தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது ஆத்மார்த்த குருவாக “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்” அவர்களை தன் நெஞ்சில் ஏற்றுக்கொண்டார்
நேதாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம்.
இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும். அதிக நீளம் என கருதி நம் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பயணித்து விடாதீர்கள்.
தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது…
இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர்
“இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்” என்று நேதாஜி அறைக்கூவல் விடுத்தார்.
அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாயாவிலும் பர்மாவிலும் இருந்த தமிழின மக்கள் இந்திய தேசிய ராணுவத்தில் உயிரை பொருட்படுத்தாமல் இணைந்தனர். பல உயர் பதவிகளிலும் இருந்தனர்.
அரக்கான் போரில் பல தமிழர்கள் வீர மரணம் அடைந்தனர். மடிந்த ஒவ்வொரு தமிழனும் தான் உயிர் போகும்வரை போராடியதாக நேதாஜியிடம் சொல்லுங்கள் என்று அருகில் இருந்தவரிடம் உயிர் பிரியும் வலியோடு கூறிவிட்டு வீரமரணம் அடைந்தார்கள்
No comments:
Post a Comment