Friday, August 11, 2017

மறைந்த மாண்புமிகு அம்மாவுடன் இணைந்து, கழகத்தை கட்டிக்காத்து அம்மாவுக்காகவும், கழகத்திற்காகவும் அரும்பெரும் தியாகங்கள் செய்தவர் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா - அவர் வழியில் டிடிவி தினகரன், கழக துணைப் பொதுச்செயலாளராக சிறப்பாக செயலாற்றுகிறார் : இந்த இருவரின் வழிகாட்டுதலில் கழகத்தை என்றென்றும் வலிமையுடன் கட்டிக்காப்போம் என தமிழகம் முழுவதும் உள்ள கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதி

சின்னம்மா - அவர் வழியில்
தலைப்பைச் சேருங்கள்
மறைந்த மாண்புமிகு அம்மாவுடன் இணைந்து, கழகத்தை கட்டிக்காத்து 

அம்மாவுக்காகவும், கழகத்திற்காகவும் அரும்பெரும் தியாகங்கள் செய்தவர் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா - அவர் வழியில்  தினகரன்டிடிவி, கழக துணைப் பொதுச்செயலாளராக சிறப்பாக செயலாற்றுகிறார் : இந்த இருவரின் வழிகாட்டுதலில் கழகத்தை என்றென்றும் வலிமையுடன் கட்டிக்காப்போம் என தமிழகம் முழுவதும் உள்ள கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதி

Tuesday, August 8, 2017

வி .எஸ் .நவமணி ,தேவர் இனம் திமுகாவை புறக்கணிப்பார்கள்

வி.எஸ்.நவமணி
தேவர் இனம் திமுகாவை புறக்கணிப்பார்கள்????
நான் தமிழன் எக்ஸ்ப்பிரஸ்
பிப்ரவரி 28 2001ஆம் தேதியிட்ட இதழில் வெளியாகியிருந்த ''திமுகவை தேவர் இனம் வெறுக்கிறதா ? என்கிற தலைப்பில் கட்டுரையே படித்தேன் .
அந்த கட்டுரையில் பசும்பொன் தேவர் பார்வர்டு பிளாக் இயக்கத்தை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் சந்தானமும் ,அமைசசர் தா .கிருஷ்ணனும் கூறியுள்ள விஷயங்கள் உண்மைக்கு புறம்பானவை .
மதுரை கோரிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பசும்பொன் தேவர் சிலை என்ன காரணத்திற்க்காக அந்த இடத்தில் அமைக்கபட்டது என்ற வரலாற்று உண்மை அறியாத அமைச்சர் தா .கிருஷ்ணன் தேவர் சிலை அமைக்க மூக்கையாத்தேவருக்கு கருணாநிதி ஆலோசனை வழங்கியதாக கூறியுள்ளார்.
1957 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி மதுரை தமுக்கம் திடலில் நடைப்பெற்ற ஜனநாயக காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றி விட்டு வரும்போது காங்கிரஸ் அரசால் பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்டார் பசும்பொன் தேவர் .அதன் பின்பு நவம்பர் 16 ஆம் தேதி இமானுவேல் கொலை வழக்கில் முத்துராமலிங்கத்தேவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் .மாசுமருவற்ற தன் தலைவன் மீது பொய்குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட இடத்தை நினையு கூறுகிற வகையில் தலைவர் மூக்கையாத்தேவர் அந்த இடத்தில் பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவரின் மிகப்பெரிய வெண்கல சிலையே அமைத்தார் .
''தலைக்கு ஒரு ரூபாய் கொடுங்கள் தலைவர் தேவருக்கு சிலை வடிக்க வேண்டும் '' என்று நாடெல்லாம் அலைந்து திருந்து வசூல் செய்து இந்த சிலையே செய்தார் .1969 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் அண்ணாதுரையால் திறக்கப்பட வேண்டிய அந்தசிலை அண்ணாவின் மறைவால் நடைபெறாமல் போய் விட்டது.
5 .1 .1974 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் பசும்பொன் தேவர் அவர்களின் அரசியல் தோழரும் ,பாரத ஜனாதிபதியுமான வி .வி .கிரியால் சிலை திறந்து வைக்கப்பட்டது .
அதே போன்று பிற்படுத்தப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மக்களின் சந்ததியினர் கல்லூரி கல்வி பெற வேண்டும் என்பதற்காக பசும்பொன் தேவர்
அவர்களின் பெயரால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ,திருநெல்வேலி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஆகிய இடங்களில் மூன்று கல்லூரிகளை
பி கே .மூக்கையாத்தேவர் நிறுவினார் .
மற்ற கல்லூரிகளிருந்து மாறுபட்டு ''யார் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றுள்ளார்களோ ,அவர்களுக்குத்தான் முதல் அனுமதி ''என்று அறிவித்து ,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்லூரி கல்வி தந்த சமுதாயக் காவலர் மூக்கையாத்தேவர் .இதை அன்றைய பல்வேறு நாளிதழ்களும் ''கல்கி ,ஆனந்த விகடன் ,தினமணி ,கதிர் ,நாத்திக பத்திரிக்கையான விடுதலை உள்ப்பட அணைத்து பத்திரிக்கைகளும் தலையங்கம் செய்தியாக வெளியிட்டு எழுதிப் பாராட்டின .
1968-69 கல்வி ஆண்டில் தமிழ் நாடெங்கும் பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கு அன்றய அரசு அனுமதி வழங்கியது .அப்படி அனுமதி வழங்கப்பட்ட கல்லூரிகளில் பசும்பொன் தேவர் கல்லூரியும் ஒன்று மற்ற கல்லூரிகளுக்கெல்லாம் அரசு புறம்போக்கு நிலங்களை இலவசமாக வழங்கிய அரசாங்கம் தேவர் கல்லூரிக்கு ஒரு அடி நிலம் கூட தரவில்லை. இதிலும் வழக்கம் போல வஞ்சித்தார் கருணாநிதி என்பதுதான் உண்மை .
உயர் நீதிமன்ற நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தின் தி மு க செயளார் முன்னணி வழக்கறிஞர் .அவருக்கு அரசு வழக்கறிஞராக நியமனம் செய்ய சிபாரிசு செய்தவர் பார்வர்டு பிளாக் தலைவர் மூக்கையாத்தேவர் இதில் தி மு க வழக்கறிஞர் என்பதுதான் முன்னிறுத்தப்பட்டு நியமனம் வழங்கப்பட்டதே தவிர ,முக்குலத்தோர் என்பதற்காக அல்ல .
காமராஜரை காலமெல்லாம் வசைபாடி திரிந்த திமுக, காமராஜர் மறைவுக்கு பிறகு அவருக்கு மணிமண்டபம் கட்டியது .கக்கன் ,பக்தவத்சலம்,அம்பேத்கார் இன்னும் பல்வேறு தலைவர்களுக்கெல்லாம் அரசு செலவில் மணிமண்டபங்கள் நினையு ஆலயங்கள் எழுப்பிய திமுக அரசு இதுவரை பசும்பொன் தேவருக்கு அரசுசெலவில் ஒரு செங்கலை கூட எடுத்துவைக்கவில்லை என்பதுதான் உண்மை .
முக்குலத்தோரில் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு உள்ளான பிரமலை கள்ளர் ,மறவர் சமுதாயத்திற்கு பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் சலுகைகளை வழங்கப்பட்டது .ஆனால் தற்போது திமுக அரசு மதுரை மாவட்டத்தில் வாழக் கூடிய பிரமலை கள்ளர்கள் ,ராமநாதபுரம் மாவட்டத்தில் வாழக் கூடிய மறவர்கள் மட்டுமே மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்றும் ,இதே பிரிவை சேர்ந்த மக்கள் வேறு மாவட்டத்தில் வாழ்ந்தால் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர் என்று சாதியிலும் பிரிவினை செய்து வைத்திருக்கிறது .
ஆகவே 1967 -ல் தமிழக ஒட்டு மொத்த விரோதியாக கருதப்பட்டு காங்கிரஸ் எப்படி தூக்கி எறியப்பட்டதோ அதுபோல தேவர் சமுதாய மக்களின் பொது விரோதியான திமுக அரசு முக்குல மக்களால் மட்டுமல்ல அனைத்து நடுநிலை மக்களாலும் நிராகரிக்கப்பட்டு ,வெறுத்து ஒதுக்கி தூக்கி எறியப்படும் என்பதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன் .
வி.எஸ்.நவமணி
தமிழன் எக்ஸ்பிரஸ்
14 .3 .2001
கள்ளர் முரசு

பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர்

தெய்வம் பொது
சுகம் என்பதை விரும்பும்வரை -இன்பம் என்பதை கருதும் வரை -
தொடர்ந்து வரும் !இன்பமற்ற இடத்தில் துன்பமில்லை ஆகவே மனிதனுக்கு அவனது ஆசைக்கு ஆதரவு கொடுத்து அனுபவிக்கும்படி செய்து , முடிவில் நிராசையே போதிப்பதில் கொண்டு போய் நிறுத்துகிறது.
தெய்வீகம் நிராசை அற்ற நிலைக்கு மனிதன் வருகிற பொழுது தெய்வம் அவனுக்கு தன தன்மையே கொடுக்கிறது .தெய்வத்திற்கு மனித குணத்தில் பாகுபாடு இல்லை .ஒருவன் வாழ்வதும் மற்றவன் தாழ்வதும் தெய்வத்தின் ஓர வஞ்சனை இல்லை .அவனுடைய செயல் விளைவே அவை நெருப்பு தனக்கு வேண்டியவனை சுடாமலும் ,வேண்டாதவனை சுடுவதும் இல்லை .தன்னை எவன் தொட்டாலும் அவை சுட்டே தீர்க்கும் .அதே போல தெய்வம் பொது !அது ஒரு நடுவன ஜனநாயகம் .
பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர்

ஐயா அப்துல்கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி கள்ளர்முரசு

ஐயா அப்துல்கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு
நினைவு அஞ்சலி
கள்ளர்முரசு
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின்
11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு
பிறப்பு: அக்டோபர் 15, 1931
மரணம்: ஜூலை 27, 2015
இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)
பிறப்பு:
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
இளமைப் பருவம்:
அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.
கல்லூரி வாழ்க்கை:
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
மரணம்:
அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2020
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இயேசு பிரான் போன்று தூய தொண்டனாக இருந்து தனக்கென வாழாது பிறருக்கென வாழ்ந்த பெருந்தகையாளர் பசும்பொன்தேவர்

இயேசு பிரான் போன்று தூய தொண்டனாக இருந்து தனக்கென வாழாது பிறருக்கென வாழ்ந்த பெருந்தகையாளர் பசும்பொன்தேவர்
வெள்ளையர் ஆடசியில் எதிர்த்து இந்திய நாடே வீறு கொண்டு எழுந்த நேரம்
நாட்டின் விடுதலைக்காக தென்னாட்டில் எழுந்து நின்ற தென்பாண்டி வீரர் தான் பசும்பொன் என்னும் ஊரில் பிறந்த பெரிய மனிதர்தான்முத்துராமலிங்கதேவராவார்
தென்னாட்டு வீரம் எந்த நாட்டு வீரத்துக்கும் இளைத்ததல்ல என்னும் வரலாறு காட்டும் மாபெரும் உண்மையே நீரூபிக்கும் வகையில் -சுதந்திர வேள்விக்கு சுடறேற்றிட-சுபாஷின் பாதைக்கு வலுவேற்றிட -இந்திய சுதந்திர போராட்டத்துக்கு ஏற்றம் ஊட்டிட தென் தமிழ் நாட்டில் ஓங்கி ஒலித்த முதல் குரல் தேவர்மகனின் வீரமிக்க குரல்தான் .
தேசிய இயக்கத்தின் தந்தையென்று தமிழகத்திலே சொல்லத்தகும் வகையில் சுதந்திர போரில் தோளுயர்த்திய தமிழ்நாடடின் முதல் மகன் தேவராவார் .
அவர் தம் தேனிலும் இனிய கன்னித் தமிழ்
கண்ணிதமிழ்பேசுவதிலும் பேசிய பேசின் படி நடந்துகாட்டிய தூய பொது வாழ்க்கையாலும் உணர்சசி பெற்றுவிழிப்புற்று பொங்கியெழுந்து போர்க்களம் புறப்பட்டோர் பல்லாயிரம் பேர்களாவர் .
நேதாஜி திரட்டிய இந்திய தேசிய இராணுவத்திற்கு தேவரால் ஈர்க்கப்பட்டு
சென்ற வீரர்களின் பட்டியல் எண்ணிடலங்காதாகும் .
தேவர்தம் பேசுவதினாலும் ,எழுத்தாலும் பல்லாயிரம் பேர் சுதந்திர வேள்வியில் தங்களை அர்ப்பணிக்கும் அளவுக்கு உருவாக்கி கொண்டிருந்த போதும் ,தேவர் மட்டும் தலைவராக தன்னை நடத்துக் கொள்ளவில்லை .
தொண்டருக்கு தொண்டனாக -இந்திய விடுதலை இயக்கத்தின் கடைசித்
தொண்டனாக தன்னை நடத்தி கொண்டார் .
பிறவியிலேயே பெரும் அந்தஸ்த்துடன் பிறந்தும் ,தன வாழ்க்கையே மிகவும் எளிமையாக அமைத்து கொண்டிருந்தார் .
சொத்து-சுகம்-சுற்றம் ,உறவு அனைத்தையும் துறந்து விளம்பரம் செய்து
கொள்ளாமல் ஒரு எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து காட்டிய அந்நாளைய தென்னக மகாத்மா தேவர்தான் என்றால் மிகையாகாது .
தமிழ் நாட்டில் இவ்வாறு தேசிய பாதையில் சிறந்ததோர் தொண்டராய் இருந்த அவரை பல இலட்சம் பேர் தகுதிமிக்க தலைவர் என்று கண்டு அவரை பின் தொடர்ந்தார்கள் .
இந்த தேசத்தின் நலன் எவ்வளவு பெரியது என்று நினைத்தாரோ -அவ்வளவு தூரம் தன் நலன்களை குறைத்து சிறியதாக்கி கொண்டவர் தேவர் அவர்கள் .
தேவர்ரால் ஆளாக்கப்பட்டவர்கள் -ஆசனத்தில் அமர்த்தப்பட்டவர்கள் -கடைசி காலத்தில் நன்றி மறந்து அவரின் முடிவுக்கு காரணமாக இருந்தார்கள் என்று கூடப் பேசப்படுகிறது அது உண்மையாயின் ,இயேசு பிரான் போன்று தூய தொண்டனாக இருந்து தனக்கென வாழாது பிறருக்கென வாழ்ந்த பெருந்தகையாளர் தேவரும் .
இயேசுநாதர் போன்றே தம்மால் வர்க்கப்பட்டவர்களாலே மரணத்தை பரிசாக பெற்று ஆசிரியப்படத்தக்கதல்ல இரண்டாயிரம் ஆண்டுகளாக வே இந்த உலகில் இருந்து வரும் மரபு என்பதால் நாம் மௌனமாக இருந்துவிட வேண்டியதுதான்.
அவர்தம் தேசப்பற்றிலும் ,செந்தமிழிலும்,தூய பொது தொண்டிலும் மயங்காதவரும் மதிப்பு வைத்திராதயாரும் இந்நாட்டின் தன்மானக் குடிமகனாக இருக்க முடியாது .
பிறந்த தின மலர்
ஆசிரியர் ஏ.பி .சாமி

தேவரை நினைப்பவன் கஷ்டங்களை கடந்து வெற்றி பெறுவான்

தேவரை நினைப்பவன் கஷ்டங்களை கடந்து வெற்றி பெறுவான்.
முருகா ...பழனிமுருகா ...திருமுருகா
என் தெய்வம் பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர்மனதினில் வாழும்
முருகா ...பழனிமுருகா ...திருமுருகா
என்மனம் வாழும் தெய்வம்
பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர்
கள்ளர்முரசு

சாதிக்காக வாழவில்லை... சாதித்து வாழ்ந்து தெய்வமானவர் பசும்பொன் ஐயா!

தேவர் பிறந்தது மறவர் சமூகம்,
👉தேவர் உயிரோடு இருக்கும் போதே
அவருக்கு சிலை வைத்தது கள்ளர்கள்,
👉தேவரை பற்றி முழுமையான வரலாற்றை
எழுதியது அகமுடையார்கள்,
👉தேவருக்கு பாலுட்டிய அன்னை இஸ்லாமிய சமுகம்,
👉தேவர் படித்தது மற்றும் வளர்ந்தது கிறுஸ்த்துவ சமுகம்,
👉தேவரின் சொற்பொழிவுகளை தொகுத்து
முதன்முதலில் நூலாக வெளியிட்டது
நாயக்கர் சமூகம்,
👉தேவரின் அரசியல் குரு அய்யர் சமூகத்தவர்,
தேவரை முதன்முதலில் சொற்பொழிவு
ஆற்ற வைத்தது செட்டியார் சமூகத்தவர்,
👉தேவரை பற்றி முதன்முதலில் பாடல்
எழுதியவர் நாடார் சமூகத்தவர்,
👉தேவர் இறந்தபிறகு முதன்முதலில் சிலை
வைத்தது பிள்ளைமார் சமூகம்,
👉தேவரின் வாழ்க்கை வரலாற்றை
முதன்முதலில் எழுதியவர் மீனவர் சமூகத்தவர்,
👉தேவருக்கு முதன்முதலில் பிறந்தநாள்
கொண்டாடியது பர்மா மக்கள்,
👉இம்மானுவேல் இறந்த பிறகு இம்மானுவேல்
கொலைக்கும் தேவருக்கும் துளியும்
சம்பந்தம் இல்லை என வீடுவீடாக துண்டு
பிரசுரம் கொடுத்தவர் பள்ளர் சமூகத்தவர்,
👉தேவர் திருஉருவ படத்தை சட்டசபையில்
வைக்கசொன்னவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மொக்கையன்mla
👉பாராளுமன்றத்தில் தேவர் சிலையை
நிறுவ சொன்னவர் பிராமிணர் சமூகம்
👉இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு மாநில முதல்தவரான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் தங்க கவசம் அணிவிக்க பட்டது தேவர் அய்யாவின் சிலைக்கு தான்.
வாழ்க தேவர் புகழ் !!!
வாழ்க தேவர் தந்த கொள்கைகள் !!!
சாதிக்காக வாழவில்லை...
சாதித்து வாழ்ந்து தெய்வமானவர்
பசும்பொன் ஐயா!
சாதி மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு அனைத்து சமூகத்தினராலும் போற்றப்பட்ட உத்தமர் தேவர்திருமகனார்

கல்வியின் இதயம் மூக்கையாத்தேவர்

கல்வியின் இதயம் மூக்கையாத்தேவர்
தேவர் மறைந்த பிறகு மக்கள் மதித்த ஒரே தலைவர் கல்வி தந்தை மூக்கையாத்தேவர்
தேவர் அருள் பெற்ற ஒரே தலைவர் மூக்கையாத்தேவர்
தேவர் இனத்திற்கு எண்ணற்ற பணிகளை செய்தவர் மூக்கையாத்தேவர்
பண்புடன் அரசியல் நடத்தி தேவர் வழியில் வெற்றி கண்டவர் மூக்கையாத்தேவர்
'நீதி,நேர்மை, தியாகம், தன்னலம் இல்லா உழைப்பு அத்தனைக்கும் சொந்தக்காரர்.....மூக்கையாத்தேவர்'
நாட்டின் மீது உறுதியான பற்று, மக்கள் மீது உண்மையான அக்கறை, நீதியை மதிக்கும் தன்மை, அனைவரிடமும் நேர்மை...இன்னும் ஒரு தலைவருக்கு எத்தனை நல்ல பண்புகள் தேவையோ அத்தனையையும் தன்னிடம் கொண்ட தலைவர் கல்வி தந்தை மூக்கையாத்தேவர்
உசிலம்பட்டி ,கமுதி ,திருநெல்வேலியில் மேல நீலிதநல்லூரிலும்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி அமைத்து
அனைவருக்கும் கல்வி வழங்கிய ஏழை தலைவன் மூக்கையாத்தேவரைதினம் தினம் எண்ணுங்கள் .
கள்ளர் முரசு

