ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில
முத்து விஜயராஜ முத்துராமலிங்க சேதுபதி 12 வயதில் ராமநாதபுரம் மன்னரானார். ஆங்கிலேயர்கள், ஆற்காடு நவாப்புகளின் வணிகத்தை முடக்க விற்பனை வரி, சுங்க வரி விதித்தார்.
ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் 1772ல் மன்னர் முத்து ராமலிங்க சேதுபதி, அவரது தாயார், சகோதரி ஆகியோரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். 10 ஆண்டு சிறையில் இருந்த மன்னரின் தாயார், சகோதரி சிறைக்குள்ளேயே இறந்தனர்.
ராமநாதபுரத்தில் கலவரம் மூண்டதால் முத்துராமலிங்க சேதுபதி விடுதலை செய்யப்பட்டார். ஆங்கிலேயர் களின் வணிகத்தை முடக்கியதால், 'ரிபெல்' முத்துராமலிங்க சேதுபதி என, அழைக்கப்பட்டார்.
மீண்டும் 2 வது முறையாக அவரை ஆங்கிலேயர் கைது செய்தனர். 24 ஆண்டுகள் சிறையில் இருந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டு 1809 ல் சிறையிலேயே இறந்தார். அவருக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன் சிலை வைக்க அரசு அனுமதித்தது. செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ரூ.5 லட்சத்தில் கையில் வாளுடன் கூடிய 8 அடி உயர வெண்கல சிலை 2013 ல் அமைக்கப்பட்டது.
இதற்கிடையே ஜாதி, அரசியல் தலைவர்களின் சிலைகளை பொது இடங்களில் வைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் ரிபெல் முத்துராமலிங்க சேதுபது சிலை திறக்கப்படாமல் 3 ஆண்டுகளாக பிளாஸ்டிக் திரைக்குள் மறைத்து வைக்கப்பட்டது. சிலையை திறக்க விஸ்வ இந்து பரிஷத் மாநில இணை பொதுச்செயலாளர் சின்மயா சோமசுந்தரம் 2015 ஆக., 10 ல் கலெக்டரிடம் மனு கொடுத்தார். தொடர்ந்து ரிபெல் முத்து ராமலிங்க சேதுபதி மக்கள் இயக்கத்தினரும் வலியுறுத்தினர்.இதையடுத்து சிலையை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தற்போது சிலை சீரமைக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment