Wednesday, March 23, 2016

மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் களர் நிலம்..
என்னடா இது இவர்களுக்கு வேலையே இல்லையா ?.. யாரையாவது திட்டிக் கொண்டு இருப்பதே இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது.. கடைசியாக தேசப் பிதா காந்தியையும் கூட விட்டுவைக்காமல் விமர்சிக்க வந்துவிட்டார்களே என்று வருத்தப்பட்டு கொள்ளாதீர்கள். இந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களும், நிகழ்வுகளும் காந்தியின் நேர்கானல்கள் மற்றும் அவருடைய ஹரிஜன் இதழில் அவரே கைபட எழுதியவற்றிலிருந்தே எடுத்தாளப்பட்டிருக்கின்றன.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இன்று வரை “ ஆகா … காந்தீ .. மகானே..“ என்று காந்தியை மனதில் உயர்த்தி வைத்திருந்தவர்கள் கோபப்படாமல் சற்று நிதானமாக முழுமையாக வாசியுங்கள். இனி கட்டுரைக்குள் செல்லலாம்.
காலனியாட்சி காலத்தில்:
இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் என்பது ஏதோ காந்தி போட்ட தாளத்தில் மக்கள் ஆடிய டப்பாங்குத்து ஆட்டம் என்றும் அந்த ஆட்டத்திற்கு மயங்கித் தான் வெள்ளைக்காரன் இங்கிருந்து வெளியேறிவிட்டான் என்பதுமாகவே இங்கு ‘வரலாறு’ ’உருவாக்கப்பட்டிருக்கிறது’ ஆனால் உண்மை என்ன ? காலனியாட்சி காலத்தில் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் தாம் இந்திய ’விடுதலை’க்கு முதல் காரணமாகின. வெள்ளைக்காரன் ஒன்றும் காந்தியின் உண்ணாவிரததிற்கு இரக்கப்பட்டு கொண்டு வெளியேறிவிடவில்லை. காலனியாதிக்கத்திற்கெதிராக பீரிட்டெழுந்த பல இலட்சம் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் ஆட்சியாளர்களாலும், மக்கள் போராட்டங்களை மழுங்கடிப்பதையே எப்போதும் வேலையாகக் கொண்டிருந்த காந்தியாலுமே கட்டுப்படுத்தவியலாத வன்முறையை நோக்கி பயணித்த காரணத்தாலும், இரண்டாம் உலகப் போரில் பொருளாதார ரீதியில் வாங்கிய அடியாலும் தான் வெள்ளைக்காரன் வெளியேறினான். அப்போதிருந்த தேசிய சர்வதேசிய நிலைமையில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் யோக்கியவானாக, ‘ஜனநாயகப்பூர்வமாக’ நடந்து கொள்வதாக உலக மக்களுக்கு முன்பு நாடகம் ஆடியது. புற நிலையாக உள்நாட்டில் அதிகரித்த வன்முறைப் போராட்டங்கள், அக நிலையாக உலகப்போரில் ஏற்பட்ட பொருளாதார அடி, இவை இரண்டும் தான் பிரிட்டனை ’பெயரளவிற்காவது’ இந்தியாவிலிருந்து வெளியேற நிர்பந்தித்தது. இந்த நிலைமையின் கீழ் தான் உள்நாட்டு நிலைமை மேலும் மோசமாகி அதிகாரம் வன்முறையாளர்களின் கைகளுக்கு போய் விடுவதற்கு முன்னால் வெள்ளைக்காரன் நமது நாட்டிலிருந்து முடிந்தவரை சுருட்டிக் கொண்டு தனக்கு ஆதரவான கைக்கூலி கும்பலிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு வெளியேறினான். அதாவது கத்தியின்றி இரத்தமின்றி என்று பிதற்றுகிறார்களே அந்த வெட்கமின்றி பெற்ற ’சுதந்திரம்’ இப்படித் தான் வந்தது. போகும் போதும் அவன் ஒன்றும் சும்மா போகவில்லை, இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படி தன் சொல்படி ஆடும் பொம்மை ஆட்சியை ஆப்கனில் வைத்திருக்கிறதோ அதே போன்று தான் அன்று பிரிட்டனும் இங்கு தனது சாட்டைக்கு ஆடும் பொம்மை அரசை நேரு தலைமையிலும் காந்தியின் மேற்பார்வையிலும் நிறுவி விட்டு போனது. இது தான் இந்த மகாத்மாக்கள் சுதந்திரம் பெற்றுத்தந்த லட்சணத்தின் பின்னால் உள்ள அரசியல்.
மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களும் காந்தியின் துரோகங்களும் :
அது என்ன தன்னெழுச்சி போராட்டங்கள்? சரி, அதற்கும் காந்திக்கும் என்ன சம்மந்தம்? அவரை குறை சொல்லுவதற்கான காரணம் என்ன ? அவர் அப்படி என்ன தான் துரோகம் செய்தார் ?
இது போன்ற பல கேள்விகள் உங்கள் மனதில் எழலாம்.
நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் சுதந்திரப் போராட்டம் என்பது வெறும் காந்தி மற்றும் காங்கிரசின் தலைமையில் நடந்த ஒத்துழையாமை போராட்டங்கள் மட்டுமே அல்ல. பல வீரம் செறிந்த போராட்டங்கள் நமது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ’திட்டமிட்டே’ மறைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறான வீரம் செறிந்த போராட்டங்களில் முக்கியமான சிலவற்றையும் அப்போராட்டங்கள் பற்றி நமது தேசப்பிதா விடுத்த ஸ்டேட்மெண்ட்களையும் அவருடைய வாயாலேயே கேட்போம்.
சிட்டகாங் , பெஷாவர் மக்கள் எழுச்சியும் காந்தியின் அதிகார வெறியும்:
1930ம் ஆண்டு வடகிழக்கின் சிட்டகாங் நகரிலும் மேற்கிலுள்ள பெஷாவரிலும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்றன. சிட்டகாங்கில் புரட்சிகர மானவர் இயக்கங்களைச் சேர்ந்த ’ஹிந்துஸ்தான் குடியரசுப் படையினர்’ பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கை சூறையாடினர். பெஷாவரில் பத்தானியர்கள் என்ற மக்கள் குழுவினர் பிரிட்டீஷ் படைக்கு எதிராக துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். பெஷாவரில் சண்டையிட்ட அனைவரும் ’இஸ்லாமியர்கள்’. அக்காலகட்டத்தில் ’கார்வாலிப் படையினர்’ என்றொரு படைப்பிரிவு பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்தது. மக்கள் எழுச்சியை அடக்க இந்த கார்வாலிப் படையினரைத் தான் அனுப்பியது. இவர்கள் அனைவரும் ’ஹிந்து’க்கள். இந்த கார்வாலிப் படையினரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் தாம். தமது சொந்த மக்களுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த முடியாது என்று அவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஆயுதங்களை திருப்பிக் கொடுத்தனர். மீதிப்பேர் போராடிய மக்களுடன் இணைந்து கொண்டனர். இதனால் பிரிட்டீஷ் இராணுவத்திற்கு மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இந்தப் பின்னடைவினால் பெஷாவர் நகரே ஏப்ரல் 25 முதல் மே 4 வரை மக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் வான் படைத் தாக்குதல் மூலமும் பிற பகுதிகளிலிலிருந்து இறக்கிய படைக் குவிப்பின் காரணமாகவும் அந்நகரம் மீண்டும் பிரிட்டிஷ் படைகளின் கைகளுக்கு சென்றது.
மேற்கூறிய சம்பவத்தில் நடந்திருப்பது என்ன ? காலனியாட்சிக்கெதிராக போராடும் சொந்த நாட்டு மக்களை கொன்றொழிக்க ஆயுதம் ஏந்த முடியாது என்று பிரிட்டீஷ் இராணுவத்தில் இருந்தாலும் இந்திய சிப்பாய்கள் தேசப்பற்றுடன் மறுத்திருக்கிறார்கள், அத்துடன் வெள்ளையாட்சிக்கெதிராக போராடும் மக்களோடும் தங்களை இணைத்து கொண்டிருக்கிறார்கள். பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் ஆணைப்படி இயந்திரங்களை போல துப்பாக்கிகளின் விசையை தட்டிவிட்டு போராடும் மக்களை கொல்லுவது அகிம்சையா அல்லது மக்களை கொல்ல மறுத்து ஆயுதங்களை கீழே போட்டது அகிம்சையா? எது அகிம்சை? இது நம்மைப் போன்ற சாதாரண ஆத்மாக்களுக்கே தெரியும் போது மகாத்மாவுக்கு தெரியாதா என்ன ? ஆனால் அகிம்சா மூர்த்தி ’மகாத்மா’ காந்தி கூறியது என்ன ? கீழ் கண்டவாறு தான் கூறினார்.
”இராணுவ சிப்பாயாக வேலைக்கு சேர்ந்த பிறகு இராணுவ அதிகாரி யாரை சுட்டுக் கொல்லச் சொன்னாலும் சுட வேண்டும் அது தான் அவனது கடமை. அப்படி செய்யவில்லை என்றால் அவன் கீழ்படிய மறுத்த பெருங்குற்றத்தைச் செய்தவன் ஆவான். அப்படி சுட்டுக் கொல்லச் சொன்ன பிறகும் அதை செய்ய மறுக்குமாறு நான் ஒரு போதும் கூற மாட்டேன். ஏனெனில் நான் அதிகாரத்தில் இருக்கும் போது இதே அதிகாரிகளையும் சிப்பாய்களையும் நான் பயன்படுத்திக் கொள்ள நேரிடலாம். இப்பொழுது நான் அவர்களை அவ்வாறு சுட மறுக்குமாறு கற்பித்தால் பின்னர் நான் அவர்களை சுடச் சொல்லும் போதும் இவர்கள் இதே போல கிழ்படிய மறுக்க நேரிடும் என அஞ்சுகிறேன்’’.
- (ஆதாரம்: பிரெஞ்சு பத்திரிக்கையாளர் சார்லஸ் பெட்ராஷ், கார்வாலிப் படை வீரர்கள் பற்றிக் கேட்ட கேள்விக்கு மகாத்மாவின் பதில்: மாண்ட்,பிப்ரவரி 20,1932)
மக்களை சுட மறுத்த இராணுவ வீரர்கள் தமது ’கடமை’யை செய்திருக்க வேண்டும், அதாவது வெள்ளையாட்சியை எதிர்த்து போராடிய மக்களை சிப்பாய்கள் துப்பாக்கியால் சுட்டு பொசுக்கியிருக்க வேண்டும் என்று கூறுகிற ஒரு காலனியாட்சியின் கைக்கூலியையா நீங்கள் மகாத்மா என்றும் தேசப்பிதா என்றும் அழைப்பீர்கள் ? இதற்கு பெயரா அகிம்சை ? இதற்கு பெயர் அடிவருடித்தனம், கைக்கூலித்தனம் என்கிறோம் நாங்கள். இல்லை இல்லை.. என்று மறுப்பீர்களானால் இந்த செயலுக்கு வேறு என்ன பெயரிட்டு அழைக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் கூற வேண்டும் …
கப்பற்படை எழுச்சியும் அயோக்கியத் திருவுருவின் அறிக்கையும்:-
1946 ம் ஆண்டு கப்பற்படை வீரர்களிடம் மாபெரும் எழுச்சி ஏற்பட்டது. தொழிலாளர்களும், மாணவர்களுமாக கிட்டத்தட்ட 30000 பேர் அந்த நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்ததில் ஈடு பட்டிருந்தனர், ஏறத்தாழ 20000 கப்பற்படை வீரர்கள் மும்பை நகரின் வீதிகளில் செங்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். “புரட்சி ஓங்குக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இறந்து படுக!” என்று விண்ணதிர முழங்கினர். கப்பற்படையின் 20 கப்பல்களை அவர்கள் முற்றுகையிட்டனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த போராட்டத்தை அடக்க இராணுவத்தை ஏவி விட்டது. ஆனால் இராணுவ வீரர்கள் கப்பல் படை வீரர்களை சுட மறுத்து விட்டனர். பிரிட்டிஷ் அட்மிரல் காட்பிரே “அரசாங்கத்தில் உள்ள அதிகபட்ச சக்தியை உபயோகப் படுத்துவேன். இதனால் கப்பற்படையே அழிந்தாலும் கவலை இல்லை” என்று கொக்கரித்தான்.முஸ்லீம் லீக் தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் போராட்டக் காரர்களைச் சாடுவதிலேயே குறியாக இருந்தனர்.
காந்தி ‘மகான்’ “இந்துக்களும் முஸ்லீம்களும் ‘புனிதமற்ற ஒரு கூட்டில் சேந்ததாக’ மக்களை சாடினார். அந்த எழுச்சியைக் கண்டு பயங்கரமாக அதிர்ச்சி அடைந்த தொடை நடுங்கி காந்தி அந்தப் போராட்டத்தை அடக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்தார்.
இது குறித்து தனது ஹரிஜன் இதழில் இந்த அகிம்சாவாதி எழுதியவை பின்வருமாறு:
”அந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் அது நாட்டைக் காலிகளின் கையில் கொடுத்திருக்கும். அந்த முடிவைக் காண்பதற்கு நான் 125 ஆண்டுகள் வாழ விரும்பவில்லை. மாறாக தீயிலிட்டு என்னை அழித்துக் கொள்வேன்” (ஆதாரம் : ஹரிஜன்: ஏப்ரல் 2, 1946).
காலனியாட்சியை எதிர்த்து விடுதலைக்காக போராடிய மக்களைப் பார்த்து ’காலி’கள் என்று கூறிய இந்த அயோக்கியரைத் தான் தேசப் பிதா என்று நமக்கு வரலாறு சொல்லித்தருகிறார்கள், எனினும் ஆளும் கும்பலால் சொல்லப்படுபவை மட்டுமே வரலாறு அல்ல, வரலாறு என்றைக்கும் ஒன்றாக மட்டுமே இருந்ததும் இல்லை. மேற்கூறியது தான் உண்மையான வரலாறு. நாளை இந்த வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ளும் இந்த நாட்டின் இளைய தலைமுறை தேசப்பிதாவை வெள்ளைக்காரனின் கைக்கூலி என்று சரியான அடைமொழியுடன் அடையாளம் கண்டு கொள்ளும்.
பகத்சிங்கை தூக்கிலிட நாள் குறித்த நல்லவர் :
மக்களை சுட்டுப்பொசுக்கு அது தான் உனது கடமை எனவே கடமையை செய் என்று வெள்ளைக்கார துரையை போல சிப்பாய்களுக்கு கட்டளையிட்ட இந்த அகிம்சா மூர்த்தி தான் பகத் சிங்கைத் தூக்கிலிட இர்வின் பிரபுவுக்கு நாள் குறித்துக் கொடுத்தார். அதாவது பகத் சிங்கைத் தூக்கிலிடுவதாக இருந்தால் லாகூர் மாநாட்டிற்கு முன்பே தூக்கிலிட்டு விடுமாறு இர்வினுக்கு கடிதம் எழுதியவர் தான் இந்த பாபுஜி. இந்த சம்பவத்தை காந்தியின் முதல் வாழ்க்கை வரலாறு நூலை எழுதிய பட்டாபி சீதாராமையா (காங்கிரஸ்) (காந்தியால் நேதாஜியை எதிர்த்து காங்கிரஸ் தலைமைக்கு களமிறக்கப்பட்டவை) தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்த பஞ்சாப் மக்கள் காந்தியை எதிர்த்து பல ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். காந்திக்கெதிராக நடந்த இந்த ஒவ்வொரு ஆர்ப்பாட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து இர்வின் கீழ்கண்டவாறு கூறினான
” மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக்கட்ட, பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர்” . (ஆதாரம்: Earl Of Birhenhead P. 305).
பிரிட்டிஷாரின் காலை நக்கியதை கையால் எழுதிய காந்தி:
முதல் உலகப்போரின் போது இந்த மகாத்மா தான் பிரிட்டிஷ் படைக்கு ஆட்சேர்ப்புக்கான கவுரவ தூதராக செயல்பட்டார் என்பது உங்களில் எத்தனை காந்தி ரசிகர்களுக்கு தெரியும் ? வெள்ளையனுக்கு எதிராக மக்கள் ஆயுதம் ஏந்திய போது அதை வன்முறை என்றும், அவர்களை காலிகள் என்றும் விஜயகாந்த் கணக்காக முகம் சிவந்து கூச்சல் போட்ட இந்த யோக்கியர் தான் வெள்ளைக்காரனுக்காக நமது நாட்டு மக்களை துப்பாக்கி தூக்கி போராடச்சொன்னார் ! இது கதையல்ல உண்மை, மேலும் வரலாறு. எனில் அந்த செயலுக்கு என்ன பெயர் வைக்கலாம் ? இதற்கு பெயர் தான் மாமா வேலை என்பது ! இது குறித்து காந்தி மாமா கூறிய வசனம் பின்வருமாற
”ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் இதோ ஒரு பொன்னான வாய்ப்பு, பயன்படுத்திக் கொள்ளுங்கள்“
இவ்வாறு துண்டுப் பிரசுரங்களின் மூலம் பிட்டீஷாருக்காக தனது மாமா வேலையை செய்தார் இந்த அகிம்சாமூர்த்தி.
அடுத்ததாக இரண்டாம் உலகப் போரில் தனது பிரிட்டிஷ் கைக்கூலித்தனத்தை பின்வருமாறு வெளிப்படுத்திக்கொண்டார்.
”நான் அவருக்கு(பிரிட்டிஷ் வைசிராய்) பிரிட்டிஷ் பாராளுமன்றமும் அமைச்சரவைத் தலைமையகமும் அழிக்கப்படக்கூடிய வாய்ப்பு பற்றிய சித்திரத்தை விளக்கிய போது நெஞ்சுருகிப் போனேன்” இவ்வாறு நெக்குருகி எழுதியுள்ளார் தனது ஹரிஜன் இதழில் (ஹரிஜன், செப்.5, 1939).
இதே காலகட்டத்தில் இவர் உதிர்த்த முத்துக்கள் “ நாங்கள் பிரிட்டனுடைய அழிவிலிருந்து எங்களுடைய சுதந்திரத்தைத் தேடவில்லை”. அது தவிர பிரிட்டன் நியாயத்திற்காக போராடுவதாகவும் அதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
”ஆகையால் நான் எப்போதும் சுதந்திரத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் பிரிட்டனும் பிரான்சும் வீழ்ந்து விட்டால் என்ன ஆகும் ?” – (ஹரிஜன் – செப்.9, 1939)
இப்படி வாயை திறந்தாலே காலனியவாதிகளுக்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவுமே வார்த்தைகளை துப்பிக்கொண்டிருந்த காந்தி தான் நமக்கு தேசப்பிதாவா ? இப்படிப்பட்ட ஒர் வெள்ளை ஆட்சியின் அடிமையா நமக்கு தேசத்தந்தை ? இப்பேர்பட்ட ஒரு மாமாவா நமக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்திருக்க முடியும் ?
மேலும் சில நற்செய்திகள் :
காந்தி உண்ணாவிரதம் இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதிகப் பட்சம் எத்தனை நாட்கள் இருந்திருப்பார் ? இன்றைய கருணாநிதியைப் போன்று ஒரு சிறு நாடகம் நடத்துவார். அதற்குப் பெயர் தான் உண்ணாவிரதம். காந்தி எப்பொழுதெல்லாம் உண்ணாவிரதம் இருந்தார் என்று உற்று நோக்கினால் மிகத் தெளிவாகத் தெரிவது ஒன்று தான். எப்பொழுதெல்லாம் மக்கள் போராட்டம் அவர் கையை மீறி கட்டுக்கடங்காமல் போகிறதோ அப்பொழுதெல்லாம் அதை நீர்த்துப் போக வைக்க அங்கேயே உடனடியாக ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிப்பார். உண்ணாவிரத பந்தலிலேயே காந்தி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவார். மக்களோ காந்திக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்து போய் போராட்டங்களை கைவிட்டுவிட்டு இந்த கைக்கூலிக்காக காத்திருப்பார்கள். பிறகு காந்தி விடுவிக்கப்படுவார். மீண்டும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் வெடிக்கும் உடனே காந்தி மறுபடியும் பந்தலுக்கு வந்து விடுவார், காவலர்களும் கைது செய்து மீண்டும் சிறையிலடைப்பார்கள். மக்களும் போராட்டங்களை கைவிட்டுவிட்டு காந்திக்காக காத்திருப்பார்கள். கடைசி வரை இதே கதை தான். காந்தியின் இந்த பித்தலாட்டம் செல்லுபடியாகாமல் அம்பலப்பட்டுப்போனது கப்பற்படை எழுச்சியின் போது தான்.
உண்ணாவிரதம் என்று நாம் அறிந்த வரையில் மேற்கண்ட வகையில் உலகத்தையே ஏமாற்றி வந்த காந்தியின் உண்ணாவிரதம் ஒன்று, இன்னொன்று இன்று வரைக்கும் ஓட்டுப்பொறுக்கிகள் இருக்கும் உண்ணாவிரதம். இவை இரண்டைத் தவிர வேறு உண்மையான உண்ணாவிரதத்தைப் பற்றி எங்காவது எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா அல்லது படித்திருக்கிறீர்களா ? இல்லை என்றால் இப்போது கேட்டுக்கொள்ளுங்கள்.
பகத்சிங்கும் அவரது தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டம் ஒரு வீர காவியம். உண்ணாவிரதம் இருப்பதிலும் கூட காந்தி எப்படி ஊரை ஏமாற்றிய ஏமாற்றுக்காரர் என்பதை அறிய வேண்டுமானால் தோழர்களின் உண்ணாவிரதத்தை பற்றி நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவு செய்த பிறகு ஒவ்வொரு தோழரும் குறைந்தது பத்து நாட்கள் வரை சோறு தண்ணியின்றி கிடக்கிறார்கள். அதற்கு மேல் உடல் நிலை ஒத்துழைக்காமல் பல தோழர்கள் சுய நினைவை இழக்கிறார்கள். தோழர் ஜதீந்திர நாத் தாஸ் மட்டும் தொடர்ச்சியாக 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சுய நினைவை இழந்து இறுதியில் 13.09.1929 அன்று காலமாகிறார். அன்று தோழருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை (அன்றைய இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்) கிட்டத்தட்ட 7 லட்சம் பேர். இறுதி ஊர்வலத்தின் போது காந்திக்கெதிரான முழக்கங்களும், கோஷங்களும் வின்னைப்பிளந்தன. அன்று அவருடைய புகழைப் பாடாத பத்திரிக்கைகளே இல்லை. ஆனால் இந்த அகிம்சாமூர்த்தி காந்தியோ அவரைப் பற்றி ஒரு இரங்கல் அறிக்கை கூட வெளியிடவில்லை . வெள்ளைக்காரனுக்கு காலை நக்க நாக்கை வெளியே தொங்க விடும் இந்த நாய் சுதந்திரப் போராட்ட வீரனுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.
காந்தி என்கிற இந்த நரியால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட போராட்டங்கள் தான் எத்தனை எத்தனை ? காட்டிக் கொடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிகள் தான் எத்தனை எத்தனை ?..
1946 ஜனவரியில் நடந்த விமானப் படை எழுச்சி ,கப்பற்படை எழுச்சி, ஜபல்பூர் சிப்பாய்கள் கலகம், பெஷாவர் கார்வாலிப் படை எழுச்சி, தெலுங்கானா விவசாயிகள் போராட்டம் என நீண்டு கொண்டே போகும்.
சுதந்திரம் வந்தது:
2ம் உலக போரால் சிதறி சின்னாபின்னமான ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தனது இராணுவ பலத்தை முற்றிலும் இழந்திருந்தது. காலனியாட்சிக்கெதிராக பிரிட்டீஷ் இராணுவத்திற்குள்ளேயே இருந்த இந்திய வீரர்கள் தமது முழு எதிர்ப்பையும் காட்டினர். மக்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கி போராடினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பிரிட்டிஷ் அரசால் முடியவில்லை. இது குறித்து அப்போதைய கிழக்கிந்திய பிராந்தியத் தளபதியாக இருந்த லெப். ஜெனரல் சர்.பிரான்ஸ் டகர் என்பவன் தனது “ நினைவிருக்கும் வரை, பக்.518 ” புத்தகத்தில் “நமது நாட்டின் (இங்கிலாந்து) தொழில் தேவையை விட அதிகமாக நமது இராணுவக் கடமை இருந்ததையும், போண்டியாகிப் போன நமது நாட்டின் பலத்தை மீறியதாக இது இருந்ததையும் நாம் இறுதியில் கண்டோம். இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு அதுவும் விரைவாக வெளியேறியதற்கு இது மிக முக்கியமான மற்றொரு காரணமாகும்” என்று குறிப்பிட்டிருப்பது கத்தியின்றி இரத்தமின்றி வெட்கமின்றி பெற்ற சுதந்திரத்திற்கு மற்றுமொரு சான்றாகும்.
மக்களின் தன்னெழுச்சியைக் கண்டு அஞ்சி அலறிய மவுண்ட் பேட்டனின் இந்தியப் படைத் தளபதி லார்டு இஸ்மாய் கூறுகையில் “ 1947 மார்ச்சில் இந்தியா இருந்த நிலைமை வெடி குண்டுகளால் நிறைக்கப் பட்டு நடுக்கடலில் இருக்கும் ஒரு கப்பலில் தீப்பிடித்துக் கொண்டதை போல இருந்தது. நெருப்பு அந்த குண்டுகளை நெருங்கும் முன் அதை அனைக்க வேண்டிய பிரச்சனை முன்னே நின்றது. எனவே நாங்கள் செய்ததைத் தவிர வேறு மாற்று செய்வதற்கில்லை.” என்று கூறினான்.
இத்தகைய சூழ்நிலையில் தான் அதிகாரத்தை தனது இந்திய ஏஜண்டுகளான கங்கிரஸ் துரோகக் கும்பலின் கையில் கொடுத்து விட்டு சென்றனர் ஆங்கிலேயர்கள்.
மேற்கூறியவை அனைத்தும் காலனியாட்சி காலத்தில் நிகழ்ந்த கொடுமைகளில் கடுகளவு மட்டுமே. ஒரு நெல்லிக்கனி அளவுக்கு தெரிய வேண்டுமானால் “கீழைக்காற்று” வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் ”காந்தியும் காங்கிரசும் – ஒரு துரோக வரலாறு” என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.
காந்தியின் அரசியல் வாழ்க்கையை அம்பலப் படுத்தினாலே இவ்வளவு வருகிறதே, அவரது சொந்த வாழ்க்கை வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறினால் காறி உமிழத் தான் தோன்றும். இன்னும் அவர் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் செய்த கொடுமைகளைச் சொன்னால் பக்கங்கள் பத்தாது.
இனிமேலாவது இந்தியாவின் விடுதலைப்போராட்ட வரலாறு குறித்த முடிவுகளை, உண்மைகளை பாட புத்தகங்களில் தேட மாட்டீர்கள் என்று நம்புகிறோம

Sunday, March 20, 2016

ஆலயப் பிரவேசம்

மதுரை வைத்தியநாதய்யர் என அறியப்படும் இவர் இந்திய விடுதலைப்போராட்ட வீரர்.
பொருளடக்கம் [மறை]
1 இளமைப்பருவம்
2 சுதந்திரப் போராட்டத்தில்
3 சுதந்திரப் போராட்டத்தில் குடும்பம்
4 தீண்டாமை ஒழிப்பு
5 மறைவு
6 அஞ்சல் தலை
7 ஆதாரம்
8 வெளி இணைப்புகள்
தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணாம்பேட்டையில் அருணாசலம் அய்யர்-லட்சுமி அம்மாள் மகனாகப் பிறந்த வைத்தியநாதய்யர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும், மதுரைக் கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தார். பின்னர் வழக்கறிஞர் ஆனார்.
தீண்டாமை ஒழிப்பு
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆதரவுடனும்
ஆலயப் பிரவேசம் நடத்தப்பட்டது. மீனாட்சியம்மன் கோவில் நிர்வாக அதிகாரியும் ‘பச்சைக்கொடி‘ காட்டினார். அர்ச்சகர்கள் மத்தியில் இத்தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
8.7.1939-ல் காலை 10 மணிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆதரவுடன் , அரிசன தேவாலய ஊழியர் முத்து என ஐந்து அரிசன சமூகத்தினரும். விருதுநகர் நகராட்சி உறுப்பினராக இருந்த எஸ்.எஸ்.சண்முக நாடாருடன் சேர்ந்து ஆறு பேர் வைத்திய நாதய்யருடன் ஆலயத்தில் நுழைந்து வணங்கினர்

காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் பலி உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது




காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் பலி ஆனார். அவரது
 உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. 

கார்கில், 

காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில் சியாச்சின் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் பலி ஆனார்கள்.

பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள்

அதே போன்ற ஒரு சம்பவம் அங்கு மீண்டும் நடந்து உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பிராந்தியத்தில் கடந்த 17-ந் தேதி இரவு 10.45 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது சில இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. கார்கில் பகுதியில் 17 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ள ஒரு ராணுவ சாவடியின் மீது பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன.

இதில் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 2 ராணுவ வீரர்கள் சிக்கினார்கள். சரிந்து விழுந்த பனிப்பாறைகள் அவர்களை சிறிது தூரம் இழுத்துச் சென்றன. இதனால் வெளியே வர முடியாமல் பனிப்பாறைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். அவர்களால் வெளியே வர முடியவில்லை.

மீட்புப்பணி

இது பற்றிய தகவல் கிடைத்ததும் அந்த இடத்துக்கு ராணுவ மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் மற்றும் ரேடார் கருவியின் உதவியுடன் அவர்கள் இருவரையும் மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். 

சுஜித் என்ற சிப்பாய் பனிக்கட்டி குவியல்களுக்கு அடியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக வீரர் பலி

இதற்கிடையே, மற்றொரு வீரரை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டனர். ஆனால் அவரை உயிருடன் மீட்க முடியவில்லை. பனிக்கட்டி குவியலுக்குள் 12 அடி ஆழத்தில் புதைந்து கிடந்த அவரை நேற்று மீட்புக்குழுவினர் பிணமாக மீட்டனர்.

பனிச்சரிவில் சிக்கி பலியான அந்த வீரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரது பெயர் கே.விஜயகுமார் (வயது 23). சிப்பாய் ஆக பணிபுரிந்து வந்த விஜயகுமார் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வல்லராமபுரத்தைச் சேர்ந்தவர்.

இவரது தந்தை பெயர் கருத்தபாண்டி தேவர். விவசாயம் செய்து வருகிறார். தாயார் பெயர் முத்துக்குட்டி அம்மாள். பிளஸ்-2 வரை படித்துள்ள விஜயகுமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராஜேஷ்வரி, சுமதி என்ற இரு தங்கைகள் உள்ளனர். இருவரும் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார்கள்.

ராணுவ அதிகாரி தகவல்

விஜயகுமார் கடந்த 2014-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். சென்னையில் ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் போது அவர் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் அதே வல்லராமபுரத்தைச் சேர்ந்த வெள்ளதுரை, ரமேஷ், ராஜா, மகேஷ் ஆகியோரும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இவர்கள் 5 பேரும் கார்கில் அருகே உள்ள கன்னா சவுக் என்ற இடத்தில் பணியாற்றி வந்தனர். 

சில தினங்களுக்கு முன் விஜயகுமார் தவிர மற்ற 4 பேரும் சொந்த ஊரான வல்லராமபுரத்துக்கு வந்தனர். விஜயகுமார் மட்டும் வரவில்லை. இந்த நிலையில் அவர் பனிச்சரிவில் சிக்கி பலியாகி விட்டார்.

நேற்று முன்தினம் இரவு ராணுவ அதிகாரி ஒருவர், விஜயகுமார் பனிச்சரிவில் சிக்கி இருப்பதாகவும், அவரை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். விஜயகுமாரின் உடல் மீட்கப்பட்ட தகவல் நேற்று மதியம் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.

பெற்றோர் கதறல்

விஜயகுமார் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். விஜயகுமாரின் போட்டோவை கட்டிப்பிடித்தவாறு தாயும், தந்தையும் கதறி அழுதது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

விஜயகுமாரின் தங்கை ராஜேஸ்வரி சோகம் தாங்காமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள், அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

விஜயகுமாரின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க ராணுவ அதிகாரிகள் ஏற்பாடு செய்து உள்ளனர். விஜயகுமாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக வடக்கு பிராந்திய ராணுவ தளபதி டி.எஸ்.ஹூடா கூறினார்.

விஜயகுமாரின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நடைபெற உள்ளது.

விஜயகுமாரின் தாய்மாமனார் சண்முகையா கூறியதாவது:-

தந்தையுடன் பேசினார்

எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நாட்டுக்காக சேவையாற்ற வேண்டும் என்ற உணர்வுடன் ராணுவத்தில் சேர்ந்து வருகிறார்கள். வல்லராமபுரத்தைச் சேர்ந்த 50-க் கும் மேற்பட்டோர் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். உள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்த விஜயகுமார் பிளஸ்-2 வரை நடுவக்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தான். மேற்கொண்டு படிக்காமல், ராணுவ வேலைக்கு செல்ல வேண்டும் என்று முயற்சித்து, சிப்பாயாக ராணுவத்தில் சேர்ந்தார்.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஊரில் நடந்த கோவில் விழாவுக்கு வந்திருந்தார். கடைசியாக கடந்த 17-ந் தேதி தன்னுடைய தந்தையுடன் செல்போனில் பேசி இருக்கிறார். அதன் பிறகுதான் பனிச்சரிவில் சிக்கி இருக்கிறார். விஜயகுமார் இறந்துவிட்ட சம்பவம் எங்கள் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Saturday, March 19, 2016

தேவர் உருவ படத்தை சட்டசபையில் வைத்த தாழ்த்தப்பட்ட மொக்கையன் M.L.A

தேவர் உருவ படத்தை சட்டசபை யில்வைத்த தாழ்த்தப்பட்ட மொக்கையன்  M.L.A



Friday, March 18, 2016

காந்தி கணக்கு


தேவருக்கு ஒரு சிலை நிறுவியவர்ஐயா,மூக்கையாதேவர்,


மதுரை கோரிப்பாளையத்தில் பசும்பொன்னாருக்கு வானுயர்ந்த சிலையை
நிறுவியவர்ஐயா,#மூக்கையாதேவர்,

மதுரையில் கோரிப்பாளையத்தில் வைகைக் கரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு ஒரு சிலை அமைக்க இவர் ஏற்பாடுகளைச் செய்து இன்றும் கம்பீரமாக அங்கு நாம் பார்க்கும் சிலையை நிறுவினார்.

தேவர்தந்ததேவர்" ஐயா,#மூக்கையாதேவர்

கள்ளர் முரசு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது மிகப்பெரிய அநியாயம். கடவுள் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிர, சாதியையும் நிறத்தையும் அல்ல... சாதியும், நிறமும் அரசியலுக்கும்கிடையாது... ஆன்மிகத்திற்கும் கிடையாது...'' என்பது முத்துராமலிங்கத் தேவரின் தாரக மந்திரம்.முத்துராமலிங்கத் தேவரின் வாழ்வியல், ஒவ்வொரு அரசியல் அபிமானிகளுக்கும் ஓர் அரிச்சுவடி...அந்த வகையில் அவர் ஒரு தேசியத் தலைவராகத் திகழ்ந்தார்

Thursday, March 17, 2016

தேவர் இன தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துகள் கள்ளர் முரசு







பசும்பொன் தேசிய கழகத்தலைவர் அண்ணன் N.ஜோதி முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !!!
நலமுடன் வளமுடன் திகழ்ந்திட தேவர் அருள் புரியட்டும். 
நல்வாழ்த்து
உங்கள் அரசியல் பணி சிறக்க வாழ்த்துகள்...
கள்ளர் முரசு








தேவர் ஐயாவின் உண்மை வரலாற்றை உரக்க சொல்லும்
ஐயா V.S நவமணி 
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !கள்ளர் முரசு
பிறந்த இனத்திற்காக வாழ்வை 
அர்பணித்த மாபெரும் தலைவர் ஐயா V.S நவமணி
நாட்டின் மீதே பற்று...
நாற்காலியின் மீதல்ல.பசும்பொன்தெய்வம்.. கள்ளர் முரசு





ஜனவரி1பிறந்தநாள் 
கானும் தேவரினபாதுகாவலரும்
உசிலைத்தொகுதி சட்டமன்றஉறுப்பினரும்
பாசத்திற்குரியஅண்ணன் 
பி.வி.கதிரவன் M.L.A
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !!!கள்ளர் முரசு

தேவர்

தேவர் திருமகனாருக்குப் புகழ் மகுடம் சூட்டுவதற்கு, மரியாதை செலுத்துவதற்கு பக்திப் பரவசத்தோடு உலவியதையும் கண்டு, பதவி மகுடங்களைத் தேடாமல், வந்த பதவிகளையும்கூட நாடாமல், அதிகார பீடங்களை அலங்கரிக்காமல்
, இன்றைக்குச் சரித்திரத்தில் கோடிக்கணக்கான மக்கள் போற்றுகின்ற ஒரு தலைவனாக தேவர் திருமகனார் திகழ்கிறார்!
பதவிகள் புகழை நிலைநாட்டாது, நிலைக்கச் செய்யாது. உண்மையும், நேர்மையும், உழைப்பும், தன்னலமற்ற மக்கள் பணியும்தான் நிலைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டான ஒரு தலைவர் தேவர் திருமகனார்!

SR.தமிழன்.... MA LLB (((ஒரு சகாப்தம்))) ]


]



தேனி மாவட்ட மயிலாடும்பாறை அருகில் உள்ள கோரையூத்து .... என்ற கிராமத்தில் திரு.செவ்வாலைராஜா அவர்களின் மூத்த மகனாக பிறந்த.... தமிழன் சிறுவயது முதலே.... தனது கிராம விளையாட்டு குழுக்களும் தன்னுடன் பயிலும் மாணவர்களுக்கு தலைவனாக செயல்பட்டவர்....சிறுவயது முதலே சமுதாய மீது மிகுந்த அக்கறை கொன்டவராக விளங்கினர் பின்பு... MA படிப்பினை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முடித்தவர் பின்பு தனது சட்ட படிப்பினை பெங்களூர்வில் தொடங்கினர்..... இதற்கிடையே...தனது சமுதாய சமூக பணிகளை தொடங்கும் பெருட்டு.... தேனி மாவட்ட பிரமலை கள்ளர் சங்கத்தில் தன் இனைந்து கொன்டு அச்சங்க செயல்படுகளில் திறன்பட மேற்கொன்டு .... அச்சங்க உறுப்பினர்களிடமும் நன்மதிப்பினை பெற்று... சங்கம்த்தின் பல்வேறு நிர்வாக பெறுப்புகளை வகித்தார்..... தேனி மாவட்ட பிரமலை கள்ளர் சங்கதினை தேனி மாவட்ட முழுவதும் பரவியிருக்கிற கள்ளர் சமுதாய மக்களை ஒருகினைத்து சங்கத்தினை வளர்ச்சி பாதைக்கு இட்டு சென்றார்...

. இது இவரின் அரசியல் பணி அடித்தலம் அமைந்த .... இதை தொடந்து.... 2006 ல் BT அரசகுமாரின் திராவிட விழிப்புணர்ச்சி கழகத்தில் இனைத்த SR. தமிழன் அக்கட்சியின் தேனி மாவட்ட செயலாளரக நியமிக்கபட்டார் பின்பு... 2009 ல் தனது கட்சியினை சேர்ந்த ஆயிரம் மேற்பட்டோருடன்.. அகிலஇந்திய ஃபார்வர்டு ப்ளாக கட்சியில் தமிழ் மாநில பொதுசெயலர் PV. கதிரவன் முன்னிலையில் ஃபார்வர்டு கட்சியில் இனைந்து தனக்கே உறித்தான பானியில் திறன்பட செயல்பட்டு ஃபார்வர்டு ப்ளாகினை தேனி மாவட்டம் முழுவதும் பாரவ செய்தார்...... 2010 ல் இவரின் அதிதீவிர செயல்படுகளை பார்த. மாநில தலைமை... தேனி மாவட்ட பொது செயலராக நியமித்தது.....



 இதனை தொடந்து இவரின் செயல்பாடுகளினால் தேனி மாவட்டத்தில் கிட்ட தட்ட. எல்லா கிராம நகரங்களில் புலி கொடி பட்டொளி வீசி பறக்க தொடங்கியது....... 2011-ல் பல ஆயிரம்கானக்கான மக்களை திரட்டி அகிலஇந்திய ஃபார்வர்டு ப்ளாகின் மாவட்ட மாநாட்டினை சிறப்பாக நடத்தினர்..இந்த மாநாட்டு நிகழ்வுக்கு பின்பு..தேனி மாவட்ட தேவரின மக்களின் கவனம் இவர் மேல் முழுவதும் திரும்பியது.... தொடர்ந்து.... இவர் தனது துடிப்பான. கட்சி பணிகளாள்.... மாநில இளைஞரணி செயலராக 2012 ல் நியமிக்கபட்டார்.... பின்பு 2013 சென்னையில் நடைபெற்ற அகிலஇந்திய ஃபார்வர்டு ப்ளாகின் அகில இந்திய மாநட்டில் மத்திய குழு உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். தொடந்து தேனி மாவட்ட முழுவதும் ஊராட்சி பேரூராட்சி நகரம் ஒன்றிய. தொகுதி செயலார்களை நிமித்து கட்சியின் பலபடுத்தினர்... 




இவரின் இச்செயல்பாடு தேனி மாவட்ட திராவிட கட்சிகளுக்கு அச்சத்தினை ஏற்படுத்தியது....தேனி மாவட்டத்தில் தேவரின சமுதாய மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் எந்த நேரமாக இருந்தாலும் நேரடியாக வந்தது திர்த்து வைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு தேவரின இளைஞர்களின் வரவேற்பினை பெற்றார்.. 





அது மட்டுமில்லாமல் தேனி மாவட்ட பொதுமக்களின் வாழ்வதார ஆக்கபூர்வமான. அடிப்படை பிரச்சனைகளை தனக்கே உறித்தன போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று அதில் வெற்றியும் கண்டுள்ளார்....அதில் பொதுமக்களுக்கு அதிகம் பயன்படும் மருத்துவம் குடிநீர் திட்ட சாலைகள் விவசாயிகளின் பிரச்சனைகள் முல்லைபெரியார் பிரச்சனைகள்... மற்றும் கேரளா தமிழ்ர்களுக்கான அதரவு போராட்டங்கள் ஆகிய பல்வேறு மக்கள் அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி தனது அரசியல் பணிகளை மேற்கொன்டார்.....

இவரின் வளர்ச்சியினை கண்டு....சீரணிக்க முடியாத அதிகாரவர்கம்.... இவர் மீது பல்வேறு பெய் வழக்குகளை... போட்டு.. கடந்த சிலமாதங்களுக்கு முன் சிறையில் அடைத்தது..... இவரினை சிறையில் அடைத்ததினை அறிந்த 2000 மேற்பட்ட பொதுமக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஏதிர்பினை காட்டி பின்பு 7 நாட்களில் விடுதலை செய்யபட்டார்.... 



பின்பு இவரின் மக்கள் நல போராட்டங்கள் தேனி மாவட்ட முழுவதும் அதிதீவிரமாக... செயல்பட தொடங்கினார்...ஃபார்வர்டு ப்ளாக மட்டுமல்லாமல் தேனி மாவட்ட இடதுசாரி கட்சிகள் நாம்தமிழர். தேமுதிக.. பாரதிய ஜனதா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட அரசியல் கட்சிகள் பல சமுதாய அமைப்புகள் முன்னெடுக்கும் மக்கள் அடிப்படை பிரச்சனைகளுக்கு இவர் இனைந்து களம் கன்டார்......இதனை தொடர்ந்து அனைத்து சமுதாய மக்களிடையே ஒரு இனக்கமான சமத்துவ சூழ்நிலை உருவானது...,,, 







தேனி மாவட்டத்தில் அனைத்து சமுதாய ஆதரவு பெருகியது ..... இதை பெறுத்து கொள் முடியாத.. .. அதிகாரவர்கம் தொடர்ந்து இவரின் கட்சி மாநில பொதுசெயலர் மூலமாக. இவர் முன்னொடுக்கும் போராட்டகளுக்கு முட்டுக்கட்டை போட்டது....... இதை மீறி தனது மக்கள் நல போராட்டங்களை தொடர்ந்ததின் விளைவாக இவர் சார்ந்த. கட்சி மாநில பொதுசெயலர் அதிகாரவர்கத்தின் ஆழுத்த்தின் காரணமாக கட்சி அனைத்து பெறுப்புகளில் இருந்து நீக்கியாதாக அறிவித்தார் .. இந்த அறிவிப்பினை.... தொடந்து அகில இந்திய ஃபார்வர்டு தமிழ் மாநில தலைவர் PKM. முத்துராமலிங்கம் ஃபார்வர்டு ப்ளாகின் தமிழக பொதுசெயலர் தன்னிச்சையாக. SR.தமிழனை நீக்கியது செல்லாது என அறிவித்தார் 



இந்த உட்கட்சி மோதல்கள் இடையே கல்கத்தாவில் நடைபெற்ற மத்திய குழுவின் கூட்டத்தில் தீர்வு கானபட்டு SR தமிழன் நீக்கம் செல்லாது என மீண்டும் அறிவிக்கபட்டது. .... கூட்டத்தினை வெற்றியுடன் முடித்துவிட்டு.. தனது சட்டபடிப்பு தேர்வு எழுத பெங்களூர்வில் தங்கியிருந்த. SR.தமிழன் 26.12.14 அன்று அதிகாலை மாரடைப்பால் மரணம்.... அடைந்தார்..






ஒரு மாவீரன் மக்கள் நல தொன்டன் முக்குலத்து காவலனின் மறையா புகழினை நாம் தலைவணங்கி போற்றுவோம்......! தமிழா.... தமிழா.....! நீ மீண்டும்.... .........,! இவ் மண்வுலகில் மனிதனாக..... ! பிறக்க..........! எல்ல வல்ல இறைவனை வேண்டுகிறோம்.......! மீழ முடியாத ஆழ்ந்த துயரத்தில் கனத்த இதயத்துடன். களளர் முரசு



கள்ளர் முரசு மாத இதழ் சார்பில் S.R.தமிழன்முதலாமாண்டு நினைவு நாளில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது


விவசாயிகள் தினம்

நாடு முழுவதும் இன்று
விவசாயிகள் தினம்

இன்று தேசிய விவசாயிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் அனைத்து விவசாயிகளுக்கும் வயல்வெளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.
உலக அளவில் உணவுத் தட்டுபாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில் எதிர்காலம் விவசாயிகள் கையில் என்பதை வலியுறுத்தியும், உணவு பாதுகாப்பையும் வலியுறுத்தியும் டிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினமாக கொண்டாப்படுகிறது.இந்தியாவின் மறைந்த பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் 1979 முதல் 1980 வரை பிரதமர் பதவி வகித்தார்.

(விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தகக் கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன.)

வணக்கத்துக்குரிய விவசாய பெருமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
கள்ளர் முரசு

MGR

வாழ்ந்தவர்கள் கோடி. மறைந்தவர்கள் கோடி. மக்கள்மனதில்என்றும் நிற்ப்பவர் ஒருவர்தான்.

நம்மாழ்வார்

இயற்கை வழி வேளாண் அறிஞர் பசுமை போராளி 
கோ.நம்மாழ்வார்  


தனது வாழ்நாளில் அலோபதி மருத்துவத்தை வேண்டாம் என்று ஒதுக்கியவர், கடந்த மூன்று ஆண்டுகளாக அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஆர்வம்காட்டினார். அதில் நிறையக் கற்றுக்கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.
#நம்மாழ்வாருக்கு நல்ல குரல் வளம். வயலில் இறங்கிவிட்டால் பாட்டு தானாக வந்துவிடும். பட்டுக்கோட்டையாரின் தத்துவப் பாடல்கள், பாரதியின் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?’ போன்றவை அவர் அடிக்கடி ராகமிட்டுப் பாடும் பாடல்கள்.
#நம்மாழ்வார் பகலில் பெரும்பாலும் உறங்குவது இல்லை. அவர் துயில் எழுந்தால் அது அதிகாலை 4.30 மணி என்று உறுதியாகச் சொல்லலாம். எழுந்ததும் வேப்ப மரப்பட்டையால் பல் துலக்கிவிட்டு, தலைகீழாக நின்று சிரசாசனம் செய்வார். பிறகு, மூச்சுப் பயிற்சி. அதன் பின்தான் அவரது வழக்கமான அலுவல்கள் தொடரும்.
#கடைசி வரை இளைஞர்களை அதிகம் நம்பினார் நம்மாழ்வார். கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது வானகம் பண்ணையில் சுமார் 6,000 இளைஞர்கள் இயற்கை விவசாயப் பயிற்சியை முடித்திருக்கிறார்கள்.
#காந்தியைப் போன்றே மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர், கடும் பனிக்காலத்திலும்கூட சட்டை அணிய மாட்டார்.
#வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைப் போராட்டங்களிலும் பயணங்களிலுமே செல விட்டார். எங்கு சென்றாலும் பேருந்து, ரயில் என பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தினார்; மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்தினார். அவரது நண்பர்கள், நலம்விரும்பிகள் அவருக்கு கார் வாங்கித் தர முன்வந்தும் “என்னால முடிஞ்சவரைக்கும் சூழல் கேட்டைக் குறைச்சுக்குறேனே” என்று தவிர்த்துவிட்டார்.
#அவர் தனது வாழ்க்கைத்துணை சாவித்திரியை 50 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஒருமையில் அழைத்தது கிடையாது. “வாங்க… போங்க” என்று மரியாதையுடன்தான் அழைப்பார்.
 கள்ளர் முரசு

தெய்வத்திருமகனார்



தெய்வத்திருமகன்’ இப்பெயரை கேட்டால் உங்களுக்கு என்ன நினைவிற்கு வருகிறது.
தமிழகத்தில் உள்ளவர்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வருமென்றால் ‘
தெய்வத்திருமகனார் பசும் பொன் முத்துராமலிங்க தேவர்’ என்னும் முழுபெயரும் தான் ஞாபகத்துக்கு வரும்.
கள்ளர் முரசு

இன்று சர்வதேச வேட்டி தினம்:

இன்று சர்வதேச வேட்டி தினம்: தமிழக ஆண்களின் பாரம்பரிய உடை ‘வேட்டி’
தமிழர்கள் பண்டைய காலங்களில் இருந்தே ஆடை அணியத் தொடங்கியதோடு, தங்களின் ஆடைகள் குறித்த கலாச்சாரத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டினர். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் வழித்தடத்தில் ரோமானியர்களுக்கே ஆடை அனுப்பி நாகரிகத்தின் நளினத்தை வெளிப்படுத்தியவர்கள் நம் தமிழர்கள். அத்தகைய ஆடை பாரம்பரியம் கொண்ட தமிழர்களின் அடையாளமாக நீண்ட காலமாக நின்று நிலைத்தது வேட்டியாகும். வேட்டி தமிழர்களின் ஆடைமரபின் அழகான வெளிப்பாடாகும்.
ஒருவர் அணிந்திருக்கும் ஆடையை அடிப்படையாகக் கொண்டு, அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர், எந்தச் சமயத்தைச் சார்ந்தவர், எத்தகைய தட்பவெப்ப நிலையில் வாழ்கின்றவர் என்பன போன்றவற்றை அறிய இயலும். அதோடு மட்டுமல்லாமல், ஒருவர் அணியும் ஆடை அவரது பண்பாட்டை வெளிப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அந்த நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் வெளிபடுத்தும்.
வேட்டி உடுத்துவோம்... தமிழக ஆண்களின் உடை கலாச்சாரத்தை வெளிப்படுத்துவோம்...
கள்ளர் முரசு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (30 10 1908 ~30 10 1963)

தேவரவர்கள் தெய்வபக்தி மிகுந்த ஆன்மீக இயல்பு கொண்டவர்;

இஸ்லாமிய செவிலித்தாயிடம் வளர்ந்ததும்,

கிருத்துவ பள்ளிகளில் படித்ததும்,

செல்வந்தரான நிலச்சுவான்தாரராக இருந்தும், விவசாயிகள் சங்கம் அமைத்ததும்,

தொண்டுக்கு ஏற்றது துறவறமே’ என்று வாழ்ந்ததும்,

பிரிட்டீஷ் அரசு இவருக்கு வாய்ப்பூட்டு சட்டம் விதித்ததும்,

அது போதாது என்று காங்கிரஸ் அரசாங்கமே, இவரை ஒரு கிரிமினல் வழக்கில் 18 மாதம் உள்ளே தள்ளியதும்,
விடுதலை ஆனவுடன், பாதுகாப்பு சட்டத்தின் கீழே உள்ளே தள்ளியதும்,

தேவர், காமராஜருக்கு) ‘வரி செலுத்தி வாக்காளராக்க வழி வகுத்தார்;

சட்டசபை/நாடாளுமன்ற தேர்தல்களில் வாகை சூடியதும்,
.
, தான் பிறந்த அக்டோபர் 30ம் தேதியே, 1963ல் மறைந்ததும் சாமான்ய விஷயங்கள் அல்ல.

மனிதக்கடவுள்

மனிதக்கடவுள்
மனிதராக அவதரித்தார்
தெய்வமாக அருள் புரிகிறார் !!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

தமிழகத்தை சேர்ந்த இந்திய சுதந்திர போரட்ட தியாகி


அமீர் ஹம்சா INA அவர்கள்பெரும் வர்த்தக குடும்பத்தில் பிறந்த தமிழர் அமீர் ஹம்சா ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை இந்திய தாய் நாட்டை விட்டு விரட்ட தனது 21 வயதில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அக்காலத்தில் லட்சக்கணக்கில் நேதாஜிக்கு நன்கொடை வழங்கியுள்ளார் இவர் தனது இறுதி காலத்தில் கடும் வறுமையில் வாடினார். இவர் சென்னையில் காலமானார். இவரது தந்தையார் பர்மாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். நேதாஜியின் மீது மிகுந்த அன்பு கொண்டவராக விளங்கியவர் அமீர் ஹம்சா. 1943ல் பர்மாவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சென்ற போது ரங்கூனில் நடைபெற்ற விழாவில் தனக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை ஏலம் விட்டார். அப்போது அம்மாலைகளில் ஒன்றை மூன்று லட்சம் ரூபாக்கு ஏலத்தில் எடுத்தவர் அமீர் ஹம்சா. ஒருமுறை இந்திய தேசிய ராணுவத்தில் அமீர் ஹம்சா பணியாற்றியதைப் பாசத்தின் காரணமாக அவரது தந்தை விரும்பவில்லை. இரண்டு நாள் அவரை வீட்டில் பூட்டிவைத்துவிட்டார். இதனை அறிந்த நேதாஜி அமீரையும் அவரது தந்தையையும் அழைத்து வரச்செய்தார். நாடு சுதந்திரம் அடைய வேண்டிய அவசியத்தை உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்தார். நேதாஜியின் உரையாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட இவரது தந்தையார், தனது சட்டைப் பையிலிருந்த காசோலைப் புத்தகத்தை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான ஒரு காசோலையை எழுதி நேதாஜியிடம் கொடுத்ததோடு தன் மகனையும் முழுமையாக நேதாஜியிடம் ஒப்படைத்தார். இவரும் இவரது தந்தையாரும் நேதாஜியின் இந்திய இராணுவத்திற்காக பல லட்சக்கணக்கான ரூபாய்களை வாரி வழங்கினார்கள். இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இது தொடர்பான வழக்கு லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்றது. காந்திஜி உள்ளிட்டவர்கள் இவரது விடுதலைக்காக வாதாடியதின் காரணமாக மரண தண்டனையிலிருந்து தப்பினார். தமிழகத்தை சேர்ந்த இந்திய சுதந்திர போராட்ட தியாகி “அமீர் ஹம்சா” அவர்கள் (03.01.2016) இரவு காலமானார்