Thursday, March 17, 2016

இன்று சர்வதேச வேட்டி தினம்:

இன்று சர்வதேச வேட்டி தினம்: தமிழக ஆண்களின் பாரம்பரிய உடை ‘வேட்டி’
தமிழர்கள் பண்டைய காலங்களில் இருந்தே ஆடை அணியத் தொடங்கியதோடு, தங்களின் ஆடைகள் குறித்த கலாச்சாரத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டினர். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் வழித்தடத்தில் ரோமானியர்களுக்கே ஆடை அனுப்பி நாகரிகத்தின் நளினத்தை வெளிப்படுத்தியவர்கள் நம் தமிழர்கள். அத்தகைய ஆடை பாரம்பரியம் கொண்ட தமிழர்களின் அடையாளமாக நீண்ட காலமாக நின்று நிலைத்தது வேட்டியாகும். வேட்டி தமிழர்களின் ஆடைமரபின் அழகான வெளிப்பாடாகும்.
ஒருவர் அணிந்திருக்கும் ஆடையை அடிப்படையாகக் கொண்டு, அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர், எந்தச் சமயத்தைச் சார்ந்தவர், எத்தகைய தட்பவெப்ப நிலையில் வாழ்கின்றவர் என்பன போன்றவற்றை அறிய இயலும். அதோடு மட்டுமல்லாமல், ஒருவர் அணியும் ஆடை அவரது பண்பாட்டை வெளிப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அந்த நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் வெளிபடுத்தும்.
வேட்டி உடுத்துவோம்... தமிழக ஆண்களின் உடை கலாச்சாரத்தை வெளிப்படுத்துவோம்...
கள்ளர் முரசு

No comments:

Post a Comment