Tuesday, February 23, 2016

டோக்கியோ கோயிலில் நேதாஜியின் அஸ்தி:

டோக்கியோ கோயிலில் நேதாஜியின் அஸ்தி: பிரிட்டன் வலைதளம் தகவல்

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியானது, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள கோயில் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வருவதாக பிரிட்டன் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இறுதி நாள்கள் குறித்து பல்வேறு தகவல்களை பிரிட்டனில் செயல்படும் வலைதளம் ஒன்று வெளியிட்டு வருகிறது. தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டதாகக் கூறி, அதனை நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களையும் இந்த வலைதளம் அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில், நேதாஜியின் அஸ்தி, ஜப்பானில் உள்ள கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அந்த வலைதளத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன் விவரம் வருமாறு:
தைவான் தலைநகர் தைபேயில் 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-இல் நிகழ்ந்த விமானத்தில் சிக்கிய சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். பின்னர், அவரது உடல் எரியூட்டப்பட்டது. அவரது அஸ்தியை சுபாஷின் படைப்பிரிவு கர்னல் ஹபிபூர் ரஹ்மான் உள்ளிட்டோர் தைவானில் உள்ள நிஷி ஹாங்கான்ஜி கோயிலில் ஒரு பெட்டகத்தில் பாதுகாத்து வைத்தனர்.
இதையடுத்து, சில நாள்களுக்குப் பின்னர் சுபாஷ் படைப்பிரிவின் துணை லெப்டினன்ட் ஹாய்ஷிதா அக்கோயிலுக்குச் சென்று அந்த அஸ்தியை ஜப்பானுக்கு எடுத்துச் சென்றார். பின்னர் ராணுவப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த அந்த அஸ்தியானது, டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோயில் நிர்வாகிகளிடம் கொடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டது என அதில் தெரி

விக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment