டணிக்கட்சியின் தயவு தேவையில்லை. ஒருவேளை பி.ஜே.பி-யுடன் சேராமல் நாங்கள் தனித்து நின்றிருந்தால் நாங்களும் கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்றிருப்போம். இந்தத் தேர்தலில் எங்களுக்குத்தான் இழப்பு. நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சி என்கிற அளவிற்கு அதிகளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தோம். ஆனால், இப்போது மிகக் கேவலமான தோல்வியை அடைந்திருக்கிறோம்’’ என்றார்கள்.
அமித் ஷா - பி.ஜே.பி. தலைவர்
பி.ஜே.பி மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்... ‘‘கீழே இரட்டைஇலைக்கும் மேலே உதயசூரியனுக்கும் ஒருவர் வாக்களிக்கிறார் என்பதற்கு பி.ஜே.பி மீதான வெறுப்புதான் காரணம் என்பதை ஏற்க முடியாது. அ.தி.மு.க தலைமை, நாடாளுமன்றத் தொகுதிகளில் ஜெயிப்பதைப் பற்றிக் கவலையேபடவில்லை. 22 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே அதிகக் கவனம் செலுத்தினார்கள். அதற்காகப் பணத்தையும் வாரியிறைத்தார்கள். ஒருசில தொகுதிகளில் வாக்குக்கு 4,000 ரூபாய்வரை கொடுத்ததாகத் தகவல்கள் வந்தன. அவ்வளவு பணம் கொடுத்தும் 9 தொகுதிகளில் மட்டும்தான் அவர்கள் ஜெயிக்க முடிந்துள்ளது என்றால், தமிழக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்புதான் காரணம். உண்மையைச் சொல்வதென்றால், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, பெரும்பான்மையையும் இழந்துள்ள அ.தி.மு.க அரசை நாங்கள்தான் காப்பாற்றுகிறோம் என்ற கோபம் தமிழக மக்களிடம் இருக்கிறது. எங்கள் கட்சி வேட்பாளர்களை இவ்வளவு மோசமாகத் தோற்கடிப்பதற்கு இதுவும் முக்கியக் காரணம் என்று கருதுகிறோம்’’ என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வலுவாகக் காலூன்றுவதற்கு கூட்டணி வைக்க வேண்டுமென்றே அ.தி.மு.க அரசை பல வழிகளிலும் பி.ஜே.பி அரசு காப்பாற்றிவந்தது. ஆனால், இப்போது அந்தக் கட்சிக்கு அ.தி.மு.க-வின் ஆதரவு எந்த வகையிலும் தேவைப்படாது. அதனால் அ.தி.மு.க.வைக் கழற்றி விடுமோ என்ற எதிர்பார்ப்பும் தமிழக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. இரண்டு கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த உரசல் பெரிதானால் அது விரைவாகவே நடந்துவிடுவதற்கும் வாய்ப்பு அதிகம்.
No comments:
Post a Comment