Monday, February 29, 2016

இது எனது கடமை''ஆச்சி மனோரமா



பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமான் பெயரில் உசிலம்பட்டியில் கல்லூரி நிறுவப்பட்ட சமயத்தில்
தலைவர் மூக்கையாத் தேவர்களின் வேண்டுகோளை
ஏற்று உசிலம்பட்டி சென்று நாடகம் 
நடத்தி கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி சேர்த்து கொடுத்தவர் மனோரமா அவர்கள் தலைவர் மூக்கையாத் தேவர் எவ்வளவோ கூறியும், சம்பளம் வாங்க மறுத்ததுடன், ''இது எனது கடமை''ஆச்சி மனோரமா
எனக் கூறி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமானின்
திரு உருவத்தை வணங்கி ,திரு நீற்றையும் எலுமிச்சம் பழத்தையும் பிரசாதமாக எடுத்துக் கொண்டு திருப்தியுடன் சென்றிட்ட பெருந்தகை ஆச்சி மனோரமா !
அவரை வணங்கிறோம்!
அவர் புகழ் ஓங்கிட போற்றுகிறோம்.கள்ளர் முரசு

Saturday, February 27, 2016

இந்திய தேசத்தின் தந்தைநேதாஜி தெய்வத் திருமகன் தேவர்

நேதாஜி



இளைஞர்களிடம், ‘உங்களுடைய ரத்தத்தை என்னிடம் தாருங்கள். நான் உங்களுக்கு விடுதலை வாங்கித் தருவேன்’’ என்று விடுதலைக்கு ரத்தத்தை விலைபேசி ஆண்களையும் பெண்களையும் திரட்டி, ஒரு ராணுவத்தை உருவாக்கி, ஒன்பது நாடுகளின் ஆதரவினைப் பெற்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய வீரத்திருமகன் நேதாஜி. நேதாஜி என்றால் இந்தியில் “மரியாதைக்குரிய தலைவர்“ என்று பொருள்.
இந்திய தேசத்தின் தந்தை என்ற பெயர் 
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை மட்டுமே குறிக்கும்.
தேவர்” என்ற பெயர் தெய்வத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை மட்டுமே குறிக்கும்.
தமிழ்நாட்டில் பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவரை அறியாதார்
யாருமிருக்க முடியாது. அவரது தேசீயமும்தெய்வீகமும் நன்றாகவே தெரிந்திருக்கும்.


இளைஞர்கள் மத்தியில் நேதாஜி, தேவர், புகழ் ஒங்க ஆரம்பித்து விட்டது

n.suresh


இனிய இரவு வணக்கம் கள்ளர் முரசு


குற்றப்பரம்பரை சட்டம்


1937 பொது த்தேர்தலில் வெற்றி பெற்றால் குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்குவதாக வாக்குக்கொடுத்திருந்தது காங்கிரஸ் கட்சி ஆனால் தேவரின் குரலுக்கு அதன் பிறகும் செவி சாய்க்கவில்லை.ஜூலை 27 1938ல் அருப்புக்கோட்டைக்கூட்டத்தில் பேசிய தேவரரசு அலுவலகங்களும் காவல் துறையும் தேசத்துரோகிகளாக செயல் படுகின்றன என்றார்."வீரம் மிக்க பரம்பரையில் வந்தவர்கள் நீங்கள்.நீங்கள் என்ன கோழைகளா?"எனப்பேசினார்.அவர் மீது வழக்குப்போடப்பட்டது, அதன் பிறகு திரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் இது பற்றிய விவாதம் நடந்து அச்சட்டத்தை நீக்க தீர்மானம் போடப்பட்டது. அதன் பின் ராஜாஜி மதுரை வந்த போது கம்பத்திலிருந்து பெரும் திரளாக மக்களை சேர்த்து ஊர்வலமாக வந்து அச்சட்டதை நீக்க்கோரி மனு கொடு.த்தார்.ஊர்வலத்தில் கூட்டம் 2 மைல் நீளத்திற்கு இருந்தது.அப்போது தான் தேவரின் செல்வாக்கு அனைவருக்கும் புரிந்தது.இருந்தாலும் ராஜாஜி அப்போது ஒத்துக்கொள்ளவில்லை. அரசு அதிகாரிகள் கள்ளர்கள் எவ்வளவு முரடர்கள் என கவர்னருக்கு தெரியப்படுத்த உசிலம்பட்டி அருகில் சிந்துப்பட்டி கிராமத்தில் ஒரு ஜல்லிக்கட்டு விழாவை ஏற்பாடு செய்தார்.கள்ளர்கள் காளைகளை அடக்குவதைப்பார்த்து அவர்கள் முரடர்கள் அவர்களுக்கு இந்த சட்டம் சரிதான் என நினைத்து அதை நீக்க உத்தரவு இடமாட்டார் என எண்ணினர். கவர்னரும் ஜல்லிக்கட்டைக்காண ஆவலுடன் வந்தார். இதைக்கேள்விப்பட்ட தேவர் துண்டு சீட்டுகள் மூலம் ஆட்களுக்கு யாரும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என செய்தி அனுப்பினார்.அதனால் ஒருவரும் காளையை அடக்க வரவில்லை.கவர்னர் ஏமாற்றம் அடைந்தார்.தேவரின் செல்வாக்கைக்கண்டு வியந்தபடியே சென்றார் கவர்னர்.அதன் பிறகு அச்சட்டத்தின் தாக்கம் குறைந்தது. பின்னர் மே 5 1947ல்தான் அச்சட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Wednesday, February 24, 2016

கடலூர்பருவ மழையால் பாதிக்கப்பட்ட வெள்ள நிவாரணம்

வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அன்ன வேலி மூன்றாம் பாடி ஆகிய கிராமங்களில் கள்ளர் முரசு மாத இதழ் சார்பில் நிறுவனர் சுரேஷ் தலைமையில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கினர்


வேலு நாச்சியார்

விடுதலை பெண் போராளி வீர மங்கை வேலு நாச்சியார்

(இந்திய சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று)*

ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியார்

ராணி வேலு நாச்சியாரின் வீரக்கதை.

வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு போதிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே. ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு 85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு... தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாருடையது!
ராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதி யின் ஒரே செல்ல மகளாகப் பிறந்த வேலு நாச்சியார், அரண்மனையில் ஆண் வாரிசு இல் லாத குறை இல்லாமல் வீர விளையாட்டு களான சிலம்பம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தை முதலான வீரக்கலைகளில் பயிற்சி பெற்றார். போர் பயிற்சிகளுடன் ஃபிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். 16 வயதானபோது சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை மணந்தார். 1772-ம் ஆண்டு நடந்த காளையார்கோயில் போரில் முதுவடுகனாதரையும் வேலு நாச்சியாரின் மகளான கௌரி நாச்சியாரையும் கொன்றனர் வெள்ளையர்கள். கொதித்து எழுந்த வேலுநாச்சி யார், தனது அரசை மீட்க சூளுரைத்தார்.
தனது தளவாய் தாண்டவராயன் பிள்ளையையும் சேனாபதிகள் மருது சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு குறுநில மன்னர்களை ஒன்று சேர்த்து போராட பல இடங்களுக்குச் சென்றார். தளவாய் தாண்டவராயன் பிள்ளை, வேலு நாச்சியாரின் சார்பாக சுல்தான் ஹைதர் அலிக்கு மடல் ஒன்றை எழுதினார். அந்த மடலில்... 5,000 வீரர்கள் கொண்ட காலாட்படையும் 5,000 வீரர்கள் கொண்ட குதிரைப்படையும் கேட்டிருந்தார். இதையடுத்து, வேலு நாச்சியாரை நேரில் அழைத்த ஹைதர் அலி, அவரின் உருதுப் புலமையைக் கண்டு வியந்தார். வேலு நாச்சியார் கேட்டவண்ணம் படைகளைக் கொடுத்து அனுப்பினார்.
படைகளைப் பெற்ற வேலு நாச்சியார், வெள்ளையர்களை வெல்வதற்கான உத்திகளை வகுத்தார். தனது படைகளை தானே முன்னின்று நடத்தினார். சேனாபதிகளான மருது சகோதரர் கள், உற்ற துணையாக இருந்து படைகளுக்குத் தலைமை தாங்கினர். குதிரை வீரர்கள், காலாட்படை வீரர்கள் மற்றும் பீரங்கிப்படை யோடு... திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்ட வேலு நாச்சியார், காளையார் கோயிலை கைப்பற்றினார்.
இறுதியாக, சிவகங்கை நகரைக் கைப்பற்றத் திட்டமிட்டு, சின்னமருது, பெரியமருது, தலைமை யில் படை திரட்டப்பட்டது. வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் இருந்த சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி, நவராத்திரி விழாவுக்காக மக்கள் கூடினர். அதில் பெண்கள் படை, மாறுவேடத்தில் புகுந்து செல்ல வியூகம் அமைத்தார் நாச்சியார். குயிலி என்ற பெண்ணை தற்கொலைப்படையாக அனுப்பினார். குயிலி தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். உலகிலேயே முதன் முதலாக மனித வெடிகுண்டாக ஒரு பெண்ணை வேலு நாச்சியார் அனுப்பியது, பிற்கால தற்கொலைப் படைகளுக்கு முன்னோடியாக அமைந்தது.
கோட்டையை நோக்கி முன்னேறிய வேலு நாச்சியாரை தடுக்கும் எண்ணத்துடன் ஆற்காட்டு நவாப் வெள்ளையர்களுடன் படை எடுத்து வந்தபோது, வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் அப்படைகளை வென்று சிவகங்கையை அடைந்தனர். இறுதி யில் வென்றார் வீரமங்கை! தன் கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் வேலு நாச்சியார் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது! இத்தனையையும் அவர் சாதித்தது... தன்னுடைய ஐம்பதாவது வயதில்!
சிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்ற ஆட்சி புரிந்தார் நாச்சியார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார். அவரது சுதந்திரப் போராட்ட தியாகத்தை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய அரசு 2008-ம் ஆண்டு தபால் தலை ஒன்றை வெளியிட்டது.
நம் குழந்தைகளுக்கு ஃபிரான்ஸ் நாட்டின் ஜோன் ஆஃப் ஆர்க் மற்றும் வடநாட்டின் ஜான்சி ராணியின் கதைகளையே சொல்லி வளர்த்த நாம், நம் மண்ணில் தோன்றி பெருமை சேர்த்த வேலு நாச்சியாரின் கதையையும் சொல்லி வளர்ப்போம். பட்டுக்கோட்டையார் பாடியது போல், வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைக்காமல், வீரக்கதையை சொல்லி வளர்ப்பது நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் தானே!

விவேகானந்தர் ,நேதாஜி ,முத்துராமலிங்கத் தேவர்

இன்று மேற்க்கே உதித்து நிற்க்கிற இந்த நட்சத்திரம்,கூடிய சீக்கிரம் கிழக்கே உதிக்க போகிறது.ஆயிரம் மடங்கு பிரகாசமாக!.
விவேகானந்தர்

தேசம் என் உடல், தெய்வீகம் என் உயிர்.
முத்துராமலிங்கத் தேவர்

ரத்தத்தை தாருங்கள், சுதந்திரத்தை வாங்கி தருகிறேன்.
நேதாஜி

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க நேதாஜி காரணம்



இந்தியாவை கையாள தேவையான ராணுவ பலம் இங்கிலாந்திடம் இல்லை. இந்தியாவை கட்டு படுத்த மேலும் படைகளை அனுப்பினால் இங்கிலாந்தை இழக்க நேரிடும். அதனால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர் .

நேதாஜி உலகநாடுகளுக்கு சென்று படைகளை திரட்டி வெள்ளையனை தாக்க ஆயத்தம் ஆனார் என்ற தகவலும் அவர்களை பயப்பட வைத்தது.

நேதாஜியை சமாளிக்க முடியாமல் நாட்டை விட்டு போகிறோம் என்று சொன்னால் அசிங்கம் என்று அகிம்சைக்காக சுதந்திரம் என்று சொல்லி நாட்டை விட்டு போனார்கள்.

தேசத்தந்தை "நேதாஜி"தான்


நேதாஜி உயிரிழந்தது எப்போது, எப்படி?: பிரிட்டன் இணைய தளம் தகவல்



தைவானில் 1945ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் காயமடைந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்ததாக பிரிட்டனைச் சேர்ந்த இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது. www.bosefiles.info என்ற அந்த இணைய தளத்தில் 1945 ஆகஸ்ட் 18ம் தேதி தைப்பே நகரின் விமான தளத்தில் நடந்த விபத்தில் நேதாஜி படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேதாஜியின் நெருங்கிய உதவியாளர், இரண்டு ஜப்பானிய மருத்துவர்கள், மொழிபெயர்ப்பாளர், செவிலியர் ஒருவர் ஆகிய 5 பேரும் இதற்கு சாட்சி அளித்திருப்பதாகவும் அந்த இணைய தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய தேசிய ராணுவத்தைத் தோற்றுவித்து நாட்டின் விடுதலைக்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போசின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படும் நிலையில், பிரிட்டன் இணைய தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பாதுகாவலர் நிஜாமுதீனின்

107 வயது
நிஜாமுதீனின் காலில் விழுந்து வணங்கிய இந்தியப் பிரதமர் மோடி..!! யார் இந்த நிஜாமுதீன்..?

ஒரு நாட்டின் பிரதமரே காலில் விழுந்து வணங்குமளவிற்கு இவர் அவ்வளவு பெரிய ஆளா?

மோடியின் தந்தையும் அல்ல தாத்தாவும் அல்ல! பின், யார் இவர்?

இந்தப் பெரியவர் தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பாதுகாவலரும் வாகன ஓட்டுனரும், சுதந்திர போராட்ட தியாகியுமான 107 வயதான திரு. நிஜாமுதீன்.

2014 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி கலந்துக்கொண்ட கூட்டத்திற்கு நிஜாமுத்தீன் அவர்கள் சென்ற போது அவருக்கு மரியாதை செலுத்தும் வன்னம் மோடி நிஜாமுத்தீன் அவர்களின் காலில் விழுந்தார்.

நேதாஜி பிறந்தநாள் விழா

நேதாஜி பிறந்தநாள் விழா 

வருகிற ஜனவரி 23

இந்திய விடுதலைப் போருக்காக மாவீரன் நேதாஜி அழைத்த போது மார் நிமிர்த்தி முன் சென்றவர்கள் தென் மாவட்ட தமிழர்கள்!

இந்திய சுதந்திரத்திற்காக பல்லாயரக் கணக்கான போராளிகளை கொண்டு தேசத்தந்தை நேதாஜியால் உருவாக்கப்பட்ட மாபெரும் படை இந்திய தேசிய இராணுவம்(INA). இந்திய விடுதலை போராட்டத்தில் INAவின் பங்கு மகத்தானது

நேதாஜி


நேதாஜி
துரோகங்கள் எத்தனையோ கண்டிருப்பான் தலைவன்
சுமைகளை எத்தனையோ சுமந்திருப்பான் தலைவன்,,
எங்கள் நாட்டை நாங்கள் ஆழ தானே !

இந்தியா மக்களுக்காகவும் அவர்
உயிரையும் கொடுப்பார்நேதாஜி

எங்கள் தலைமுறை மகிழ்ந்து வாழ தானே
வாழ்க நேதாஜி புகழ்

சந்திர போஸ் ஒரு விடிவெள்ளி. நேதாஜி என்றாலே வீரம் நெஞ்சில் பாயும்


நேதாஜி ஒரு போர்குற்றவாளி'பிரிட்டனுக்கு நேரு எழுதிய கடிதம்!




நேதாஜி சுபாஷ் சந்திர போஸை போர்குற்றவாளி என குறிப்பிட்டு , சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிய கடிதம் உள்பட பல முக்கிய ஆவணங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.

கடந்த அக்டோபர் 14-ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் குடும்பத்தினர் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது நேதாஜி தொடர்பான ஆவணங்கள் விரைவில் வெளியிடப்படும் என அவர்களிடத்தில் பிரதமர் உறுதியளித்திருந்தார்.

அதன்படி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 120வது பிறந்தநாளான இன்று, அவரது மரணம் தொடர்பான 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த ஆவணங்கள் அனைத்தும் தேசிய ஆவணக் காப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்களில் நேதாஜி குறித்து, பிரிட்டன் அரசுக்கு நேரு எழுதிய கடிதமும் ஒன்று. அந்த கடிதத்தில் நேதாஜியை நேரு 'ஒரு போர்க்குற்றவாளி ' என குறிப்பிட்டுள்ளார் நேரு. இது குறித்த ஆவணமும் வெளியிடப்பட்டுள்ளது. அதே வேளையில் நேதாஜியை போர்குற்றவாளி என நேரு குறிப்பிட்ட கடிதத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது. மேலும் நேதாஜி விமான விபத்தில் இறந்ததை நேரு நம்பவில்லை என மற்றொரு ஆவணம் தெரிவிக்கிறது.

நேதாஜி மரணம் அடைந்தவுடன், நேதாஜியின் மகளுக்கு காங்கிரஸ் கட்சி 6 ஆயிரம் ரூபாய் வழங்கியதாகவும், அதனை நேதாஜியின் குடும்பத்தினர் வாங்க மறுத்தது தொடர்பான ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளன

மருதுபாண்டியர் வரலாறு

மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 முடிய ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுமங்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்றபோதுதான் ஆங்கிலேயரின் அதிருப்தி மற்றும் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார் கோவில் ஆகும்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801, அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் இவ்விருவரும் தூக்கில் இடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார்கோவிலில் அமைந்துள்ளது



இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு.

1772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டி வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலுநாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டது. அரசியாரின் போர் வியூகத்தைத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர்அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர்அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.


காளையார் கோவிலுக்குத் தேர் செய்யப்படுகிறது. தேர் ஓட்டத்தன்று தேர் நகர மறுக்கிறது. அப்போது வடிவாகத் தேரைச் செய்த குப்பமுத்து ஆசாரி மன்னரிடம் அவரது செங்கோலையும், மோதிரத்தையும் கொடுத்து தம்மை ஒருநாள் வேந்தராக அறிவித்தால் தேர் நகரும் என்று சொல்ல, அதனை ஏற்று பெரியமருது குப்பமுத்து ஆசாரியை வேந்தராக அறிவிக்கிறார். குப்ப முத்து ஆசாரி மன்னர் உடையில் தேரில் உட்காரத் தேர் நகர்கிறது. ஆனால் குப்பமுத்து ஆசாரி தேரிலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறான். தேரோட்டத்தன்று மன்னர் இறப்பார் என்பது தேர் செய்த குப்பமுத்து ஆசாரிக்கு முன்பே தெரிந்துள்ளது. இது கண்டு பெரிய மருது வருந்துகிறார். ஆசாரியின் நாட்டுப் பற்றை வியந்து அவனுக்கு கோவிலில் சிலை ஒன்றை வைத்துச் சிறப்புச் செய்கிறார்.

24-10-1801 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள்ளையரசு அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்

தமிழ்நாடு அரசு மருது சகோதரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில்சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நினைவிடம்அமைத்துள்ளது. இங்கு சின்ன மருது, பெரிய மருது ஆகியோரின் 8 அடி உயர முழு உருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உதவியாளர் மா.குருசாமி பிள்ளை


திருச்சுழி குருசாமி பிள்ளை - வயது 89. பிறப்பால் தேவர் சாதி இல்லை. ஆனாலும் தேவரின் நம்பிக்கைக்குரிய சீடர்களில் இவரும் ஒருவர். 15 வயதிலேயே தேவரைப் போல ஜிப்பா அணிந்து அவரின் அடி தொட்டு நடந்தவர் குருசாமி பிள்ளை. இவருக்கு 4 மகன்கள், 3 மகள்கள். தையல்காரரான குருசாமி பிள்ளை குடும்பத்துக்காக தையல் மிஷின் மிதித்துக் கொண்டே தேவருக்கு பெட்டி தூக்கினார்.
பிரிக்கப்படாத ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவருக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. அவற்றில் 1,137.27 ஏக்கர் போக மீதியை தனது உறவினர்கள், விசுவாசிகள் என 16 பேருக்கு 1960-ல் தானமாக எழுதி வைத்தார் தேவர். அந்த வகையில் குருசாமி பிள்ளைக்கும் நரிக்குடி அருகே புளிச்சி குளத்தில் 120 ஏக்கர் நிலம் கிடைத்தது.
பிறகு நடந்தவற்றை விவரிக் கிறார் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்கின் முன்னாள் மாநிலத் தலைவர் நவமணி: “சொத்துகளைப் பிரித்துக் கொடுத்த சில நாட்களி லேயே தேவர் படுத்த படுக்கையாகி விட்டார். அப்போது மதுரை திருநகர் வீட்டில் இருந்த அவருக்கு ஒரு தாயைப் போல இருந்து அனைத்துப் பணிவிடைகளையும் செய்தார் குருசாமி பிள்ளை. தேவர் மறைவுக்குப் பிறகு, அவரது விசுவாசிகள், தேவர் பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தினார்கள்.
தேவரின் விசுவாசிகள் அனைவரும் தங்களுக்கு தேவர் தானமாக கொடுத்த சொத்துகளை அப்படியே அறக்கட்டளைக்குத் திருப்பிக் கொடுத்தார்கள். தையல் மிஷின் ஓடினால்தான் வீட்டில் அடுத்த வேளைக்கு அடுப்பு எரியும் ஏழ்மையில் இருந்த குருசாமி பிள்ளையும் தனது 120 ஏக்கரை திருப்பிக் கொடுத்தார்.
அப்படிப்பட்ட மனிதர் இப்போது கண்டுகொள்ளப்படாமல் கஷ்ட ஜீவனத்தில் இருக்கிறார். பிள்ளைகளின் வருமானம் அவரவர் குடும்பத்தை கொண்டு செலுத்தவே சரியாக இருக்கிறது. தேவர் பெயரைச் சொல்லி அரசியல் செய்பவர்கள், அவருக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்த குருசாமி பிள்ளையை கண்டுகொள்ளவில்லை. தனக்கு ஏதாவது கஷ்டம் என்றால் எங்களைப் போன்ற நண்பர்களுக்கு போன் போடுவார். எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வோம். அவருக்கு முதியோர் உதவித் தொகை வாங்கிக் கொடுக்க முயற் சித்தோம். ஆனால், வாரிசுகள் இருப்பதாகச் சொல்லி, தர மறுத்து விட்டார்கள்’’ என்றார் நவமணி.
தேவரோடு இருந்த நாட்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட குருசாமி பிள்ளை, ’’எனக்கு 120 ஏக்கரை தேவர் பத்திரம் பதிந்து கொடுத்தபோது உடனிருந்த அவரது உறவினர் ஒருவர், ‘இவரு நம்ம ஆளு இல்லையே.. பிள்ளைமாருக்கு எதுக்கு சொத்தை எழுதுறீங்க?’ன்னு கேட்டார். அதற்கு, ‘இவன் என் கூடவே இருக்கிறவன்டா. இவனுக்கும் ஒரு பங்கு குடுக்கணும்’ என்று சொன்னார் தேவர்.
அவ்வளவு பெரிய மகான் கூட இருந்துட்டேன். அதைவிட எனக்கு வேறென்ன தம்பி வேணும்? அந்த 120 ஏக்கர் நிலத்தின் இன்னிய மதிப்பு ரூ.150 கோடி. அதைத் திருப்பிக் கொடுத்ததுக்காக கமுதி தேவர் கல்லூரி அறக்கட்டளையில என்னை ஆயுட்கால உறுப்பினரா போட்டாங்க. அதனால எனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. கஷ்ட ஜீவனம் நடத்துனாலும் அம்பது வருசமா திருச்சுழியில நான்தான் தேவர் குருபூஜையை நடத்துறேன். என் ஆயுள் உள்ள வரைக்கும் அது நடக்கும்’’ என்று சொன்னார்.
கள்ளர் முரசு

தேசியம் காத்த செம்மல்-பசும்பொன் முத்துராமலிங்க தேவர்


தேவன் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா!!



தேவர் இனம் வரலாறு படிக்கும் போதே உன் குருதி ஓட்டத்தில் மாற்றம் ஏற்படும் நான் தேவன் என்று சொல்லிப் பார் வீரம் உண்டாகும் மனதிலே வீரம் கொண்டு உன்னை நினை முக்குலத்து தேவன் பாரம்பரியம் புரியும் 

விடுதலைப்போராட்ட தீயை ஓங்கி வளர்ப்பதற்கு என்று தங்கள் உடல் உயிர் ஆன்மா குருதியை தாரை வார்த்தவர்கள் தேவர் இனம்.

தமிழ் மக்களின் முதுகெலும்பை நிமிர வைத்த வீரஇனம்
இந்த மண்ணிற்காக தங்கள் உயிரையே
அர்ப்பனம் செய்த தேவர் இனம்

காலம் காலமாக ஆண்ட தமிழ் இனத்தை அடக்கி ஆழ நினைத்த ஆங்கிலேயர்கள் ஆட்சிக் கெதிராகப் போராடிய கொடுங்கோலாட்சிக்கு முடிவு கட்ட எண்ணிய ஆங்கிலேயர் அடக்க வீறு கொண்டு எழுந்தவர்கள் தேவர் இனம்

இந்த வீரர்கள் தங்கள் வீர மரணத்தின் போதும் தங்களை தாயக மண்ணிற்காகவே அர்ப்பணித்தார்கள் முக்குலத்தோர்

இராசராச சோழன்தேவன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் உண்மையிலேயே பெருங்கோவில்தான். இது ஒரு கலைப் பொக்கிஷம்.


முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர்
மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன்...

விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார். வேலுநாச்சியார் ,

விடுதலைப் போராட்டக்களத்தில் வெள்ளையனை எதிர்த்து தூக்குமேடை கண்டமருது சகோதரர்கள் ,

மருதுபாண்டியரைக் காப்பாற்ற படை திரட்டி சென்ற
தென்பாண்டி சிங்கம் வாளுக்கு வேலி அம்பலம்:

1920இல் தம் பிறப்பையே இழிவுப்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து உசிலம்பட்டி – பெருங்காமநல்லூர்
தேவர் இன மக்கள் 17 பேர் துப்பாக்கிக் குண்டுக்கு
இரையான தியாகிகள்

1957 ம் வருடம் கீழத்தூவல் மண்ணில் காமராஜ் நாடாரின் வழிகாட்டுதலின்படி கண்ணைக்கட்டி, கைகளைக்கட்டி சுட்டுக்கொல்லப்பட்ட 5, வேங்கைகள்

இந்த மாவீரர்கள் தேவர் இனம் தமிழ் தாயின் மடியில் பிறந்த வீரர்கள்.

வாழ்க தேவர் இனம் பல்லாண்டு வாழ்கவே,

கள்ளர் முரசு

நேதாஜியின் அஸ்தியை மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும்!



புதுடெல்லி: ஜப்பான் நாட்டின் ரங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் சாம்பல், நேதாஜியுடையது தானா என்பதைக் கண்டறிய மரபணு சோதனை (டிஎன்ஏ) நடத்த வேண்டும் என்று நேதாஜியின் மகள் டாக்டர் அனிதா போஸ் வலியுறுத்தி உள்ளார்.

சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ரகசிய ஆவணங்களை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது. இதற்கிடையே, ஜெர்மனியில் வசிக்கும் நேதாஜியின் ஒரே வாரிசான அனிதா போஸ், அங்கிருந்து பி.டி.ஐ. செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், ''தைவானின் தைபே நகரில் கடந்த 1945-ம் ஆண்டு நேரிட்ட விமான விபத்தில் எனது தந்தை நேதாஜி உயிரிழந்து விட்டார் என்பதை நான் நம்புகிறேன்.

அதே நேரம், ஜப்பானின் ரங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் நேதாஜியின் சாம்பல் என்று கூறப்படும் சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான், அந்த சாம்பல் நேதாஜியுடையது தானா என்பது உறுதியாகத் தெரிய வரும்.

நேதாஜி தொடர்பாக இந்திய அரசிடம் இருந்த 100 ரகசிய ஆவணங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் சில ஆவணங்களை மட்டுமே நான் பார்த்துள்ளேன். அதில், நேதாஜியின் மரணம் தொடர்பான சான்றிதழ் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது.

நேதாஜி தொடர்பான ஆவணங்களை இந்திய அரசும், மேற்குவங்க அரசும் வெளியிட்டிருப்பதால், அவர் தொடர்பான ரகசியங்கள் முழுவதும் வெளிவருமா எனக் கேட்கிறீர்கள். அவ்வாறு வெளிவந்தால், எனக்கு மகிழ்ச்சிதான். எனது தந்தை நேதாஜி குறித்து புத்தகம் எழுதும் திட்டமில்லை. ஆனால், எனது தாயார் எமிலி குறித்து புத்தகம் எழுத உள்ளேன்" என்றார்.

இந்நிலையில், அனிதா போஸ் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, ரங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ள நேதாஜியின் சாம்பல் என்பதை உறுதிப்படுத்த மரபணு சோதனை நடத்துவது குறித்து ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்த திட்டமிட்டுள்ளார் என்று தெரிவித்து உள்ளனர்.

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை


முத்துராமலிங்கம்தேவர் , என் தம்பி"நேதாஜி



நேதாஜியும், முத்துராமலிங்க தேவரும் சகோதர பாசம் கொண்டிருந்தனர். 1939_ம் ஆண்டில் அகில இந் திய காங்கிரஸ் கட்சித் தலைவராக நேதாஜி தேர்ந்து எடுக்கப்பட்டபோது, அவர் வெற்றிக்கு தேவர் உழைத்தார்
.
கல்கத்தாவில் நடந்த விழாவுக்கு, தேவரை நேதாஜி அழைத்தார். "முத்துராமலிங்கம்தேவர் , என் தம்பி" என்று கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்தார். தேவரைக் கட்டித்தழுவி, "நான் வடநாட்டு போஸ்; நீ தென்நாட்டு போஸ்" என்று வாழ்த்தினார்.


மதுரையின் முதுபெரும் சுதந்திரப் போராட்டத் தியாகியும், பத்திரிகையாளருமான ஐ.மாயாண்டிபாரதி


இருளப்பன், தில்லையம்மாள் தம்பதிக்கு மகனாக மதுரையில் 1917ஆம் ஆண்டு பிறந்தார். அவர் 10-ஆம் வகுப்பு படிக்கும்போதே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
1937-இல் திருப்பூர் குமரனுக்கு நினைவுச் சின்னம் கோரி எழுதிய துண்டறிக்கை மூலம் ராஜபாளையத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் கவனத்தை ஈர்த்த அவர், 1939-இல் லோக்சக்தி இதழில் கம்பெனியைக் கலக்கிய கட்டபொம்மன், படுகளத்தில் பாரததேவி ஆகிய கட்டுரைகள் எழுதி தேச விரோத சட்டத்தில் கைதானார். அதன்படி, 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.
பாரதசக்தி, லோக்சக்தி, லோகோபகாரி, நவசக்தி பத்திரிகைகளில் எழுதிய அவரது கட்டுரைகள் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
1931, 1932-ஆம் ஆண்டுகளில் சட்டமறுப்பு இயக்கம், கள்ளுக்கடை மறியல் ஆகியவற்றில் ஈடுபட்டு சிறை சென்றார். 1940-இல் இரண்டாம் உலகப் போர் எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டு கைதானார்.
1941-இல் பொதுவுடமை அரசு வேண்டும் என பிரசாரம் செய்து கைதானார். 1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார். தொடர்ந்து 1944-ஆம் ஆண்டு வரை அவர் சிறையிலேயே கழித்தார். சுதந்திரத்துக்குப் பிறகு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றார்.
குடியரசு முன்னாள் தலைவர்களான நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர்.வெங்கட்ராமன், முன்னாள் முதல்வர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், என்.ஜி.ரங்கா, பட்டாபி சீதாராமையா, தியாகி ஏ.வைத்தியநாதய்யர், சர்தார் வேதரத்தினம் பிள்ளை, ஜீவா, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ம.பொ.சிவஞானம், எஸ்.கல்யாணசுந்தரம், வேதநாயகம் பிள்ளை, ஆர்.உமாநாத் உள்ளிட்ட பல தலைவர்களுடன் சிறையில் இருந்துள்ளார்.
சிறையிலும், வெளியிலும் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து, "போருக்குத் தயார்', "படுகளத்தில் பாரததேவி', "வெள்ளையனே வெளியேறு', "அரசு என்றால் என்ன', "பாரதத் தாயின் விஸ்வரூபம்', "வெடிகுண்டும் வீரத் தியாகிகளும்', "தூக்குமேடை பாலு', "கட்டிவைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட தியாகிகளின் வரலாறு' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

Tuesday, February 23, 2016


விடுதலைப் போராட்ட தியாகிகளுடன் கள்ளர் முரசு நிறுவர்


கள்ளர் முரசு நிறுவர் தலைவர்களுடன்








kallar murasu


1939 –ல் இரண்டாவது முறையாக நேதாஜி காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்



நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, 
அவருக்கு எதிராகராஜேந்திரப் பிரசாத்தையும், 
நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார்.
அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். 
போஸ். 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர். 
சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். 
அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்தது தான் `ஃபார்வர்டு பிளாக்’ கட்சி

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலையை திறக்க அரசு முடிவு


ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் நீண்டகாலமாக திறக்கப் படாமல் இருந்த விடுதலை போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் சிலையை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

முத்து விஜயராஜ முத்துராமலிங்க சேதுபதி 12 வயதில் ராமநாதபுரம் மன்னரானார். ஆங்கிலேயர்கள், ஆற்காடு நவாப்புகளின் வணிகத்தை முடக்க விற்பனை வரி, சுங்க வரி விதித்தார்.
ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் 1772ல் மன்னர் முத்து ராமலிங்க சேதுபதி, அவரது தாயார், சகோதரி ஆகியோரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். 10 ஆண்டு சிறையில் இருந்த மன்னரின் தாயார், சகோதரி சிறைக்குள்ளேயே இறந்தனர்.

ராமநாதபுரத்தில் கலவரம் மூண்டதால் முத்துராமலிங்க சேதுபதி விடுதலை செய்யப்பட்டார். ஆங்கிலேயர் களின் வணிகத்தை முடக்கியதால், 'ரிபெல்' முத்துராமலிங்க சேதுபதி என, அழைக்கப்பட்டார்.

மீண்டும் 2 வது முறையாக அவரை ஆங்கிலேயர் கைது செய்தனர். 24 ஆண்டுகள் சிறையில் இருந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டு 1809 ல் சிறையிலேயே இறந்தார். அவருக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன் சிலை வைக்க அரசு அனுமதித்தது. செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ரூ.5 லட்சத்தில் கையில் வாளுடன் கூடிய 8 அடி உயர வெண்கல சிலை 2013 ல் அமைக்கப்பட்டது.

இதற்கிடையே ஜாதி, அரசியல் தலைவர்களின் சிலைகளை பொது இடங்களில் வைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் ரிபெல் முத்துராமலிங்க சேதுபது சிலை திறக்கப்படாமல் 3 ஆண்டுகளாக பிளாஸ்டிக் திரைக்குள் மறைத்து வைக்கப்பட்டது. சிலையை திறக்க விஸ்வ இந்து பரிஷத் மாநில இணை பொதுச்செயலாளர் சின்மயா சோமசுந்தரம் 2015 ஆக., 10 ல் கலெக்டரிடம் மனு கொடுத்தார். தொடர்ந்து ரிபெல் முத்து ராமலிங்க சேதுபதி மக்கள் இயக்கத்தினரும் வலியுறுத்தினர்.இதையடுத்து சிலையை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தற்போது சிலை சீரமைக்கப்பட்டு வருகிறது.

மறைக்கப்பட்ட அகமுடையானின் வீர வரலாறு!






தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கத்தேவர்-தையல் அம்மாளுக்கு 1920, நவம்பர் 15 அன்று பிறந்தவர் மாவீரன் வாட்டாக்குடி இரணியன். இவரது இயற்பெயர் வெங்கடாச்சலம்.

தனது 13 வது வயதில் உறவினர்களுடன் சிங்கப்பூர் சென்று கட்டிட வேலையிலும் தோட்டங்களிலும் வேலைபார்த்தார். அங்கெல்லாம் ஆங்கிலேயர்கள், சீனர்கள்,மலேசியர்களின் தோட்டங்களில் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டது கண்டு அவருக்கு பொதுவுடைமைச் சிந்தனையாளர்களுடன் உறவு ஏற்பட்டது.

பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள் மலேயா கணபதி,வீரசேனன் ஆகியோருடன் இரணியனுக்கு தொடர்பு கிடைத்தது.நூல் வாசிப்புப் பழக்கம் உருவானது.பொதுவுடைமை மீதான பிடிப்பு அதிகமானது.இரகசிய அரசியல் கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புக்கிட்டியது. சிங்கப்பூரில் பொதுவுடைமை மற்றும் பகுத்தறிவு சிந்தனையை வளர்த்துக் கொண்டதால் நாத்திக சிந்தனையாளன் “இரணியன்” பெயரை தனது பெயராக மாற்றிக்கொண்டார்.

1943ல் சிங்கப்பூர் வந்த வங்கத்துச்சிங்கம் நேதாஜியைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார்.”இரத்தம் தாருங்கள்;விடுதலை பெற்றுத்தருகிறேன்” என்று சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் நேதாஜி வீரமுழக்கமிட்டதில் ஈர்ப்படைந்த இரணியன் நேதாஜி அமைத்த “இந்திய தேசிய இராணுவ”த்தில் சேர்ந்து பயிற்சியாளராக உயர்ந்தார்.

சுமார் பன்னிரெண்டாயிரம் தொழிலாளர்களைக் கொண்ட சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரானார்.1946ல் தொழிற்சங்கத்தின் முடிவுக்கு ஏற்ப தொழிலாளர்களின் நலனுக்காக போராட்டம் நடத்தினார்.மலேசிய முதலாளிகளும் ஆங்கிலேயர்களும் போராட்டத்தை ரவுடிகளைக் கொண்டு நசுக்க நினைத்ததை எதிர்கொள்ள “இளைஞர் தற்கொலைப் படை”ஒன்றை நிறுவினார். இளைஞர்களுக்கு கொரில்லா பயிற்சியும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியும் கொடுத்தார்.

1948ல் மலேசியா பொதுவுடைமைக் கட்சியைத் தடை செய்தது. பொதுவுடைமை இயக்கத்தலைவர்கள் தலைமறைவானார்கள்.தனது 28 வது வயதில் இரணியன் தனது சொந்த ஊரான வாட்டாக்குடிக்குத் திரும்பினார்.1947ல் விடுதலையடைந்த இந்தியாவில் நேதாஜிக்கு எதிர் சிந்தனை கொண்டவர்களின் காங்கிரசு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததும் பணக்கார சக்திகள் தொழில் முதலாளிகளாகவும் நிலப்பிரபுக்களாகவும் மாறியிருப்பதையும் கண்டு இதற்காகவா இந்திய விடுதலைக்காக நேதாஜி பாடுபட்டார் என்ற கலக்கம் அவருக்குள் உருவானது.

இந்தியாவிலும் பொதுவுடைமைக்கட்சி தடைசெய்யப்பட்டிருந்த நேரம்.அவரது ஊரான வாட்டாக்குடியில் நிலப்பிரபுக்களின் கொடுமை விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராக அதிகரித்திருந்தது. ”சாணிப்பாலும் சவுக்கடி”யும் விவசாயத்தொழிலாளர்களுக்கு இயல்பான தண்டனையாக இருந்தது.ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் நண்பர்களுடன் சேர்ந்து ”விவசாய சங்கம்” ஒன்றை உருவாக்கினார்.

நிலப்பிரபுக்களுடன் மோதி விவசாயத் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தினார்.இதை பொறுக்க முடியாத நிலப்பிரபுக்கள் காவல்துறையின் உதவியுடன் இவர்மீது பல வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்ய முயன்றனர்.மீண்டும் தலைமறைவு வாழ்க்கை தொடர்கதையானது.நிலப்பிரபுக்களும் முதலாளித்துவ சிந்தனையாளர்களும் காவல்துறையினர் உதவியுடன் இரணியனுடன் தொடர்புடையவர்களைக் கொலை செய்யத் தொடங்கினர்.

1950 மே மாதம் 3 ஆம் நாள் இரணியனுடன் இணைந்து செயல்பட்ட சாம்பனோடை சிவராமனை காவல்துறை சுட்டுக்கொன்றது. வடசேரிக் காட்டில் மறைந்திருந்த இரணியனை காவல்துறை நெருங்கியது.காலில் ஏற்பட்ட காயத்தால் அவரால் ஓடமுடியவில்லை.இரணியனையும் அவருடன் இருந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவரையும் வடசேரி சம்பந்தம் என்பவர் காவல்துறைக்குக் காட்டிக்கொடுத்தார்.

1950 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் இரணியனையும் ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் காவல்துறையினர் பிடித்தனர்.ஆறுமுகத்தின் மீது வழக்கு ஏதுமில்லை என்பதால் அவரை விடுவித்து தப்பிக்க காவல்துறையினர் சொன்ன போதும் இரணியனை விட்டுச் செல்ல மறுத்துவிட்ட ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் இரணியனையும் காவல்துறை சுட்டுக்கொன்றது.

வாட்டாக்குடி இரணியன்,ஆம்லாப்பட்டு ஆறுமுகம்,சாம்பனோடை சிவராமன் ஆகியோரின் உடல்கள் பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு கூராய்வு செய்யப்பட்டன.பின்னர் பட்டுக்கோட்டை சுடுகாட்டில் அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. தனது 30 வது வயதில் விவசாயிகளின்… தொழிலாளர்களின் உரிமைக்காகப் பாடுபட்ட இரணியன் காவல்துறையால் கொல்லப்பட்ட தினம் இன்று… மே 5…

சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டு உயிர்நீத்த வாட்டுக்குடி இரணியன்,சாம்பவனோடை சிவராமன் ஆகிய இருவரும் “அகமுடையார்”சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் இருந்து உயிர் நீத்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

தமிழ்ச்சாதியான இவர்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கை வரலாறு வருங்கால இளைஞர்களுக்கு சமர்ப்பணம்!

நன்றி: திரு. அரப்பா தமிழன்

"எந்த நாட்டில் பெண்கள் போற்றப்படுகிறார்களோ, அந்த நாடு பெருமை பெறும்' என்பார்கள் அறிஞர்கள்


.

"பெண்ணடிமை தீருமட்டும்
பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்தல் முயற்கொம்பே!'
என்பார் பாவேந்தர் பாரதிதாசன்.

சிலிர்க்க வைக்கும் ஒரு வரலாற்றுச் சம்பவத்தைப் பாருங்கள்.

பசும்பொன் முத்துராமலிங் கத் தேவர் ஒருமுறை பர்மா சென்றிருந்தார். நேதாஜியின் தேசிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், அரசியல்ரீதியாக அங்கு சென்றிருந்தார். அதனால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க அந்த நாட்டு அரசாங்கம் விரும்பியது.

சிவப்புக் கம்பள மரியாதை கொடுப்பது சிறந்த வரவேற்பு என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அந்த நாட்டில் வேறொரு வழக்கம் இருந்தது- கறுப்புக் கம்பள வரவேற்பு! அதுவும் எப்படித் தெரியுமா? நீண்ட கூந்தலுள்ள அழகான இளம் பெண்கள் வரிசையாக அமர்ந்து, தலையைக் குனிந்து தரையில் தலைமுடியைப் பரப்பி இருப்பார்கள்.

அதேபோல் எதிர் வரிசையிலும் பெண்கள் அமர்ந்து தலைமுடியைப் பரப்பி இருப்பார்கள்.

இரண்டு வரிசையிலும் உள்ள பெண்களின் தலைமுடிகள் இணைந்து, கறுப்புக் கம்பளம் போல் காட்சி தரும். சிறப்பு விருந்தினர் அதன் மீது நடந்து செல்ல வேண்டும். அதுவரையிலும் அந்தப் பெண்கள் தரையை நோக்கி தலை, கைகளை வைத்து குனிந்தபடியே இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட வரவேற்பு தேவர் பெருமகனாருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த இடத்துக்கு வந்தபிறகுதான் இந்த ஏற்பாடு பற்றி அவருக்குத் தெரியும்.


அதைக் கண்டதும் அவர் துணுக்குற்றார். "இது என்ன கொடுமை! பெண்களைச் சிரமப்படுத்தி இப்படி உட்கார வைத்திருப்பது பெரிய பாவம்! அதுமட்டுமல்ல... அவர் களின் கூந்தல்மேல் நடந்து செல்ல வேண்டும் என்பது அதைவிடப் பெரிய பாவம்! அந்தப் பாவத்தை நான் செய்ய மாட் டேன். உடனே இதைத் தடுத்து நிறுத்துங் கள்' என்று அரசருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அரசருக்கு ஒரே ஆச்சரியம்! இதுவரையிலும் யாரும் சுட்டிக் காட்டாத இந்த விஷயத்தை இவர் மனிதாபிமானத்தோடு சிந்தித்து இருக்கிறாரே என்று நினைத்து, உடனே அந்த வரவேற்பு முறையை நிறுத்த ஏற்பாடு செய்தார்.

பிறகு, விருந்துக்கு ஏற்பாடு நடந்தது. தேவரோ, "கறுப்புக் கம்பள' பிரச்சினையை அதோடு விட்டுவிடவில்லை.

"எனக்கு மட்டுமல்ல; இனிமேல் யாருக்கும் இதுபோன்ற வரவேற்பு கொடுக்க வேண்டாம்' என்று வற்புறுத்தினார். "பெண்களை அடிமைப் படுத்தும் நாடு உயர்வடைவதில்லை' என்பதை யும் வலியுறுத்தினார்.

"இதற்கு ஒப்புக்கொண்டால் விருந்தில் கலந்து கொள்வேன்' என்று உறுதியாகச் சொல்லி விட்டார். அந்த உணர்வை- மனித நேயத்தைக் கண்டு மன்னர் சிலிர்த்துப் போனார். அதற்குப் பிறகு அந்த முறையையே அடியோடு ஒழித்து விட்டார்களாம்.