Saturday, February 27, 2016

குற்றப்பரம்பரை சட்டம்


1937 பொது த்தேர்தலில் வெற்றி பெற்றால் குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்குவதாக வாக்குக்கொடுத்திருந்தது காங்கிரஸ் கட்சி ஆனால் தேவரின் குரலுக்கு அதன் பிறகும் செவி சாய்க்கவில்லை.ஜூலை 27 1938ல் அருப்புக்கோட்டைக்கூட்டத்தில் பேசிய தேவரரசு அலுவலகங்களும் காவல் துறையும் தேசத்துரோகிகளாக செயல் படுகின்றன என்றார்."வீரம் மிக்க பரம்பரையில் வந்தவர்கள் நீங்கள்.நீங்கள் என்ன கோழைகளா?"எனப்பேசினார்.அவர் மீது வழக்குப்போடப்பட்டது, அதன் பிறகு திரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் இது பற்றிய விவாதம் நடந்து அச்சட்டத்தை நீக்க தீர்மானம் போடப்பட்டது. அதன் பின் ராஜாஜி மதுரை வந்த போது கம்பத்திலிருந்து பெரும் திரளாக மக்களை சேர்த்து ஊர்வலமாக வந்து அச்சட்டதை நீக்க்கோரி மனு கொடு.த்தார்.ஊர்வலத்தில் கூட்டம் 2 மைல் நீளத்திற்கு இருந்தது.அப்போது தான் தேவரின் செல்வாக்கு அனைவருக்கும் புரிந்தது.இருந்தாலும் ராஜாஜி அப்போது ஒத்துக்கொள்ளவில்லை. அரசு அதிகாரிகள் கள்ளர்கள் எவ்வளவு முரடர்கள் என கவர்னருக்கு தெரியப்படுத்த உசிலம்பட்டி அருகில் சிந்துப்பட்டி கிராமத்தில் ஒரு ஜல்லிக்கட்டு விழாவை ஏற்பாடு செய்தார்.கள்ளர்கள் காளைகளை அடக்குவதைப்பார்த்து அவர்கள் முரடர்கள் அவர்களுக்கு இந்த சட்டம் சரிதான் என நினைத்து அதை நீக்க உத்தரவு இடமாட்டார் என எண்ணினர். கவர்னரும் ஜல்லிக்கட்டைக்காண ஆவலுடன் வந்தார். இதைக்கேள்விப்பட்ட தேவர் துண்டு சீட்டுகள் மூலம் ஆட்களுக்கு யாரும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என செய்தி அனுப்பினார்.அதனால் ஒருவரும் காளையை அடக்க வரவில்லை.கவர்னர் ஏமாற்றம் அடைந்தார்.தேவரின் செல்வாக்கைக்கண்டு வியந்தபடியே சென்றார் கவர்னர்.அதன் பிறகு அச்சட்டத்தின் தாக்கம் குறைந்தது. பின்னர் மே 5 1947ல்தான் அச்சட்டம் வாபஸ் பெறப்பட்டது.

No comments:

Post a Comment