Thursday, August 3, 2017

பைந்தமிழ்க் திருக்குறள் காவலர்!’ மன்னர் பாண்டித்துரைத் தேவர்

பைந்தமிழ்க் திருக்குறள் காவலர்!’
மன்னர் பாண்டித்துரைத் தேவர்
மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அமர்ந்து தமிழ் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது, ‘ஸ்காட்’ என்னும் ஆங்கிலேயப் பாதிரியார் அங்கே வந்தார். வந்த பாதிரியார், “திருக்குறளில் பல இடங்களில் எதுகையும், மோனையும் சரியாக அமையவில்லை. எனவே, திருக்குறளைத் திருத்தி, எதுகை, மோனை அனைத்துக் குறள்களிலும் இடம் பெறுமாறு எழுதி ஒரு நூல் அச்சிட்டுள்ளேன்” என மகிழ்ச்சிப் பொங்கிடக் கூறியதுடன், நூலின் ஒரு பிரதியையும் பாண்டித்துரைத் தேவரிடம் கொடுத்தார்.
திருக்குறளைத் திருத்தி எழுதி அச்சாக்கியிருக்கும் செய்தியைக் கேட்டதுமே, அருகிலிருந்து
பாண்டித்துரைத் தேவருக்கு
கண்கள் கோபத்தினால் சிவந்தன; உள்ளம் கொதிப்படைந்தது.
பாண்டித்துரைத் தேவர், அந்தப் பாதிரியாரை, அச்சிடப்பட்ட நூல்களுடன், அவரது கையெழுத்துப் பிரதியையும் கொண்டு வருமாறு’ வேண்டினார். மேலும் அதற்குரிய தொகையை அளித்து விடுவதாகவும் கூறினார்.
அந்த ஆங்கிலேயப் பாதிரியார் அகமகிழ்ந்து, உடனே சென்று அச்சிட்ட அனைத்து நூல்களையும், தமது கையெழுத்துப் பிரதியையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, பாண்டித்துரைத் தேவரிடமிருந்து ஒரு கணிசமான தொகையையும் பெற்றுச் சென்று விட்டார்.
பாண்டித்துரைத் தேவர், சும்மா இருப்பாரா? பிழையாக அச்சிடப்பட்டிருந்த திருக்குறள் நூல்களைப் பெற்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பின்புறம் காலியாக உள்ள இடத்தில் தீயிட்டுச் கொளுத்தி அதன் சாம்பலைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டார்.
திருக்குறளைப் புரிந்து கொள்ளாத ஆங்கிலப் பாதிரியாரின் அறிவீனத்தையும், மண்டைக் கொழுப்பையும் மண்ணில் புதைத்தவர் மன்னர் பாண்டித்துரைத் தேவர்! இது கற்பனையல்ல, வரலாற்று உண்மை!
கள்ளர் முரசு

No comments:

Post a Comment