முத்துராமலிங்கம் என்ற பெயரே இரண்டு தத்துவங்களை வெளியிடுகிறது கலைஞர்கருணாநிதி

முத்துராமலிங்கம் என்ற பெயரே இரண்டு தத்துவங்களை வெளியிடுகிறது .
வெள்ளையனை எதிர்த்து வீரம் விளைவித்த வடுகநாதரைப் பற்றி கூறினார்கள் .அவரது முழுப்பெயர் முத்து வடுகநாதர் முத்து என்ற பெயரை கொண்டதன் மூலம் தேவர் அந்த வீரத்தை பிரதிபலிப்பவராக
இருந்தார் .
ராமலிங்கம் என்பது அமைதியே குறிக்கும் தத்துவப் பெயராக விளங்கியது .
அத்தகைய தேவர் இப்போது இல்லை .ஆனால் அவர் உருவாக்கிய வீர உணர்வு இன்றும் இருக்கிறது .
தனிப்பட்ட முறையில் அதிர்சசியடையும் இதயம் பெற்றவர் அல்ல தேவர் .
ஆகாயமே பிளந்தாலும்-மண்டலங்கள் பிளந்து மண்டையில் மோதினாலும் -கடலே கொக்கரித்து கிளம்பினாலும் அதிர்ச்சியடையாத
இதயம் படைத்தவர் தேவர் .
சோழ மண்டலத்தில் சின்னம் புலி ,பாண்டிய மண்டலத்தின் தேவர் தன
கடசி கொடியிலுள்ள சின்னமாக தேர்ந்தெடுத்ததும் புலி தான் ஆகவே சோழ மண்டலத்துக்கும் அவருக்கும் இந்த தொடர்பு உண்டு .
 மு. கலைஞர்கருணாநிதி
கள்ளர் முரசு

வி .எஸ் .நவமணி ,தேவர் இனம் திமுகாவை புறக்கணிப்பார்கள்

வி.எஸ்.நவமணி
நான் தமிழன் எக்ஸ்ப்பிரஸ்
பிப்ரவரி 28 2001ஆம் தேதியிட்ட இதழில் வெளியாகியிருந்த ''திமுகவை தேவர் இனம் வெறுக்கிறதா ? என்கிற தலைப்பில் கட்டுரையே படித்தேன் .
அந்த கட்டுரையில் பசும்பொன் தேவர் பார்வர்டு பிளாக் இயக்கத்தை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் சந்தானமும் ,அமைசசர் தா .கிருஷ்ணனும் கூறியுள்ள விஷயங்கள் உண்மைக்கு புறம்பானவை .
மதுரை கோரிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பசும்பொன் தேவர் சிலை என்ன காரணத்திற்க்காக அந்த இடத்தில் அமைக்கபட்டது என்ற வரலாற்று உண்மை அறியாத அமைச்சர் தா .கிருஷ்ணன் தேவர் சிலை அமைக்க மூக்கையாத்தேவருக்கு கருணாநிதி ஆலோசனை வழங்கியதாக கூறியுள்ளார்.
1957 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி மதுரை தமுக்கம் திடலில் நடைப்பெற்ற ஜனநாயக காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றி விட்டு வரும்போது காங்கிரஸ் அரசால் பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்டார் பசும்பொன் தேவர் .அதன் பின்பு நவம்பர் 16 ஆம் தேதி இமானுவேல் கொலை வழக்கில் முத்துராமலிங்கத்தேவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் .மாசுமருவற்ற தன் தலைவன் மீது பொய்குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட இடத்தை நினையு கூறுகிற வகையில் தலைவர் மூக்கையாத்தேவர் அந்த இடத்தில் பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவரின் மிகப்பெரிய வெண்கல சிலையே அமைத்தார் .
''தலைக்கு ஒரு ரூபாய் கொடுங்கள் தலைவர் தேவருக்கு சிலை வடிக்க வேண்டும் '' என்று நாடெல்லாம் அலைந்து திருந்து வசூல் செய்து இந்த சிலையே செய்தார் .1969 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் அண்ணாதுரையால் திறக்கப்பட வேண்டிய அந்தசிலை அண்ணாவின் மறைவால் நடைபெறாமல் போய் விட்டது.
5 .1 .1974 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் பசும்பொன் தேவர் அவர்களின் அரசியல் தோழரும் ,பாரத ஜனாதிபதியுமான வி .வி .கிரியால் சிலை திறந்து வைக்கப்பட்டது .
அதே போன்று பிற்படுத்தப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மக்களின் சந்ததியினர் கல்லூரி கல்வி பெற வேண்டும் என்பதற்காக பசும்பொன் தேவர்
அவர்களின் பெயரால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ,திருநெல்வேலி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஆகிய இடங்களில் மூன்று கல்லூரிகளை
பி கே .மூக்கையாத்தேவர் நிறுவினார் .
மற்ற கல்லூரிகளிருந்து மாறுபட்டு ''யார் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றுள்ளார்களோ ,அவர்களுக்குத்தான் முதல் அனுமதி ''என்று அறிவித்து ,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்லூரி கல்வி தந்த சமுதாயக் காவலர் மூக்கையாத்தேவர் .இதை அன்றைய பல்வேறு நாளிதழ்களும் ''கல்கி ,ஆனந்த விகடன் ,தினமணி ,கதிர் ,நாத்திக பத்திரிக்கையான விடுதலை உள்ப்பட அணைத்து பத்திரிக்கைகளும் தலையங்கம் செய்தியாக வெளியிட்டு எழுதிப் பாராட்டின .
1968-69 கல்வி ஆண்டில் தமிழ் நாடெங்கும் பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கு அன்றய அரசு அனுமதி வழங்கியது .அப்படி அனுமதி வழங்கப்பட்ட கல்லூரிகளில் பசும்பொன் தேவர் கல்லூரியும் ஒன்று மற்ற கல்லூரிகளுக்கெல்லாம் அரசு புறம்போக்கு நிலங்களை இலவசமாக வழங்கிய அரசாங்கம் தேவர் கல்லூரிக்கு ஒரு அடி நிலம் கூட தரவில்லை. இதிலும் வழக்கம் போல வஞ்சித்தார் கருணாநிதி என்பதுதான் உண்மை .
உயர் நீதிமன்ற நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தின் தி மு க செயளார் முன்னணி வழக்கறிஞர் .அவருக்கு அரசு வழக்கறிஞராக நியமனம் செய்ய சிபாரிசு செய்தவர் பார்வர்டு பிளாக் தலைவர் மூக்கையாத்தேவர் இதில் தி மு க வழக்கறிஞர் என்பதுதான் முன்னிறுத்தப்பட்டு நியமனம் வழங்கப்பட்டதே தவிர ,முக்குலத்தோர் என்பதற்காக அல்ல .
காமராஜரை காலமெல்லாம் வசைபாடி திரிந்த திமுக, காமராஜர் மறைவுக்கு பிறகு அவருக்கு மணிமண்டபம் கட்டியது .கக்கன் ,பக்தவத்சலம்,அம்பேத்கார் இன்னும் பல்வேறு தலைவர்களுக்கெல்லாம் அரசு செலவில் மணிமண்டபங்கள் நினையு ஆலயங்கள் எழுப்பிய திமுக அரசு இதுவரை பசும்பொன் தேவருக்கு அரசுசெலவில் ஒரு செங்கலை கூட எடுத்துவைக்கவில்லை என்பதுதான் உண்மை .
முக்குலத்தோரில் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு உள்ளான பிரமலை கள்ளர் ,மறவர் சமுதாயத்திற்கு பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் சலுகைகளை வழங்கப்பட்டது .ஆனால் தற்போது திமுக அரசு மதுரை மாவட்டத்தில் வாழக் கூடிய பிரமலை கள்ளர்கள் ,ராமநாதபுரம் மாவட்டத்தில் வாழக் கூடிய மறவர்கள் மட்டுமே மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்றும் ,இதே பிரிவை சேர்ந்த மக்கள் வேறு மாவட்டத்தில் வாழ்ந்தால் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர் என்று சாதியிலும் பிரிவினை செய்து வைத்திருக்கிறது .
ஆகவே 1967 -ல் தமிழக ஒட்டு மொத்த விரோதியாக கருதப்பட்டு காங்கிரஸ் எப்படி தூக்கி எறியப்பட்டதோ அதுபோல தேவர் சமுதாய மக்களின் பொது விரோதியான திமுக அரசு முக்குல மக்களால் மட்டுமல்ல அனைத்து நடுநிலை மக்களாலும் நிராகரிக்கப்பட்டு ,வெறுத்து ஒதுக்கி தூக்கி எறியப்படும் என்பதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன் .
வி.எஸ்.நவமணி
தமிழன் எக்ஸ்பிரஸ்
14 .3 .2001
கள்ளர் முரசு

Thursday, August 3, 2017

தென்பாண்டி சிங்கங்கள் பட்டமங்கலம் தொண்டைமான்கள்

தென்பாண்டி சிங்கங்கள்
பட்டமங்கலம் தொண்டைமான்கள்
பட்டமங்கல நாடு என்று அழைக்கபடும் நாடு சிவகங்கை ஜில்லா காளையார்கோவிலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் நாடு. இந்த நாட்டை ஆளும் குறுநில அதிபர்கள் தங்களை அறந்தாங்கி தொண்டை மன்னனின் வம்சத்தில் உதித்தவர்கள் என கூறுகின்றார்கள். இந்த பட்டமங்களம் திருவிளையாடல் புரானத்தில் வரும் படலமான "பட்டமங்கை காத்தருளிய ஈசர் படலம்" பெற்ற தக்ஷினாமூர்த்திக்குரிய குருஸ்தலமாகும்.
பட்டமங்கல அதிபர்களான அம்பலக்காரர்களுக்கு திருக்கோஷ்டியூர் தேர் திருவிழாக்களில் முதல் மரியாதைகள் தரப்படுகின்றன. இவர்களது வரலாறுகளில் இலங்கையை படையெடுத்து அதை வென்ற அறந்தாங்கி தொண்டையர் மன்னனின் வழிவந்ததாக இவர்களின் குல தெய்வ கோயிலான "பைரவர் கோவில்" பதிகம் கூறுகின்றது.இந்த பட்டமங்களம் தொண்டைமாண்கள் நாட்டார் கள்ளர் இனத்தை சார்ந்தவர்கள்

அரசியல் வழி காட்டிய அம்மா

அரசியல் வழி காட்டிய அம்மா

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் இன்று { 4.3.2017 }-வீல்ஸ் அறக்கட்டளை சார்பில் அரசு சீருடை பணிகளுக்கான தேர்வுகள் குறித்த இலவச ஆலோசனை மற்றும் சேவை மையத்தினை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார் உடன் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி ,அறக்கட்டளை நிறுவனர் கர்னல் சுபாஷ் ,வணிக வரித்துறை இணை ஆணையர் திருமதி ராஜி சுபாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கள்ளர் முரசு மாத இதழ் சர்பாக வாழ்த்துக்கள்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில்
இன்று { 4.3.2017 }-வீல்ஸ் அறக்கட்டளை சார்பில் அரசு சீருடை பணிகளுக்கான தேர்வுகள் குறித்த இலவச ஆலோசனை மற்றும் சேவை மையத்தினை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார் உடன் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி ,அறக்கட்டளை நிறுவனர் கர்னல் சுபாஷ் ,வணிக வரித்துறை இணை ஆணையர் திருமதி ராஜி சுபாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளர் முரசு மாத இதழ் சர்பாக
வாழ்த்துக்கள்

பிரமலைக்கள்ளர் சமூகம் மட்டுமல்ல அனைத்து கிராமத்து மாணவர்களும் அரசுப்பணியில் சேரவேண்டும் என்பதே எனது லட்சிய இலக்கு : இந்திய ராணுவ கர்னல் சுபாஷ் பெருமிதம்

பிரமலைக்கள்ளர் சமூகம் மட்டுமல்ல அனைத்து கிராமத்து மாணவர்களும் அரசுப்பணியில் சேரவேண்டும் என்பதே எனது லட்சிய இலக்கு :
இந்திய ராணுவ கர்னல் சுபாஷ் பெருமிதம்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் இவர்பிரமலைக்கள்ளர்சமூகத்தில் பிறந்தவர்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி கர்னல் அந்தஸ்தை பெற்றவர் .
இவரது மனைவி வணிக வரித்துறை இணை ஆணையர் திருமதி ராஜி சுபாஷ் இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 2014 ம் ஆண்டு வீல்ஸ் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர் .
தற்போது அறக்கட்டளையின் மூலமாக இலவச வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிற வகையில் அரசு சீருடைப்பணிகளுக்கான தேர்வுகள் குறித்த இலவச ஆலோசனை மற்றும் சேவை மையத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இதனை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர் ,
கிராமப்புற பகுதியை சார்ந்த மாணவ மாணவிகள் காவல்துறை ,ராணுவம் உள்ளிட்ட பணிகளுக்கு செல்ல தேர்வுகளுக்கு தயாராகிற வகையிலும் மற்ற அரசு தேர்வுகள் குறித்த விபரங்களை அறிவிப்பு பலகையில் இடம் பெறச் செய்தும் அவற்றிற்கு பதிவு செய்வதற்கான ஆன் லைன் வசதியும் செய்து தரப்பட்டுளள்து மேலும் பிரத்யேக பயிற்சி வகுப்புகள் துறை வல்லுநர்களால் அளிக்கப்பட உள்ளது.
பிரமலைக்கள்ளர் சமூகம் மட்டுமல்ல அனைத்து கிராமத்து மாணவர்களும் அரசுப்பணியில் சேரவேண்டும் என்பதே எனது லட்சிய இலக்கு என உரையாற்றினார்.
கள்ளர் முரசு

மகளிர் தினம் பெண்கள் உலகின் கண்கள்

மகளிர் தினம்
பெண்கள் உலகின் கண்கள்
நான் நிரந்தரமானவள் அழிவதில்லை
வீரம் மிக்க பரம்பரையில் வந்தவர்கள் நீங்கள்.
நீங்கள் தெய்வமாக விளங்குவீர் நீரே
ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் பெண்கள் தினத்தில் போற்றுவோம்
நம் நாட்டில், சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட எத்தனையோ வீரப் பெண்மணிகளை நாம் அறிவோம்!... ஆயினும் அவ்வளவாக அறியப்படாத சிலரின் வீர வரலாறுகளும் இருக்கத்தான் செய்கின்றன
அறியப்படாத வீரமங்கை மாயக்காள்
பெருங்காமநல்லுரில்ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர் கொண்டு வந்த கைரேகை சட்டத்திற்கு
எதிராக போராடி துப்பாக்கி சூட்டில் பலியான
வீரமங்கை மாயக்காள் என்ற பெண்ணை
பெண்கள் தினத்தில் போற்றுவோம்
தாய் தமிழ் ஈழப் பெண்கள் விடுதலைக்கு போராடிய போராளிகள் பதித்துச்சென்ற தியாகபெண்களை போற்றுவோம்.
ஜெயலலிதாவுக்காக சிறை சென்ற தியாகபெண்
சசிகலாவைவும் பெண்கள் தினத்தில் போற்றுவோம்.
கள்ளர் முரசு

கள்ளர் முரசு சார்பாக உலக மகளிர் தினம் வாழ்த்துக்கள்

கள்ளர் முரசு சார்பாக
உலக மகளிர் தினம் வாழ்த்துக்கள்

கள்ளர் முரசு சார்பாக உலக மகளிர் தினம் வாழ்த்துக்கள்

கள்ளர் முரசு சார்பாக
உலக மகளிர் தினம் வாழ்த்துக்கள்

தேவருக்கு சிங்கப்பூரில் கிடைத்த பெருமை

தேவருக்கு சிங்கப்பூரில் கிடைத்த பெருமை - நேதாஜி
இரண்டாவது உலக போரின் போது சிங்கப்பூருக்கு
நேதாஜி சென்றார் .இந்தியா தேசிய ராணுவத்திற்கு
ஆள் திரட்ட அவர் ஒரு கூட்டதை ஏற்ப்பாடு செய்தார் .
ஒரு சினிமா தியட்டரில் கூட்டம் நடந்தது
அதில் பல இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கலந்து கொண்டனர். சிங்கப்பூரில் பிரபல வர்த்தக செல்வாக்கு உள்ளவருமான
ஒரு தமிழரை நேதாஜிடம்அறிமுகப்படுத்தி வைத்தார்கள்
கூட்ட நிர்வாகிகள் .
நேதாஜி" இந்தியாவில் உங்களுக்கு சொந்த ஊர் எது'' என்று
அவரிடம் கேட்டார்.மதுரைப் பக்கம் என்று அவர் பதில் அளித்தார்
உடனே நேதாஜி மகிழ்ச்சி தாங்கவில்லை .அவரை கட்டி தழுவி கொண்டு
"ஓ !மதுரை !!முத்துராமலிங்க தேவர் ஊர் " என்றார் .
மறுமுறை அந்த வர்த்தகரை "மிஸ்டர் தேவர் என்று கூப்பிட ஆரம்பித்தார் .தேவர் சிறந்த வீரர் அவருடைய ஊர்காரர் .நீங்கள் இந்திய தேசிய ராணுவத்துக்கு நிச்சயம் உதவி செய்வீர்கள் என்றும் நம்புகிறேன்
என்று கூறினார் .

பெண் சிங்கம்டா சின்னம்மா

பெண் சிங்கம்டா சின்னம்மா

பகை நாடு பாகிஸ்தான் கூடச் செய்யாத பாதகத்தை நட்பு நாடு இலங்கை செய்யலாமா?

பகை நாடு பாகிஸ்தான் கூடச் செய்யாத பாதகத்தை நட்பு நாடு இலங்கை செய்யலாமா?
நேசனல் ஜியாகிரபி' தொலைக்காட்சியில் எல்லைப் பாதுகாப்புப் படைப்பணிகள் பற்றிய ஒரு நிகழ்ச்சி. ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பினார்கள். எல்லைப் பாதுகாப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது, அப்படையினரின் பணிகள் ஆகியன அந்நிகழ்ச்சியின் பொருள்கள். பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளின் எல்லையோரத்தில் பாதுகாப்புப் படையினர் செய்யும் பணிகளைப் பற்றி விளக்குகிறது அப்படம்.
பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப் புறங்களில் நெடுகவே கம்பி வேலியமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நம் எல்லையோரப் பஞ்சாபுச் சிங்குகளின் விளைநிலங்கள் பாகிஸ்தான் நாட்டுக்குள் இருக்கின்றன.
அவர்கள் சென்று வருவதற்கென்றே எல்லை வேலிகளில் வாயிற்கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லையோரத்தில் கண்காணிக்கும் படை அலுவலரிடம் தமது மண்ணகழ் பொருள்களையும் தம்மையும் காட்டிச் சோதனைக்குட்படுத்திக்கொண்டு பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள தமது விளைநிலத்திற்குள் செல்கிறார் சிங்கு. மாலையில் வேலை முடித்துத் திரும்புகிறார். ஒரு தகராறும் இல்லை.
அதாவது நம் நாட்டுக் குடிமகனார்க்குப் பாகிஸ்தானில் விளைநிலம் இருக்கிறது. இந்தியர் ஒருவர் பாகிஸ்தான் மண்ணில் கோதுமை விளைவித்து எடுத்து வரக்கூடிய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏதோ சிறப்பு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை விளங்கிக்கொள்ளலாம். நம் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான திரிபுராவைச் சுற்றி மூன்று திசைகளிலும் வங்காள தேசம்தான் இருக்கிறது. அப்படியொரு கொடுக்கு வளைவுக்குள் அம்மாநிலம் அமைந்திருக்கிறது.
திரிபுரா மாநில மக்களுக்கும் வங்காள தேசத்தினர்க்கும் இடையே எளிய போக்குவரத்து நிகழ்கிறது. இருதரப்பினரும் ஆடுமாடு விற்பனையிலிருந்து சந்தைப் பொருள்கள் விற்பதுவரை இயல்பாக மேற்கொள்கிறார்கள். இதற்கு எந்தக் கண்காணிப்பும் சட்ட வரையறையும் இருப்பதாகத் தெரியவில்லை. நாடுகடந்த மக்கள் பொருளாதாரமாக அந்நடவடிக்கை இருக்கிறது. அதுமட்டுமின்றி திரிபுரா மாநிலத்தினர்க்கும் வங்காள தேசத்தில் உள்ளவர்க்கும் இடையில் மணவினைகள் நிகழ்கின்றன. எல்லையோரத்தை அம்மக்கள் எளிய சோதனைகள் மூலம் கடக்கிறார்கள். அவர்களை அரசுகளின் எந்தக் கட்டுப்பாடுகளும் தடுத்து நிறுத்தமாட்டா. அம்மக்களின் பண்பாடு, வாழ்க்கை, பொருளாதாரம் ஆகியவற்றுக்கு இடையூறு நேராதபடி அரசுகள் இணக்கப் போக்கினை மேற்கொண்டிருக்கின்றன. அப்படியெல்லாம் சட்டம்போட்டுத் தடுக்கக்கூடிய நிலையில் அம்மக்களும் இல்லை.
பாகிஸ்தானையொட்டிய எல்லைப்புறத்தில் கம்பி வேலிகள் இருக்கின்றன என்று சொன்னேன் இல்லையா? அதற்கு மாறாக, வங்காள தேசத்தையொட்டிய மேற்கு வங்காள மாநிலத்து எல்லையோரங்களில் எவ்வித வேலியமைப்பும் இல்லை. வெறும் எல்லைக்கற்கள்தாம் நடப்பட்டிருக்கின்றன. அதனால் இந்திய எல்லைக்குள் வங்காள தேசத்தினர் எப்போதும் மிக எளிதாக வந்து செல்கிறார்கள் என்றே தெரிகிறது. அதையும் மீறி எல்லை கடக்கும் வங்காளதேசத்தவருள் ஓரிருவர் நம் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிக்கொள்கிறார். அவர்களை நம்மவர்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் ஆளாக்காமல் வெறுமனே பிடித்து மாப்பிள்ளையைப்போல் அமர வைத்துக்கொள்கிறார்கள். பிறகு, வாரமொருமுறையோ மாதம் ஒருமுறையோ தெரியவில்லை, இருதேசத்து எல்லைப் பாதுகாப்புப் படையினரும் 'கொடியணிவகுப்பு' நடத்துகிறார்கள். அப்போது இருதரப்பினராலும் அவ்வாறு எல்லை கடக்கையில் பிடிக்கப்பட்ட குடிமக்கள் அந்தந்த நாட்டுப் படையினரிடம் முறையாக ஒப்படைக்கப்படுகிறார்கள். அவ்விழா முடிவில் இருதரப்புப் படை அதிகாரிகளும் கைகுலுக்கிக்கொள்கிறார்கள். நம் நாடு பிற அண்டை நாட்டினரின் எல்லை தாண்டுதலை இவ்வாறு அன்பாக அரவணைத்து வைத்திருக்கிறது. அவ்வாறே நம்மவரின் தாண்டுதல்களும் அவர்களால் அவ்வாறே முறைமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்ற அண்டை நாடுதான் இலங்கையும். இத்தனைக்கும் பாகிஸ்தான் நமது நட்பு நாடு என்றுகூடச் சொல்வதற்கில்லை. இலங்கை என்னும் நாடு இந்தியாவின் பல்வேறு உதவிகளைப் பெறுகின்ற நாடு. அந்நாடு புவியியல் அடிப்படையில் இந்தியாவைப் பேரளவு சார்ந்திருக்கிறது. கடலுக்குள் வழிதவறியோ, பிழைப்பின் பொருட்டு மீன்பாடு வேண்டியோ செல்லும் நம்மக்களை 'எல்லை தாண்டுகிறார்கள்' என்ற பொய்யைச் சொல்லிச் சுட்டுக் கொன்றபடி இருக்கிறது. இலங்க மீனவர்க்கு எல்லை தாண்ட வேண்டிய தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்குக் கிழக்கே வரம்பற்ற கடல் இருக்கிறது. ஆனால், இந்திய மீனவர்களின் வழியில்தான் கடலுக்குள்ளே குறுக்காக இலங்கைத் தீவு படுத்திருக்கிறது. எல்லை தாண்டியவர்களைப் பிடித்துச் சென்று கொடியணிவகுப்பு நடத்தி ஒப்படைக்க வேண்டியதுதானே ? அதை ஏன் இவர்கள் செய்வதில்லை என்பது விளங்கவில்லை. மிக எளிதான அரசு நடைமுறை இது. அதைச் செய்யாமல் மதிப்பான உயிர்களைத் தின்னக் கொடுக்கின்ற நிலையில் இன்னும் நாம் இருப்பது ஏன்?

ஆதித்த கரிகாலன்: ஆட்சி காலம்: 957-969

ஆதித்த கரிகாலன்:
ஆட்சி காலம்: 957-969
ஆதித்த கரிகாலன் இரண்டாம் பராந்தக சோழனின் மூத்த மகன் ஆவார்.
இவர் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு சோழ சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்து வந்தார்.
பிற பெயர்: பாண்டியன் தலைகொண்டவன், வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன்
ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான
முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான். ஆதித்த கரிகாலனுக்கு கி.பி. 966ல் சுந்தரசோழன் இளவரசு பட்டம் கட்டுகிறான். ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே
சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில்
சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த வீரபாண்டியனுடன் போரிட்டான். புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. விசயாலய சோழன் காலத்தில் தொடங்கி ஐந்து தலைமுறைகளுக்குப்
பினனால் சோழ நாட்டிற்கு ஓயாத தொல்லையாக இருந்த இரு பெரும் அரசுகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது இவன் காலத்தில்தான். ஆதித்த கரிகாலன் தன் அந்தஸ்துக்கு போதவில்லை என கருதி காஞ்சியில் பல்லவச் சக்கரவர்திகள் பல தலைமுறையாக வாழ்ந்து ராஜ்யபாரம் புரிந்த அரண்மனைகளை விட்டு பொன்னிழைத்த அரண்மனையை கட்டி வைடூரியங்களையும் இரத்தினங்களையும் சுவர்களில் பதிக்கிறான். தன்னுடைய அருமந்த புத்திரன் ஆதித்த கரிகாலன் இறந்த சோகத்தில் சுந்தரசோழன் தன் மகன் கட்டிய காஞ்சி பொன்மாளிகையில் தனித்திருந்து உயிர் துறக்கிறான். இதனால் சுந்தரசோழனை பொன்மாளிகைத் துஞ்சின தேவர் இன கல்வெட்டு விளம்புகிறது.
ஆதித்த கரிகாலன் கொலை
தமிழக வரலாற்றில் ஒரு அழியாத கறையை அளித்துச் சென்றுவிட்ட நிகழ்வு ஆதித்த கரிகாலன் கொலை. அவன் கொலை செய்யப்பட்டானா, தற்கொலையா, இயற்கையான மரணமா? என்ற கேள்விகள் எழுகின்றன. தற்கொலை செய்துகொள்ள வேண்டிய சூழலும், இயற்கையான மரணம் ஏற்படக்கூடிய வயதும் காரணமும் இல்லாத நிலையில் கொலை செய்யப்பட்டான் என்றே முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. அரச குடும்பத்தை நோக்குங்கால், சுந்தர சோழர் நேரடியாக போர்களில் பங்கேற்கவில்லை. அருள்மொழிவர்மன் இளைஞன். மதுராந்தகனான உத்தமனும் போர்களில் பங்கெடுக்க வில்லை. வீரத்தைக் காட்டி எதிரிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஒரே அரச வாரிசு ஆதித்த கரிகாலன் மட்டுமே. வீர பாண்டியனைக் கொன்றதுடன் ராஷ்டிர கூடர்களைத் தடுத்து நிறுத்தும் தன்மையும் பெற்றிருந்தான். மேலும் யுவராஜனாக பட்டமேற்றுக்கொண்டதால் சுந்தர சோழனுக்குப் பிறகு அவன் ஆட்சியில் எதிரிகள் நிலை மேலும் மோசமாகலாம் என்ற நிலை இருந்தது. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது சோழர்களின் வளர்ச்சியை விரும்பாதவர்களுக்கு முதல் குறி ஆதித்த கரிகாலன் தான் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும். ஆதித்த கரிகாலனுக்கு சோழ மன்னனாக முடிசூட்டிக் கொள்வதில் ஆர்வமில்லை. அதனால் தன் தம்பி அருள்மொழிவர்மனை ஈழத்திலிருந்து அழைத்து வந்து சோழ மன்னனாக அமரச் செய்துவிட்டு, தான் பெரும்படை திரட்டி நாடுகள் பலவும் கைப்பற்றி உலகெங்கும் புலிக் கொடியைப் பறக்கச் செய்ய வேண்டும் என்று ஆசை கொள்கிறான். மறுபுறமோ சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூடும் என்பது புலனாகிறது.
மேலும் சோழ மன்னர்கள் யாவருமே திருக்கோயில்களுக்குப் பொன்வேய்ந்திருக்கிறார்களே தவிர தமக்கென்று யாரும் பொன்மாளிகை கட்டிக் கொண்டதில்லை. முதல் பராந்தகன் தில்லைத் திருக்கோயிலுக்குப் பொன்வேய்ந்தான். முதலாம் இராசராசன் த்ன்னுடைய 29ம் ஆட்சியாண்டில் போர் வெற்றிகள் மூலம் கிடைத்த 41,500 கழஞ்சுப் பொன்னையும் 50,650 கழஞ்சு வெள்ளியையும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு அளித்தான்.இரண்டாம் குலோத்துங்கன் தன்னுடைய முடிசூட்டு விழாவையே தில்லைத் திருக்கோயிலிலேயே நடத்தினான். அனால் ஆதித்த கரிகாலனோ தனக்கு பொன்னிழைத்த அரண்மனையை காஞ்சியில் கட்டியது அரச குலத்தில் புளுதியை கிளப்பியது. ஆதித்த கரிகாலனின் செய்கை பின்னால் வரும் மன்னர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்து விட்டால் என்ன செய்வது என்று அரச அதிகாரிகள் திகைத்தனர். இதுவும் ஆதித்த கரிகாலன் கொலைக்கு காரனமாகஇருக்கலாம். சிதம்பரம் தாலுகா காட்டுமன்னார் கோயிலுக்கு அருகிலுள்ள உடையார்குடியில் காணப்படும் கல்வெட்டு ஒன்று கொலை செய்தவர்களின் பெயர்களை பட்டியல் இடுகிறது.
1. சோமன்
2. ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன்
3. பரமேசுவரனான இருமுடிச்சோழன் பிரமாதிராஜன்
4. ரேவதாசக் கிரமவிந்தன்.
இவர்கள் அனைவரும் சகோதரர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள், இக்கொலையின் மூலம் ஆட்சியும், சமய கோட்பாடுகளும் குலையுமே என கருதி இக்குற்றங்கள் மறைக்கப்பட்டு வெளிச்சத்திற்கு வரவில்லை.இக்கொலை சுந்தரசோழன் மற்றும் இராசராசசோழனுக்கும் தெரியாமல் நடந்திருக்கும் என்றும் இதனால் தான் உத்தமசோழன் முடி தரித்தான் என்றும் அறியப்படுகிறது.இதன் பின் அரியனை ஏறிய உத்தமசோழன் இக் கொலையாளிகளை தண்டிக்கவில்லை. இராசராசன் அரியனை ஏறிய இரண்டாம் ஆண்டில் உயிருடன் இருந்த இருவர் மட்டும் தண்டிக்கப்பட்டதாக உடையார்குடி கல்வெட்டால் அறியமுடிகிறது. மேலும் கொலையாளிகள் யார், கொலைக்கான காரணங்கள் எல்லாம் பலவடிவத்திலும்,வியுகத்திலும் இருப்பதினால் அதற்கென்றே ஒரு தனி பதிவு தொகுத்து வழங்கவேண்டும்.