தலை தப்பித்ததா அதிமுக ஆட்சி?
அந்த 3 எம்.ஏல்.ஏக்கள் கையில் தான் எல்லாமே இருக்கு!
அந்த 3 எம்.ஏல்.ஏக்கள் கையில் தான் எல்லாமே இருக்கு!
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் தமிழக தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிவுகள் அப்படியே தலைக்கீழாக புரட்டிப்போட்டு விட்டது. மத்தியியில் பாஜக 342 இடங்களிலும், காங்கிரஸ் 91 இடங்களிலும், இதர கட்சிகள் 109 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. எனவே, மீண்டும் பாஜகவே ஆட்சி அமைப்பதும், மோடியே மீண்டும் பிரதமர் என்பதும் உறுதியாகிவிட்டது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக 37 இடங்களிலும், அதிமுக 2 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. எனவே, இதில் திமுக அதிக இடங்களை பெறுவது உறுதியாகியுள்ளது. ஆனால், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் தற்போதையை நிலவரப்படி திமுக 14 இடங்களிலும், அதிமுக 8 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.
234 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தமிழக சட்டசபையின் தற்போதைய எண்ணிக்கை 212. இதில் அ.தி.மு.க.-111 (சபாநாயகர் சேர்த்து), அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களாக (இரட்டை இலை சின்னத்தில் போட்டி) தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகிய 3 பேர் உள்ளனர். இவர்களையும் சேர்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 114 ஆக இருக்கிறது.
ஆனால் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரில் தனியரசு தவிர மற்ற 2 பேரும் அ.தி.மு.க. எதிர்ப்பு நிலையில் இருப்பதாலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய 3 பேரும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக இருப்பதாலும் அவர்களை கழித்து பார்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 109 ஆக உள்ளது.
போதுமான அளவு மெஜாரிட்டி இல்லாமல் அ.தி.மு.க. அரசு நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க. மெஜாரிட்டி பெற அதிகபட்சமாக 9 இடங்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் அதிமுக அரசு தற்போது ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில் 3 எம்.எல்.ஏக்கள் முடிவு மிகவும் முக்கியமான ஒன்று. 22 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அரசு 10 இடங்களை எளிதாக கைப்பற்றினாலும் இந்த 3 எம்.எல்.ஏக்கள் சிக்கலும் இன்னும் நீடிக்கிறது.
No comments:
Post a Comment