Thursday, August 3, 2017

தனித் தமிழர் சேனைத் தலைவர் க.நகைமுகன்

தனித் தமிழர் சேனைத் தலைவர் க.நகைமுகன்
சிவகங்கை மாவட்டம், திருப்பத் தூர் அருகே ஆ.தெக்கூரை சேர்ந்த நகைமுகன் சிவகங்கை திராவிட இயக்கத்தைச் சேர்ந்த ராமச்சந்திர னாரின் பேரன்களில் ஒருவர்.
அகில இந்திய தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினர் அமைப்பின் பொறுப் பாளராக இருந்தார். அவரது சேவையை பாராட்டி பஞ்சாப்பை சேர்ந்த தீவிரவாத தலைவர் சிம்ரஞ்சித் சிங் மான் வீரவாள் பரிசாக வழங்கியது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. விடு தலைப்புலிகளுடன் தொடர்பிருப்ப தாகக் கூறி, 1990-ல் திமுக ஆட்சி யின்போது நகைமுகனை போலீ ஸார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
பத்திரிகையாளரான இவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். சிவசேனா தலைவர் பால்தாக்கரேவை விடுதலைப் புலி களுக்கு ஆதரவாக கருத்து தெரி விக்கவும் காரணமாக இருந்தவர். அவ்வப்போது சிறைத் தண்டனை பெற்றவர்.
'தமிழக தலைமை அகமுடையார் சங்கம்' ஒருங்கிணைத்த அனைத்து பொது மேடைகளில் அவர் உடல்நிலையை கூட கவனத்தில் கொள்ளாமல் உணர்ச்சிமிகு பேச்சுகளால் அலங்கரித்தார். அவரது பேச்சை கேட்பதற்காகவே பல மணிநேரம் காத்திருந்திருக்கிறோம் என்பதே பெருமையான விசயம். அவரது கண்ணியமும், சொல்வன்மையும், அறிவார்ந்த சிந்தனைகளும், அடுத்தக்கட்ட இளம்தலைமுறையினருக்கு கண்டிப்பாக தேவையாக இருந்தது.
85 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையில் ஒருங்கிணைத்த அகமுடையார் மாநாட்டுக்கு பலவித எதிர்ப்பு வந்து, மாநாட்டு பந்தலுக்கு அனுமதிக்காத காவல்துறையின் அடக்குமுறையை தனி ஒருவனாக நின்று அனுமதி பெற்றுத்தந்த அப்படிப்பட்ட செயல்தலைவர்
தனித் தமிழர் சேனை'யின் நிறுவனத்தலைவரும், தமிழ்தேசிய சிந்தனையாளரும், ஐயா அரப்பா தமிழன் அவர்களின் உடன்பிறந்தவரும், 'சுயமரியாதைச் சுடரொளி' சிவகங்கை இராமசந்திரன் சேர்வை அவர்களின் பெயரனுமான ஐயா நகைமுகன்
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டி ருந்த நகைமுகன் (15.3.2016 )\அவர் காலமானார். அவருக்கு வயது 66.
இவருக்கு மனைவி வான்மதி, செல்லரோஜா, மதிவதனி என 2 மகள்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment