Thursday, August 3, 2017

பெருங்காமநல்லுர் துப்பாக்கிச் சூடு:

பெருங்காமநல்லுர் துப்பாக்கிச் சூடு:
வெள்ளையன் பல தமிழ் சாதிகளை#குற்றபரம்பரை சட்டத்திலே கொண்டுவந்தபோது எங்களை குற்றப்பரம்பரை என்று சொல்ல நீ யார் என்று சொல்லி வெள்ளையனை எதிர்த்து போரிட்ட முதல் சாதி #பிரமலைக்கள்ளர்கள்
#பிரமலைக்கள்ளர் மக்கள் வெள்ளையனை எதிர்த்து போரிட்டபோது வெள்ளையன் தன் நவீன ஆயுதத்தால் மாயக்காள் என்கிர ஒரு பெண் உட்பட 20க்கும் மேற்ப்பட்டோர் சுட்டு கொள்ளப்பட்டன அவர்கள் அன்று சிந்திய இரத்தம் பிரிட்டிஸ் பாராளுமன்றம் வரை ஒழித்ததன் விழைவாழ் இந்தியா முழுவதும் போடப்பட்ட குற்றப்பரம்பரை எனும் கொற்றபரம்பரை சட்டம் ஒழிக்கப்பட்டன
பெருங்காமநல்லுரில் பலியானவர்கள் தன்மானம் காத்த மாவீரர்கள். ஒரு கொள்கைக்காக நேருக்கு நேர் இறுதிவரை உறுதியாகப் போராடி வீர மரணத்தைத் தழுவியவர்கள். இம்மாவீரர்கட்கு பெருங்காமநல்லுரில் நடுகல் நட்டு ஆண்டு தோறும் வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின், "குற்றப் பரம்பரைச் சட்டம்' இறுதியாக 5.6.1947-இல் ரத்தானது.
வீரர்களாக இருங்கள் என்று முழங்கினார் சுவாமி விவேகாநந்தர். அநீதி எந்தத் திசையில் இருந்து வந்தாலும் அதை எதிர்க்கும் துணிவும், திறனும், இன்றைய இளைஞர்களிடம் வேர் ஊன்றினால், அதுவே பெருங்காமநல்லுர் வீரத் தியாகிகட்கு நாம் செலுத்தும் உண்மையான வீர வணக்கமாக அமையும்.
அவர்கள் சிந்திய இரத்தத்தால் இன்று நாம் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம் என்றால் அது மிகையாகாது

No comments:

Post a Comment