இந்தச் சட் டத்தை எதிர்த்து உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் கிளர்ச்சி வெடித்தது. ‘‘நாங்கள் நாடோடிகள் இல்லை; விவசாயம் செய்து பிழைக்கிறோம். எனவே, குற்றப்பழங்குடிச் சட்டம் எங்களுக் குப் பொருந்தாது’’ என கைநாட்டு வைக்கச் சொன்ன அதிகாரிகளோடு மல்லுக்கு நின்றார்கள் மக்கள். அது மோதலாக வெடித்ததால் அந்த மக்கள் மீது 152 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது போலீஸ். இதில் மாயக்காள் என்ற பெண் உள்பட 17 பேர் பலியாகி னர்.
பெருங்காமநல்லூரில் பலியானவர்கள் தன்மானம் காத்த வீரர்கள். ஒரு கொள்கைக்காக நேருக்கு நேர் இறுதிவரை உறுதியாகப் போராடி வீரமரணத்தைத் தழுவியவர்கள். அதனால்தான் இம்மாவீரர்களுக்கு பெருங்காமநல்லூரில் நடுகல் நட்டு ஆண்டுதோறும் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. இவர்கள் வீரமரணம் அடைந்த ஏப்ரல் 3ஆம் நாளை, தமிழ்தேசிய விடுதலை இயக்கம் ‘போராளிகள் தினமாக’ அங்ங்கீகரித்து, ஒவ்வொரு ஆண்டும் அனுசரித்து வருகிறது.
குற்றப்பழங்குடிச் சட்டத்தை எதிர்த்து நடந்த கிளர்ச்சியின்போது துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் நினைவாக பெருங்காமநல்லூரில் வைக்கப்பட்ட நினைவுத் தூண்.
No comments:
Post a Comment