வி.எஸ்.நவமணி
தேவர் இனம் திமுகாவை புறக்கணிப்பார்கள்????
தேவர் இனம் திமுகாவை புறக்கணிப்பார்கள்????
நான் தமிழன் எக்ஸ்ப்பிரஸ்
பிப்ரவரி 28 2001ஆம் தேதியிட்ட இதழில் வெளியாகியிருந்த ''திமுகவை தேவர் இனம் வெறுக்கிறதா ? என்கிற தலைப்பில் கட்டுரையே படித்தேன் .
பிப்ரவரி 28 2001ஆம் தேதியிட்ட இதழில் வெளியாகியிருந்த ''திமுகவை தேவர் இனம் வெறுக்கிறதா ? என்கிற தலைப்பில் கட்டுரையே படித்தேன் .
அந்த கட்டுரையில் பசும்பொன் தேவர் பார்வர்டு பிளாக் இயக்கத்தை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் சந்தானமும் ,அமைசசர் தா .கிருஷ்ணனும் கூறியுள்ள விஷயங்கள் உண்மைக்கு புறம்பானவை .
மதுரை கோரிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பசும்பொன் தேவர் சிலை என்ன காரணத்திற்க்காக அந்த இடத்தில் அமைக்கபட்டது என்ற வரலாற்று உண்மை அறியாத அமைச்சர் தா .கிருஷ்ணன் தேவர் சிலை அமைக்க மூக்கையாத்தேவருக்கு கருணாநிதி ஆலோசனை வழங்கியதாக கூறியுள்ளார்.
மதுரை கோரிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பசும்பொன் தேவர் சிலை என்ன காரணத்திற்க்காக அந்த இடத்தில் அமைக்கபட்டது என்ற வரலாற்று உண்மை அறியாத அமைச்சர் தா .கிருஷ்ணன் தேவர் சிலை அமைக்க மூக்கையாத்தேவருக்கு கருணாநிதி ஆலோசனை வழங்கியதாக கூறியுள்ளார்.
1957 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி மதுரை தமுக்கம் திடலில் நடைப்பெற்ற ஜனநாயக காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றி விட்டு வரும்போது காங்கிரஸ் அரசால் பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்டார் பசும்பொன் தேவர் .அதன் பின்பு நவம்பர் 16 ஆம் தேதி இமானுவேல் கொலை வழக்கில் முத்துராமலிங்கத்தேவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் .மாசுமருவற்ற தன் தலைவன் மீது பொய்குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட இடத்தை நினையு கூறுகிற வகையில் தலைவர் மூக்கையாத்தேவர் அந்த இடத்தில் பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவரின் மிகப்பெரிய வெண்கல சிலையே அமைத்தார் .
முத்துராமலிங்கத்தேவரின் மிகப்பெரிய வெண்கல சிலையே அமைத்தார் .
''தலைக்கு ஒரு ரூபாய் கொடுங்கள் தலைவர் தேவருக்கு சிலை வடிக்க வேண்டும் '' என்று நாடெல்லாம் அலைந்து திருந்து வசூல் செய்து இந்த சிலையே செய்தார் .1969 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் அண்ணாதுரையால் திறக்கப்பட வேண்டிய அந்தசிலை அண்ணாவின் மறைவால் நடைபெறாமல் போய் விட்டது.
5 .1 .1974 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் பசும்பொன் தேவர் அவர்களின் அரசியல் தோழரும் ,பாரத ஜனாதிபதியுமான வி .வி .கிரியால் சிலை திறந்து வைக்கப்பட்டது .
அதே போன்று பிற்படுத்தப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மக்களின் சந்ததியினர் கல்லூரி கல்வி பெற வேண்டும் என்பதற்காக பசும்பொன் தேவர்
அவர்களின் பெயரால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ,திருநெல்வேலி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஆகிய இடங்களில் மூன்று கல்லூரிகளை
பி கே .மூக்கையாத்தேவர் நிறுவினார் .
அவர்களின் பெயரால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ,திருநெல்வேலி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஆகிய இடங்களில் மூன்று கல்லூரிகளை
பி கே .மூக்கையாத்தேவர் நிறுவினார் .
மற்ற கல்லூரிகளிருந்து மாறுபட்டு ''யார் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றுள்ளார்களோ ,அவர்களுக்குத்தான் முதல் அனுமதி ''என்று அறிவித்து ,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்லூரி கல்வி தந்த சமுதாயக் காவலர் மூக்கையாத்தேவர் .இதை அன்றைய பல்வேறு நாளிதழ்களும் ''கல்கி ,ஆனந்த விகடன் ,தினமணி ,கதிர் ,நாத்திக பத்திரிக்கையான விடுதலை உள்ப்பட அணைத்து பத்திரிக்கைகளும் தலையங்கம் செய்தியாக வெளியிட்டு எழுதிப் பாராட்டின .
1968-69 கல்வி ஆண்டில் தமிழ் நாடெங்கும் பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கு அன்றய அரசு அனுமதி வழங்கியது .அப்படி அனுமதி வழங்கப்பட்ட கல்லூரிகளில் பசும்பொன் தேவர் கல்லூரியும் ஒன்று மற்ற கல்லூரிகளுக்கெல்லாம் அரசு புறம்போக்கு நிலங்களை இலவசமாக வழங்கிய அரசாங்கம் தேவர் கல்லூரிக்கு ஒரு அடி நிலம் கூட தரவில்லை. இதிலும் வழக்கம் போல வஞ்சித்தார் கருணாநிதி என்பதுதான் உண்மை .
உயர் நீதிமன்ற நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தின் தி மு க செயளார் முன்னணி வழக்கறிஞர் .அவருக்கு அரசு வழக்கறிஞராக நியமனம் செய்ய சிபாரிசு செய்தவர் பார்வர்டு பிளாக் தலைவர் மூக்கையாத்தேவர் இதில் தி மு க வழக்கறிஞர் என்பதுதான் முன்னிறுத்தப்பட்டு நியமனம் வழங்கப்பட்டதே தவிர ,முக்குலத்தோர் என்பதற்காக அல்ல .
காமராஜரை காலமெல்லாம் வசைபாடி திரிந்த திமுக, காமராஜர் மறைவுக்கு பிறகு அவருக்கு மணிமண்டபம் கட்டியது .கக்கன் ,பக்தவத்சலம்,அம்பேத்கார் இன்னும் பல்வேறு தலைவர்களுக்கெல்லாம் அரசு செலவில் மணிமண்டபங்கள் நினையு ஆலயங்கள் எழுப்பிய திமுக அரசு இதுவரை பசும்பொன் தேவருக்கு அரசுசெலவில் ஒரு செங்கலை கூட எடுத்துவைக்கவில்லை என்பதுதான் உண்மை .
முக்குலத்தோரில் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு உள்ளான பிரமலை கள்ளர் ,மறவர் சமுதாயத்திற்கு பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் சலுகைகளை வழங்கப்பட்டது .ஆனால் தற்போது திமுக அரசு மதுரை மாவட்டத்தில் வாழக் கூடிய பிரமலை கள்ளர்கள் ,ராமநாதபுரம் மாவட்டத்தில் வாழக் கூடிய மறவர்கள் மட்டுமே மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்றும் ,இதே பிரிவை சேர்ந்த மக்கள் வேறு மாவட்டத்தில் வாழ்ந்தால் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர் என்று சாதியிலும் பிரிவினை செய்து வைத்திருக்கிறது .
ஆகவே 1967 -ல் தமிழக ஒட்டு மொத்த விரோதியாக கருதப்பட்டு காங்கிரஸ் எப்படி தூக்கி எறியப்பட்டதோ அதுபோல தேவர் சமுதாய மக்களின் பொது விரோதியான திமுக அரசு முக்குல மக்களால் மட்டுமல்ல அனைத்து நடுநிலை மக்களாலும் நிராகரிக்கப்பட்டு ,வெறுத்து ஒதுக்கி தூக்கி எறியப்படும் என்பதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன் .
வி.எஸ்.நவமணி
தமிழன் எக்ஸ்பிரஸ்
14 .3 .2001
14 .3 .2001
கள்ளர் முரசு
No comments:
Post a Comment