இன்று உலக சிட்டுக்குருவி தினம்: பாதுகாக்ககும் முயற்சியில் அல்லேபுரம் கிராமத்தினர்
உலக சிட்டுக்குருவி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்க தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அல்லேபுரம் கிராமத்தினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
உலக சிட்டுக்குருவி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்க தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அல்லேபுரம் கிராமத்தினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
சின்னஞ்சிறிய உடல் அமைப்பைக் கொண்ட சிட்டுக்குருவிகளின் கீச் கீச் சப்தங்களும், இரையை உண்ணும் எழில் கொஞ்சும் காட்சிகளும் நாளுக்கு நாள் மறைந்து கொண்டே வருகின்றன. செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளாலும், வயல்வெளிகளில் இடபடும் ரசாயண உரங்களாலும்,சிட்டுக்குருவி இனங்கள் அழிந்து வருவதாக கூறுகின்றனர் பறவை ஆர்வலர்கள். இப்படி அழிவை நோக்கி செல்லும் அந்த இனத்தை மீட்டெடுக்கும் பொருட்டு ஆண்டு தோறும் மார்ச் 20ம் தேதியாகிய இன்று சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மனிதர்களோடு ஒன்றினைந்து வாழக்கூடிய பண்புகளை கொண்ட பறவைஇனம் தான் இந்த சிட்டுக்குருவிஇனம். காலத்தின் பரிணாம மாற்றங்களுக்கேற்ப மனிதர்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சுழன்று கொண்டிருக்கும் வேளையில், தர்மபுரி மாவட்டம் அலேபுரம் மற்றும் மல்லாபுரம் ஆகிய கிராம மக்கள் சிட்டுக்குருவி இனங்களை பேணி பாதுகாத்து வருகின்றனர். அருகி வரும் சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்க அரசு உரிய சுற்றுச்சூழல் வசதியை ஏற்படுத்தாவிட்டால், பிற்காலத்தில் வரும் சந்ததியினருக்கு சிட்டுக்குருவி என்ற ஒரு இனம் இருந்த சுவடுகளே தெரியாமல் போய் விடும் என்கின்றனர் அலேபுரம் கிராமமக்கள்.
சிட்டுக்குருவி இனங்களை அழிவிலிருந்து மீட்டெடுக்கவேண்டும் என்றால்,செல்போன் கோபுரங்களை அமைப்பதற்கு அரசு உரிய விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும், விளைநிலங்களில் ரசாயன உர பயன்பாட்டை குறைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட சில விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர் பறவை ஆர்வலர்கள். அருகி வரும் அழகிய சிட்டுக்குருவிகளைக் காப்பது நம்அனைவரின் கடமை என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்
No comments:
Post a Comment