தைவானில் 1945ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் காயமடைந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்ததாக பிரிட்டனைச் சேர்ந்த இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது. www.bosefiles.info என்ற அந்த இணைய தளத்தில் 1945 ஆகஸ்ட் 18ம் தேதி தைப்பே நகரின் விமான தளத்தில் நடந்த விபத்தில் நேதாஜி படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேதாஜியின் நெருங்கிய உதவியாளர், இரண்டு ஜப்பானிய மருத்துவர்கள், மொழிபெயர்ப்பாளர், செவிலியர் ஒருவர் ஆகிய 5 பேரும் இதற்கு சாட்சி அளித்திருப்பதாகவும் அந்த இணைய தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய தேசிய ராணுவத்தைத் தோற்றுவித்து நாட்டின் விடுதலைக்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போசின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படும் நிலையில், பிரிட்டன் இணைய தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment