Sunday, July 30, 2017

புரட்சி நாயகன் நேதாஜி...

புரட்சி நாயகன் நேதாஜி...
எனக்கு ரத்தம் கொடுங்கள்,
உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்"
என கூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய ஈடு இணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர். அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது.
சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துகொண்ட
நேதாஜி ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.
ஜெய்ஹிந்த்!!கள்ளர் முரசு

நம்மாழ்வாரின் இறுதி உரையும்... நெடுவாசல், டெல்லி போராட்டங்களும்...! நம்மாழ்வார் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

நம்மாழ்வாரின் இறுதி உரையும்... நெடுவாசல், டெல்லி போராட்டங்களும்...!
நம்மாழ்வார் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு
“காவிரி பாசனப்பகுதிதான் தமிழ்நாட்டுல இருக்கிற அத்தனை பேருக்கும் சோறு போடுது. வீரநாராயணம் ஏரியிலே காவிரித்தண்ணியை நிரப்பி, அங்கிருந்துதான் சென்னையிலே இருக்குறவன் தண்ணி குடிக்கிறான். கூட்டுக் குடிநீர் திட்டம்னு சொல்லி திருப்பூர்ல இருக்குறவன் காவிரித்தண்ணி குடிக்கிறான். ராமநாதபுரத்துல இருக்குறவன் காவிரித்தண்ணி குடிக்கிறான். மொத்தம் தமிழநாட்டுல இருக்குற மக்கள்தொகையிலே மூணுல ரெண்டு பேரு, காவிரிப் படுகையிலே வாழ்க்கை நடத்திக்கிட்டிருக்காங்க. இது, இவங்களுக்குப் பிசினஸ் எல்லாம் கிடையாது. பிசினஸா இருந்தா, இதை விட்டுட்டு என்னைக்கோ ஓடியிருப்பாங்க. தங்களோட தேவையைக் குறைச்சுக்கிட்டு, வீட்டுக்குத் தேவையானதை அதுல செஞ்சுக்கிட்டு காலம் தள்ளிக்கிட்டுருக்காங்க. மீத்தேன் எடுக்குற திட்டம் தஞ்சாவூர், திருவாரூர் பிரச்னை இல்லை. தமிழ்நாட்டுப் பிரச்னை. இந்தத் திட்டம் வந்தா தமிழ்நாடே சோறு இல்லாம, தண்ணி இல்லாம சுருண்டு பாலைவனமாப் போயிரும்” - இதுதான் தமிழகத்தின் வேளாண் திசைவழியைக் காட்டிய, இளைஞர்களைச் சூழலியலுக்காகப் போராட ஊக்கியாக இருக்கும் தமிழ் பெருங்கிழவர் நம்மாழ்வார் நிகழ்த்திய உரை. இதுதான் மீத்தேன் போராட்டக் களத்தில் அவரது இறுதி உரையும் கூட.
நம்மாழ்வாரின் பூத உடல் இன்று நம்மோடு இல்லாமல் இருக்கலாம்... ஆனால், இந்த உரை எந்தச் சூழலில் நிகழ்த்தப்பட்டதோ... எந்த வார்த்தைகள் எந்தப் பொருளின் பின்னணியில் உச்சரிக்கப்பட்டதோ... அந்தச் சூழலும், பொருளும் இன்னும் அப்படியே இருக்கிறது. இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசவேண்டுமென்றால், அந்தப் பெருங்கிழவனின் காலத்துக்குப் பின்னால், சூழல் இன்னும் மோசமாகத்தான் ஆகி இருக்கிறது. நெடுவாசல், காவிரி டெல்டா மரணங்கள், டெல்லி ஜந்தர் மந்தர் எனக் காவிரியுடன் பின்னிப்பிணைந்த தமிழரின் வாழ்வு தூர்த்துப்போன நட்டாற்றில் நிற்கிறது. ‘காவிரிதான் எங்கள் வாழ்வு... காவிரிதான் எங்கள் வளம்... காவிரிதான் எங்கள் நாகரிகம்’ என தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக வாசலிலும்... டெல்லி ஜந்தர் மந்தரிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
சரி... இதற்கெல்லாம் என்ன தீர்வு...?. எளிமையான தீர்வு இருக்கிறது. அது நம்மாழ்வாரை முழுமையாகப் புரிந்துகொள்வது. முதலில் நெடுவாசல் மற்றும் டெல்லி போராட்டம் பின்னணியில் நம்மாழ்வாரைப் புரிந்துகொள்வோம்.
“மீத்தேனை ஆதரித்த வெண்தாடிக்காரர்!”
நம்மில் பெரும்பாலானவர்கள் புரிந்துகொண்டதுபோல அந்த வெண்தாடிக்காரர் மீத்தேனை எதிர்க்கவில்லை... சொல்லப்போனால் மீத்தேன் வேண்டுமென்றார். அவர் சொன்னது, ''இருக்கின்ற மீத்தேன் வாயுவை எடுக்காதீர்கள்... அதைப் புதிதாக உற்பத்தி செய்யுங்கள்'' என்றார். அதை எப்படி உற்பத்தி செய்யவேண்டுமென்ற வழிகளையும் தனது இறுதி உரையில் எளிமையாக எடுத்துச் சொன்னார்.
அவர் சொன்னது இதுதான், “எல்லார் வீட்டிலேயும் மாடு இருக்குது. எல்லார் வீட்டிலேயும் சாணியோடத்தான் பழகிட்டுருக்கோம். காயம்பட்டதுனா அதுல சாணியை எடுத்துத் தடவுனா ரத்தம் ஒடுறது நின்னுப்போச்சு. சாணி மருந்தாவே இருக்குது, இந்தச் சாணியைப் புடிச்சு அருகம்புல் சொருகுனோம்னா அது கடவுளாவே ஆகிப்போச்சு. ஒவ்வோர் ஐந்தாண்டுத் திட்டத்துலேயும் வீடுகளுக்குப் பின்னால் சாண எரிவாயுக்கலன் போட்டுட்டே இருந்தாங்கன்னா, எல்லோருக்கும் மீத்தேன் வந்திரும். அது இப்படிப் பூமியிலே துளைச்சு எடுக்குறதைவிட மிக அதிகமா இருக்கும்”.
ஆனால், இதை எந்த அரசுகளும் விரும்புவதில்லை... விரும்பவும் செய்யாது. ஏனெனில், இந்தத் திட்டம் எளிமையானது, சாமான்ய மக்கந்த் தன்னிறைவாக்குவது. அரசுகள் எளிமைகளையும், உண்மைகளையும், மக்கள் தன்னிறைவாகுவதையும் எப்போதும் விரும்புதில்லை. எளிமையிலிருந்தும் உண்மையிலிருந்தும் பெரும்பணம் பண்ண முடியாது என்பது பெரும் நிறுவனங்களின் நலனை மட்டுமே விரும்பும் நம் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் நன்கு தெரியும். அவர்கள் இந்த எளிய திட்டத்தை உதாசீனம் செய்தார்கள்... செய்கிறார்கள். அதனால்தான், மக்கள் போராட்டத்துக்குபின்னும், நெடுவாசலைத் தாரைவார்க்கத் துடிக்கிறார்கள்... ஹைட்ரோ கார்பன் திட்டதுக்காகக் கையெழுத்திடுக்கிறார்கள்.
“டெல்லி போராட்டமும்... நம்மாழ்வாரும்”!
நம்மாழ்வார், 'விவசாயிகள் அனைவரும் அரசியல் பழக வேண்டும், விழிப்படைய வேண்டும், போராட வேண்டும்' என்று விரும்பினார். ''விவசாயிகள் நல்வாழ்வில்தான் சமூகத்தின் எதிர்காலம் இருக்கிறது. அதனால் அவர்கள் நலனுக்காகச் தமிழ்ச்சமூகம் உடன் நிற்க வேண்டும்'' என்று பேசினார். இன்று நம்மாழ்வார் இருந்திருந்தால், நிச்சயம் அவர் நம் குடியானவர்களுடன் டெல்லி ஜந்தர் மந்தரில்தான் இருந்திருப்பார். அவர்களுடன் கோஷம் போட்டு இருப்பார்... ஆனால், அதே நேரம்... அங்கு விவசாயிகள் வைக்கும் சில கோரிக்கைகளையும் மாற்றி இருப்பார். ஆம், நம்மாழ்வார் நதிகள் இணைப்பு என்னும் ஏமாற்றுத் திட்டத்துக்கு எதிரானவர். அதற்குச் செலவு செய்யும் பெருந்தொகையை... உள்ளூர் நதிகளை... ஏரிகளை... குளங்களைப் புதுப்பிக்க பயன்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து பேசிவந்தவர். இன்று அவர் இருந்திருந்தால், நிச்சயம் அந்த விவசாயிகளுடன் உரையாடலை நிகழ்த்தி... இதைப் புரியவைத்திருப்பார். போராட்டத்தை இன்னும் வீரியமாக முடுக்கிவிட்டிருப்பார்.
“நாம் என்ன செய்யவேண்டும்?”
சரி... நாம் என்ன செய்ய வேண்டும்? அந்தத் தமிழ்த் தாத்தா சொற்களைவிடச் செயலை விரும்பியவர். உண்மையில், அவரது பிறந்தநாளை அவருக்குப் பிடித்த வழியில் கொண்டாட வேண்டுமென்று விரும்புவோமாயின்... நாம் செயலில் இறங்க வேண்டும். ஆம், அந்தப் பெருங்கிழவர் மீத்தேனை எப்படி உற்பத்தி செய்ய வேண்டும் என்று அனைவருக்குமான எளிய வழியைச் சொன்னார்தானே... அதை ஒரு சிறிய இடத்தில் செயல்படுத்திக் காட்ட வேண்டும். இயன்றால் நெடுவாசலிலேயே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திக் காட்ட வேண்டும். இந்த எளிய திட்டத்தை அரசு செயல்படுத்திவைக்க அரசியல்வாதிகளுக்கு நிர்பந்தம் தரவேண்டும்
அடுத்து, காவிரிக்கான போராட்டம் ஏதோ தஞ்சாவூர்க்காரர்கள் போராட்டம் இல்லை என்று புரியவைக்க வேண்டும். சென்னைக்காரர்களும் காவிரிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள் என்று புரியவைக்க வேண்டும். இதற்காக மக்களுடன் ஒரு தொடர் உரையாடலை நிகழ்த்த வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, நாம் நம் நுகர்வையும் குறைத்துக்கொள்ள வேண்டும்!
ஆம், நண்பர்களுடன் உரையாடும்போது நம்மாழ்வார், “நம்முடைய மேற்குத் தொடர்ச்சி மலையில் உயர்ந்திருந்த நெடுமரங்களையெல்லாம் சரித்துவிட்டு, குட்டைத் தேயிலையையும் காபிக்கொட்டையையும் பயிரிட்டு நமக்குப் பானமாக விற்றுக்கொண்டிருக்கிறார்கள். காடுகளைக் களைந்துவிட்டு மழை வரவில்லையென்று புலம்புகிறோம். இன்று உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் ஒவ்வொருமுறை தேநீர் பருகும்போதும் வெட்டிச் சரிக்கப்பட்ட மரங்களின் நினைவு, உங்கள் மண்டையில் பேரிடியாய் இறங்கவேண்டும்” என்றிருக்கிறார்.
இதை நாம் அப்படியே உள்வாங்கிக்கொள்ள வேண்டும்... ஆற்றின் அழிவில், மணல் கொள்ளையில்... நம் நுகர்வுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து, நுகர்வைக் கூடுமானவரையில் குறைத்துக்கொள்ள வேண்டும்.
முதல் பத்தியில் அவருடைய இறுதி உரையைக் குறிப்பிட்டிருந்தேன்தானே... அது எந்தச் சூழலில் நிகழ்த்தப்பட்டது என்று சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்... அந்த உரை நிகழ்த்தப்பட்டபோது, அவர் தீவிரமான உடல்நலக் கோளாரில் போராடிக்கொண்டிருந்தார்.. உரை நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும்போதே அவர் முதுகில் இருந்த கட்டி உடைந்து ரத்தமாக வழிந்தது. ஆனால், அந்தப் பெருங்கிழவர் அதைப் பொருட்படுத்தவில்லை... அவர் எதை உண்மை, மக்கள் நலன் என்று நினைத்தாரோ... அதை அந்த வலிகளின் போதும் உரக்கப் பேசினார். எல்லாவாற்றையும்விட இது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியப் பாடம். ஆம், மக்களுக்காக உழைக்கும்போது எதிர்வரும் துயர்களைத் துச்சமாகப் புறந்தள்ளி முன்னேறிச் செல்லவேண்டும்.
இவற்றைத்தான்... இவற்றை மட்டும்தான் அந்தப் பெருங்கிழவர் விரும்புவார்.

பெருங்காமநல்லூரில்,மதுக்கூர் ராமலிங்கம் வீரவணக்கம் செலுத்தினார்.

3.4.2017 அன்று உசிலம்பட்டி அருகேயுள்ள பெருங்காமநல்லூரில்
1920ல் வெள்ளைய ஏகாதிபத்திய துப்பாக்கிகளுக்கு அஞ்சாமல் எதிர்த்து போரிட்டு சீறிப்பாய்ந்த தோட்டாக்களை தங்கள் மார்பிலே உள்வாங்கி உயிர்நீத்த வீரத்தமிழின தியாகிகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக
மதுக்கூர் ராமலிங்கம் வீரவணக்கம் செலுத்தினார். .
கள்ளர் முரசு சார்பாக நிறுவனர் சுரேஷ்குமார் , ஆசிரியர் தியாகராஜன் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்கள்
ஜெய்ஹிந்த்!!
கள்ளர் முரசு

இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி,அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடக்க இருந்த உலக ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள மன்னருக்கு அழைப்பு வந்தது.விவேகானந்தர் சிகோகோ செல்வதே சிறந்தது என்று மன்னர் முடிவு செய்தார்.

இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி. இவர் ஆன்மீகத்தில் அறிவாற்றல் மிக்கவராகவும் சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்லவராகவும் திகழ்ந்தார். அதனால் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடக்க இருந்த உலக ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள மன்னருக்கு அழைப்பு வந்தது.
இந்த அழைப்பு மன்னருக்கு வந்த வேலையில்தான் விவேகானந்தர் இராமநாதபுரம் வந்திருந்தார். விவேகானந்தருக்கும் மன்னருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அறிமுகம் நட்பாக மாறியது. நட்பு விவேகானந்தரிடம் மன்னரை பக்தி செலுத்த வைத்தது.
விவேகானந்தர் அறிவாற்றலும், ஆன்மீகச் சிந்தனையும் தெளிந்த பார்வையும், தேர்ந்த ஞானமும் மன்னரை வியக்க வைத்தது. அதனால் தம்மைவிடச் சிறந்தவரான விவேகானந்தர் சிகோகோ செல்வதே சிறந்தது என்று மன்னர் முடிவு செய்தார். முடிவை விவேகானந்தரிடம் தெரிவித்தார். யோசித்துச் சொல்வதாகச் சொல்லிவிட்டு விவேகானந்தர் மன்னரிடம் விடைபெற்றார்.
அதன்பின் தாம் அமெரிக்கா செல்வதாக விவேகானந்தர் சென்னையிலிருந்து அறிவித்தார். அதையறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார்.
1893 மே 31 அன்று அமெரிக்கா புறப்பட்ட விவேகானந்தர், ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் உள்ள சிகாகோவை அடைந்தார்.
உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்,அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார் . பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி. விவேகானந்தரின் பாதங்கள் தன் தலையில் பட்ட பிறகே தரையைத் தொடவேண்டும் என முழங்காலிட்டு அமர்ந்த சேதுபதி மன்னரின் செயலை மறுத்து அவரை ஆரத் தழுவினார் விவேகானந்தர்
கொழும்புவிலிருந்து பாம்பனுக்குக் கப்பலில் வந்திறங்கிய சுவாமி விவேகானந்தரை ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி வரவேற்று, தேரில் அமரவைத்து, குதிரைகளை அவிழ்த்துவிட்டுத் தானும், தன் பரிவாரங்களும் சேர்ந்து கொண்டு, அத்தேரை இழுத்துக் கொண்டுபோனார். கல்கத்தாவிலிருந்து சென்னைக்குப் புகைவண்டியில் பயணமான விவேகானந்தரின் தரிசனத்தைப் பெற்றே ஆக வேண்டும் என்ற வெறியில், மக்கள் வெள்ளம் தண்டவாளங்களில் அமர்ந்து, புகைவண்டி நிற்காத இடங்களில் எல்லாம் அவ்வண்டியை நிற்கச் செய்தது.
பாம்பன் வரவேற்பு விழாவில் பேசிய விவேகானந்தர், “உலக சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று பாஸ்கர சேதுபதி தனக்கு வந்த அழைப்பிதழை என்னிடம் கொடுத்து, என்னை கலந்துகொள்ள வலியுறுத்தினார். இடையறாது என்னைத் தூண்டி முழு உதவியும் செய்து வழியனுப்பினார். இதுவரை வெளியுலகு அறியாது சாதாரணத் துறவியாக இருந்த என்னை உலகறிய உலக ஞானியாக மாற்றியவரும் பாஸ்கர சேதுபதியே. இந்த நல்ல பணிக்கு இந்திய நாடே கடமைப்பட்டுள்ளது. இந்து மதத்திற்கு என்னால் ஏதேனும் நன்மை உண்டாகுமானால் அதன் சிறப்பனைத்திற்கும் பாத்திரமானவர் சேதுபதி” என்று தமது அருகில் இருந்த பாஸ்கர சேதுபதி மன்னரை நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டி மகிந்தார் விவேகானந்தர்.
இந்தச் சம்பவம் நடந்து நூறாண்டுகள் கழித்து விவேகானந்தர் இந்தியா வந்திறங்கிய பாம்பன் குந்துகால் பகுதியில் நினைவிடம் கட்ட வேண்டும் என பணிகளை ஆரம்பித்தபோது விவேகானந்தர் நினைவிடத்திற்குரிய இடம், மண்டபம் மரைக்காயர்களின் உரிமையில் இருந்தது.
ராமகிருஷ்ண தபோவனத்தில் இருந்து நிலத்தை விலைக்குக் கேட்டு மண்டபம் மரைக்காயர் குடும்பத்தினரை அணுகினார்கள். ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பல தலைமுறைகளாக நெருக்கமாக இருந்துவந்த மண்டபம் மரைக்காயர் குடும்பத்தினர் பாஸ்கர சேதுபதியின் வழியைப் பின்பற்றி இலவசமாகவே ஐந்து ஏக்கர் நிலத்தை அளித்து நினைவிடம் கட்ட அனுமதித்தனர். பின்னர் 2009 ஆம் ஆண்டு விவேகானந்தர் இல்லம் திறக்கப்பட்டது. இந்த இடத்தில் வருடந்தோறும் ஜனவரி 26 அன்று விவேகானந்தர் இந்தியா வந்திறங்கிய நாளை நினைவுகூறும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தேவர்

thevar  தேவர் 

பெருங்காமநல்லூரில் ,GM ஸ்ரீதர் வாண்டையார் வீரவணக்கம் செலுத்தினார். .

பெருங்காமநல்லூரில்
1920ல் வெள்ளைய ஏகாதிபத்திய துப்பாக்கிகளுக்கு அஞ்சாமல் எதிர்த்து போரிட்டு சீறிப்பாய்ந்த தோட்டாக்களை தங்கள் மார்பிலே உள்வாங்கி உயிர்நீத்த வீரத்தமிழின தியாகிகளுக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகம் கட்சி சார்பாக GM ஸ்ரீதர் வாண்டையார்
வீரவணக்கம் செலுத்தினார். .
மூவேந்தர் முன்னேற்ற கழகம் தலைவர்
GM ஸ்ரீதர் வாண்டையார் அவர்களுக்கு
கள்ளர் முரசு சார்பாக நிறுவனர் சுரேஷ்குமார் , ஆசிரியர் தியாகராஜன் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்கள்
ஜெய்ஹிந்த்!!
கள்ளர் முரசு

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் BJP க்கு டெபாசிட் கூட மிஞ்சாது என உளவுத்துறை தெரிவித்ததால்!!!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில்
BJP க்கு டெபாசிட் கூட மிஞ்சாது என உளவுத்துறை தெரிவித்ததால்!!!
ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து
பிஜேபி அரசுக்கு துணை போகும் தேர்தல் ஆணையம்!!!
தேர்தல் ஆணையம்: காலாவதியானதா? விலைபோனதா?

நிர்வாணமாக உருண்டது தமிழக விவசாயிகள்.. பறிபோனது நாட்டின் மானம்

நிர்வாணமாக உருண்டது தமிழக விவசாயிகள்.. பறிபோனது நாட்டின் மானம்
டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை காது கொடுத்து கேட்காமல் அவர்களை நிர்வாணப்படுத்தி மத்திய மோடிஅரசு வேடிக்கை பார்த்துவிட்டது. இதுதான் விவசாயிகளுக்கு பாஜக தரும் கௌரவமா?
29வது நாளாக தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம்... செவிடன் காதில் ஊதிய சங்குதான் பாஜக
டெல்லி: விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்காமல் அவர்களை நிர்வாணப்படுத்தி மத்திய அரசு கேவலப்படுத்திவிட்டது. இனி இந்தியாவை விவசாயிகள் நாடு என்று கூறுவதற்கு அருகதை உள்ளதா? விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 14-ஆம் தேதி முதல் 27 நாள்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வகையில் நூதன போராட்டங்களை நடத்தியும் அது பலனிக்கவில்லை.
விவசாயிகள் எலிக்கறி, பாம்புக் கறி உள்ளிட்டவற்றை சாப்பிட்டனர். அப்போதும் மோடி மனமிறங்கவில்லை. பின்னர் அரை மொட்டை , பாதி மீடை எடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடை கட்டி போராட்டம் மத்திய அரசு தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களை உயிரிழக்க நினைப்பதாக சித்தரித்து பாடை கட்டி ஊர்வலத்திலும் , ஒப்பாரி போராட்டத்திலும் ஈடுபட்டனர். எனினும் விவசாயிகளின் போராட்டம் குறித்து மோடி மௌனமாகவே இருந்தார். தாராள குணம் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணமாக போராடி வரும் வேளையில் வங்க தேசத்துக்கு கோடிக்கணக்கிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆனால் விவசாயிகளுக்கு அதிலிருந்து கிள்ளிக் கூட கொடுக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் 23 பேர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். ஏமாற்றம் இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வைப்பதாக கூறி டெல்லி போலீஸார் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 7 பேரை பிரதமர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றது. மோடி நாடாளுமன்றத்தில் இருந்தார். ஆனால் அவரை சந்திக்க விடாமல் அந்த அலுவலகத்தில் இருந்த ஒரு செயலாளரை போலீஸார் சந்திக்க வைத்தனர். இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். நிர்வாண போராட்டம் இதனால் 7 விவசாயிகளும் தங்கள் ஆடைகளை களைந்து விட்டு முழு நிர்வாணமாக சாலையில் விழுந்து புரண்டனர். அப்போது அங்கு வந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர். இதனால் விவசாயிகள் கடும் மனவேதனை அடைந்தனர்.
வேடிக்கை தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அறப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்காமல் மத்திய அரசு அவர்களை நிர்வாணமாக்கி வேடிக்கை பார்த்துவிட்டது.
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு பாஜக தரும் கௌரவம் இதுதானா. இனி இந்தியாவை விவசாயிகள் நாடு என்ற எந்த முகத்தை வைத்து கூறுவது. அதற்கு அருகதை உண்டா?
கள்ளர் முரசு
.

டெல்லியில் கடந்த 30நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள்

டெல்லியில் கடந்த 30நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள்,

காளிமுத்து - வாழ்க்கை குறிப்பு

காளிமுத்து - வாழ்க்கை குறிப்பு
1942-ம் ஆண்டு சிவகாசி அருகே உள்ள ராமுதேவன் பட்டியில் காளிமுத்து பிறந்தார். இவரது தந்தை பெயர் காளிமுத்து. தாயார் பெயர் வெள்ளையம்மாள். எம்.ஏ. பி.எச்.டி. வரை படித்து உள்ளார். தனது 13-வது வயதிலேயே காளிமுத்து மேடை பேச்சாளர் ஆனார். பசும் பொன்முத்துராமலிங்க தேவர் இவரது மேடை பேச்சை கேட்டு வியந்ததுடன் இவரை `மேடை மணி' என்றும் பாராட்டி உள்ளார்.தமிழக அரசியல் தலைவர்களில் மிகச் சிறந்த இலக் கிய-அரசியல் பேச்சாளர்களில் இவர் தனித்துவம் பெற்றவராக திகழ்ந்தார்.100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 10-க்கும் மேற் பட்ட புத்தகங்களையும் காளிமுத்து எழுதி உள்ளார். 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியல் சட்ட நகலை எரித்த தால் கைதானார். மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை சிறைகளில் இருந்தார்.1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுஎம்.எல்.ஏ. ஆனார். 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவை தொடங்கியபோது காளிமுத்துவும் அதி.மு.க.வில்பபசேர்ந்தார்.1977, 1980 ஆகிய ஆண்டு களில் நடந்த தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1984-ம் ஆண்டு மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆனார். 1989-ம் ஆண்டு சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.அமைச்சர்1977 முதல் 1980 வரை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சராகவும், 1980 முதல் 1984 வரை விவசாய துறை அமைச்சராகவும், 1984 முதல் 1987 வரை விவசாயம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகவும் இருந்தார்.அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராகவும் பதவி வகித்த காளிமுத்து கடந்த 2001-ம் ஆண்டு திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.இதையடுத்து அவர் சபா நயாகராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது அவர் வகித்து வந்த கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 2006 சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதி யில் அ.தி.மு.க. வேட்பாள ராக காளிமுத்து அறிவிக்கப் பட்டார். ஆனால் உடல் நலக்குறைவு காரண மாக அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.பின்னர் அ.தி.மு.க. அவைத் தலைவ ராக காளிமுத்து இருந்து வந்தார்.காளிமுத்துவுக்கு பொன் பாண்டி, குமாரவேல், ரவிச்சந்திரன், நல்லதம்பி, வீரபாண்டி என்ற 5 சகோதரர்களும், வாணி என்ற சகோதரியும் உள்ளனர்.காளிமுத்துவின் முதல் மனைவி நிர்மலா. அவர்களுக்கு டேவிட் அண்ணாத்துரை, ராஜன் என்ற மகன்களும், புனிதா, ரோஷி, வேதா என்ற மகள்களும் உள்ளனர்.2-வது மனைவி மனோகரி. இவர்களுக்கு மணிகண்டன், அருள்மொழிதேவன் என்ற மகன்களும், அருணா, கயல் விழி என்ற மகள்களும் உள்ளனர்.

பெருங்காமநல்லூரில் 1920ல் வெள்ளைய ஏகாதிபத்திய துப்பாக்கிகளுக்கு அஞ்சாமல் எதிர்த்து போரிட்டு சீறிப்பாய்ந்த தோட்டாக்களை தங்கள் மார்பிலே உள்வாங்கி உயிர்நீத்த வீரத்தமிழின தியாகிகளுக்கு காவல்துறைனார் ஆசிரியர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் வீரவணக்கம் செலுத்தினார்.

விவசாயிகளின் உணர்வுகளை முக நுவலில் பதிவுயிட்ட இளைஞயர்கள்

கடன்பட்டு கசட்டபட்டு எவன் பொழப்ளையும் மண் அள்ளிப்போடாம இதுவரை கண்ணியமாக உழைத்தது கொண்டு இருப்பவர்கள் விவசாயிகள் மட்டுமே..
வயல் வெளிகள் வரப்புகளை இழந்து
வேலிகளை எல்லையாக்கி
விலை பேசி விற்றபின் எங்கே விளையும் என்
முப்போக விளைச்சல்
#விவசாயிகள்
மழை நீர் இல்லாமல் பயிர் வாடியதே என்று அழும் போது தான் உணர்ந்தேன்...
என் கண்களிலும் கண்ணீர் வற்றிவிட்டதை...
#விவசாயிகள்...
விவசாயத்திற்க்கு
மழைத் துளிகள் மட்டுமே போதாது..
கொஞ்சம் விவசாயிகளின் வியர்வைத் துளிகளும் தேவைபடுகின்றன.
வறுமையில் வாழ்ந்தாலும் வருமானத்தை எதிர்பாராமல் செய்யும் தொழில் விவசாயம் மட்டுமே..!!
வசதி இல்லை என்றாலும் எங்களுக்கு வயகாட்டில் வேலை செய்வது தான் பெருமை
எங்கள் நிலை எண்ணி அழ நினைக்கும் போதுதான் தோன்றியது கண்ணீரும் வறண்டுவிட்டதென
தன் குடும்பத்திற்காக உழைக்கவே யோசிக்கும் இந்த காலத்தில் தன் குடும்பத்திற்கும் மேல் சமூகத்திற்கு தன் உயிரை தியாகம் செய்யும் தெய்வமே #விவசாயி
சேற்றிலே கால் வைத்தால் தான் சோற்றிலே கை வைக்கலாம் என்று வார்த்தைகளில் வாழ்க்கையைப்பற்றி சொன்னவன் தமிழன்
#விவசாயம் இல்லைன்ன நாடு இல்லை #விவசாயி கஷ்டப்படுத்துறது நாடே இல்லை
அடுத்தவுங்க வயிறு நிறைவதற்காக தன்னை தானே வருத்திக்கொண்டு போராடும் ஒரே ஜீவன் .. #விவசாயி..!
வயலில் வேர்வை சிந்தி பணமாக்கவில்லை.... உணவாக்குகிறோம். #விவசாயி
உடுத்திய உடையின்றி தெருவிலே நின்றும் தீர்வு கிடைக்கவில்லை! தேசத்தின் முதுகெலும்பு - #விவசாயி #விவசாயம் - #வஞ்சிக்காதே
சாப்பிட்டால் தான் உயிர் வாழ முடியும் விவசாயம் இருந்தால் தான் நீங்கள் சாப்பிடா முடியும்..!! #விவசாயி
பசித்தவர்க்கு உணவு வழங்கிய முதல் மனிதாபிமானி.. #விவசாயி
பணம் மட்டும் கண்டுபிடிக்காமல் முந்தைய காலமுறை போல் பண்ட மாற்றுமுறை இருந்தால் , உலகில் மிகப்பெரிய பணக்காரன் #விவசாயி
கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு.. அரிசியும் பருப்பும் அருவடை செஞ்சு அடுத்தவங்களுக்கு அனுப்புவான். #விவசாயி
#நாம்_வாழ இரவு பகல் பாராமல் வெயிலிலும் #மழையிலும்பாடுபடுபவனுக்கு பெயர் #விவசாயி இல்ல #விசுவாசி
ஒவ்வொரு அரிசியிலும் தனதுபெயரை எழுதாமல் அடுத்தவர் பெயரைஎழுதிக் கொடுக்கும் இறைவனின்பெயர் #விவசாயி
பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இருக்கு ஆன உணவை சம்பதிக்க விவசாயம் மடடும் தானே இருக்கு..!! #விவசாயி
#ஒற்றுமை எங்கிருக்கிறதோ, அங்கேதான் #வெற்றி எப்போதும் இருக்கிறது. ஒற்றுமையுடன் விவசாயிகளுக்காக போராடுவோம் #விவசாயி #விவசாயி_சாகணுமா
ஒரு தாய் பிரசவத்தின் போது உணர்கின்ற உயிர்போகிற வலியின் வேதனையை போலவே, தான் பயிர்செய்து அது நீரில்லாமல் கருகும் போது உணருகிறான் #விவசாயி
அதைவிட கொடியது பசிக்கு உணவு கொடுத்தவனை கொல்வது #விவசாயி
நெல் நட்டேன் விலையில்லை... கரும்பு நட்டேன் விலையில்லை... வாழை நட்டேன் விலையில்லை.. ப்ளாட் போட்டு கல் நட்டேன் விலை கிடைத்தது.. #விவசாயி..
பழைய சோறு உண்டு பசுமை வயலுக்கு நீர் பாய்ச்சி புது நெல்லை நமக்கு தரும் #கடவுள் தான் #விவசாயி..
ஏர் உழுவான் விதை விதைப்பான்
பயிர் அறுப்பான் உணவின்றி தவிப்பான் அவன்தான் #விவசாயி
உலகில் தோன்றிய முதல் உணர்வு பசி.. பசித்தவர்க்கு உணவு வழங்கிய முதல் மனிதாபிமானி.. #விவசாயி.
மழை மேக கூட்டங்கள் கண்டால் மயில் நடனமிடுவது அழகு மழைத்துளி மண்ணில் வீழ்ந்தால் விவசாயி ஆனந்தமடைவது பேரழகு! #விவசாயி #விவசாயம்
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணம் உடையோன்
வியர்வை சிந்தி உழைத்துச் சாப்பிடுவோரின் மனது சொல்லும் இது ஒரு #விவசாயி ன் உழைப்பு என்று.....
கடவுள் கொடுத்த உடலுக்கு, உயிர் கொடுத்தவன் #விவசாயி கை விட்றாதிங்க
#விவசாயி இல்லாத நாடு நிச்சயம் சுடுகாடு ஆக கூடும் 😡😭
#சோறு
இதுல இருக்குற கால
எடுத்தா சேறு
#அதுல நாங்க கால வைச்சாதான்
உங்களுக்கு சோறு
#விவசாயியை எதிர்குறவன் கடவுளை எதிர்பதற்கு சமம்
#விவசாயி
#விவசாயி தன் #வாழ்க்கையில் முதன் முதலாக அனைவரும் #அன்னார்ந்து பார்க்கும்படியான காரியத்தை செய்தான் வீட்டு முற்றத்தில்
#தூக்கில்_தொங்கியபடி
#விவசாயம் இல்லைன்ன நாடு இல்லை #விவசாயி கஷ்டப்படுத்துறது நாடே இல்லை
அடுத்தவுங்க வயிறு நிறைவதற்காக தன்னை தானே வருத்திக்கொண்டு போராடும் ஒரே ஜீவன் .. #விவசாயி..!
உடுத்திய உடையின்றி தெருவிலே நின்றும் தீர்வு கிடைக்கவில்லை! தேசத்தின் முதுகெலும்பு - #விவசாயி
கள்ளர் முரசு
நன்றி வணக்கம்

முக நூல் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் கள்ளர் முரசு

முக நூல் நண்பர்கள் அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் கள்ளர் முரசு

தேவர் சிலை திறப்புவிழாவில் அம்மா அவர்கள் பேசியது:

பசும்பொன்_ஐயா மீது மிகுந்த பற்றும்,மரியாதை கொண்ட தங்கதாரகை அம்மாஅவர்கள்
சென்னை நந்தனம்
தேவர் சிலை திறப்புவிழாவில்
அம்மா அவர்கள் பேசியது: நான் பிறந்தது வேறு எங்கோ இருந்தாலும், ஆனால் என்னை வளர்த்தது, வாழ வைத்தது எல்லாமே தேவர் இனம் தான் தேவர் பெருமகனாரின் சிலையை திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன், நான் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் புகழுக்கு வலு சேர்ப்பேன், என்று சிங்கம் போல் கர்ஜித்த(வ) ர்..., தரணி போற்றும் தங்கதாரகை அம்மாஅவர்கள்.

ஆங்கிலேயரை கதிகலங்க வைத்த‍ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

ஆங்கிலேயரை கதிகலங்க வைத்த‍ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர போராட்ட வீரர்கள் தலைவர்
'நேதாஜி' என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார்.'இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!' என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: ஜனவரி 23, 1897
இடம்: கட்டாக், ஒரிசா மாநிலம், இந்தியா
பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர்.
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
இந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, ஒரு வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதரர்களும் மற்றும் ஆறு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும், தாய் ஒரு தெய்வபக்தி மிக்கவராகவும் இருந்தனர்.
ஆரம்ப வாழ்க்கை
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், தன்னுடைய ஆரம்பக் கல்வியை, கட்டாக்கிலுள்ள "பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில்" தொடங்கினார். பின்னர், 1913ல் "கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில்" தன்னுடைய உயர் கல்வியை முடித்த அவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங்கினார். சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை ஆர்வமுடன் படித்தும் வந்தார். 1915 ஆம் ஆண்டு "கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில்" சேர்ந்த அவர், "சி.எஃப் ஓட்டன்" என்ற ஆசிரியர், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை சொன்னதால், ஏற்பட்ட தகராறால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர், "ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்" சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919 ஆம் ஆண்டு ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க லண்டனுக்கு சென்றார். ஐ.சி.எஸ் தேர்வில் நான்காவது மாணவனாக தேர்ச்சிப்பெற்றார். 1919ல் நடந்த 'ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்', சுபாஷ் சந்திர போசை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு, 'ரெஜினால்ட் டையர்' என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல், லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வரவும் செய்தது.
திருமண வாழ்க்கை
பாரத நாட்டின் விடுதலைக்காக வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி அவர்களுக்கு, ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது, இவர்களின் சந்திப்பு பிறகு காதலாக மலர்ந்து டிசம்பர் 27, 1937 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு, அணிதா போஸ் என்ற மகளும் பிறந்தார்.
சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்கு
'தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்ய கூடாது' எனக் கருதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி.ஆர் தாசை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார். 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது. இதனால் வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடுவுசெய்தது. "கொல்கத்தா தொண்டர் படையின்" தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது.
சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர் தாஸ் மற்றும் நேருவும் கருதினர். ஆனால், காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் எதிர்த்தனர். இதனால் காந்திக்கும், தாசுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து பிரிந்தார் சி.ஆர் தாஸ், அவர் "சுயாட்சிக் கட்சியை" தொடங்கியது மட்டுமல்லாமல், "சுயராஜ்ஜியா" என்ற பத்திரிக்கையையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார். 1928 ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்திஜியின் முடிவை, 'தவறு' என நேதாஜி எதிர்த்து கூறினார். இதனால் காந்திக்கும், நேதாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு, இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப்பாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார்.
1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நேதாஜி அவர்கள், "நான் தீவிரவாதி தான்! எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் எனது கொள்கை" என முழங்கினார். நேதாஜி அவர்கள், தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து, அவருக்குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல், 'நேதாஜி' (மரியாதைக்கூரிய தலைவர் என்பது பொருள்) என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார். 1939 ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்ட காந்தி, அவருக்கு எதிராக நேருவையும், ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். ஆனால், அவர்கள் போட்டியிட மறுக்கவே "பட்டாபி சீதாராமையாவை" நிறுத்தினார். ஆனால், பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே, தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந்தி, உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இதனால், நேதாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறினார்.
'பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார்' என கூறி 1940 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசு நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. 'இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த மும்முரமான காலகட்டம் அது, பாரத தேசத்தை ஆண்டுகொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம்' என கருதிய நேதாஜி அவர்கள், ஜனவரி 17, 1941 ஆம் ஆண்டு மாறுவேடம் அணிந்து சிறையிலிருந்து தப்பி, பெஷாவர் வழியாக காபூல் அடைந்த அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார். ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்லவேண்டும் என நினைத்த நேதாஜி இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவை அடைந்தார். எதிர்பாராத விதமாக ஹிட்லரின் அழைப்பு வரவே, அவரின் அழைப்பை ஏற்று பின்னர் ஜெர்மனியிலுள்ள மாஸ்கோவை அடைந்த அவர், இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார்.
சுதந்திர இந்திய ராணுவம்
1941 ஆம் ஆண்டு "சுதந்திர இந்திய மையம்" என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார். பிறகு, ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் "வான் ரிப்பன் டிராபின்" உதவியுடன் சிங்கப்பூரில் "ராஷ் பிகாரி போஸ்" தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார். 1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்தபடியே "இந்திய தேசிய ராணுவப்படையை" கொண்டு 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு "இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள்! நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை" "ஜெய் ஹிந்த்" என உரையாற்றினார். அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது.
போஸ் மரணம் குறித்த சர்ச்சை
ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி, இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது."எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்" என கூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாரதநாட்டை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர். மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்னடைவை சந்தித்தாலும், அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது. சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துகொண்ட நேதாஜி அவர்கள்,
ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்க்கா இடம் பெற்றிருக்கிறார்.

தேவர் சுத்தமான இலட்சிய புருஷன். நேதாஜியின் சகோதரர் சரத் போஸ்

தேவர் சுத்தமான இலட்சிய புருஷன்.
நேதாஜியின் சகோதரர்
சரத் போஸ்

A.R.பெருமாள் தேவர் அவர்களின் 19ம் ஆண்டு நினைவு நாள் ஏப்ரல் 21

A.R.பெருமாள் தேவர் அவர்களின் 19ம் ஆண்டு நினைவு
நாள் ஏப்ரல் 21
அகில இந்திய பார்வட் பிளாக் கட்சியின் 7வது தேசிய தலைவராக இருந்தவர். முதல் முதலில் ஜயா முத்துராமலிங்க தேவர் பற்றி விரிவாக முழு வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுத்தியவர்.
ஜயா A.R.பெருமாள் தேவர்

தென்பாண்டி சிங்கம் வாளுக்கு வேலி அம்பலம்

தென்பாண்டி சிங்கம் வாளுக்கு வேலி அம்பலம்
மருதுபாண்டியரைக் காப்பாற்ற படை திரட்டி சென்ற
தென்பாண்டி சிங்கம் வாளுக்கு வேலி அம்பலம்:::
மருதுபாண்டியர்கள் ஆங்கிலயர் கையில்
சிக்கிவிட்டார்கள் காளையார் கோவில்
வெள்ளைக்காரர் வசமாகிவிட்டது.
ஊமைத்துரை மற்றும் விடுதலைப் படையை சேர்ந்தவர்கள் அனைவரும்
கைது செய்யப்பட்டனர் பெரியமருதுவையும்
சின்னமருதுவையும் திருப்பத்தூர்
கோட்டையிலே தூக்கு மாட்டி கொன்று தண்டனையை நிறைவேற்ற
போகிறார்கள் என்று கதறினான் மேகநாதன். வாளுக்கு வேலிஅம்பலம் புதிய தெம்புடன்
நம்பிக்கையுடன்கம்பீரமாக பேசினான்...
"முடியாது... மருதுபாண்டியரை தூக்கிலிட
அனுமதிக்க முடியாது கள்ளர் நாட்டுபடைகள்
மருது சகோதரர்களுக்கு கடைசி நேரத்தில்
துணை நிற்காமல் நமது பகைதீர்க்க இங்கு வந்து நமக்குள்
சண்டையிட்டு கொண்டபடியால்
அல்லவா ஆங்கிலேயர்களின் கை ஓங்கிவிட்டது.
இப்போதும் ஒன்றும் ஆகிவிடவில்லை.
பாகனேரி பட்டமங்களபடைகள் என் தலைமையில்
அணிவகுக்கட்டும் திருப்பத்தூர் கோட்டை நோக்கி புறப்படுவீர் இப்போதே... பெரியமருது சின்ன மருது இருவரையும்
விடுவிப்போம் ..
நாம் போகும் வழியெல்லாம் உள்ள ஊர்களில் எல்லாம்
வீரர்களை திரட்டிசெல்லுவோம்
ஆங்காங்கே போர்பயிற்சி பெற்ற வீரர்கள் மட்டுமல்ல
எக்குலதராயினும் அனைவரும் தமிழ்க்குலம்-தல ைதாழாக்குலம், தன்மான மிக்ககுலம்என்ற
உணர்வோடு புறப்படட்டும் ! தீரமிக்க
தமிழ்குடிகளின் முற்றுகை கண்டு திருப்பத்தூரில்
பரங்கியர் பதறட்டும்! அக்னியுவின் ஆணவம்
அடங்கட்டும் விடுவிப்போம்
மருது பாண்டியரை வாரீர் வாரீர் ! நான் முன்னால் செல்கிறேன் எனக்கு பின்னால்
ஒவ்வொரு அணியாக நமது படைகள் வரவேண்டும்"
என்று ஆணையிட்டு குதிரையை தட்டிவிட்டான்
அந்த மாவீரன். வைரமுத்தன், ஆதப்பன், மேகனாதன் மற்றுமுள்ள
படைத்தளபதிகள் ஐம்பது அடி இடைவெளி தூரத்தில்
படைகளுடன் அணிவகுத்து புறப்பட்டார்கள்.
எல்லோருடைய நினைவும் திருப்பத்தூர்
கோட்டை பெரியமருது சின்னமருது தூக்குதண்டனை இவற்றை சுற்றியே அலைந்து கொண்டிருந்தது.
படை வரிசை பாகனேரி எல்லையை கடந்து திருப்பத்தூரை நோக்கி போகின்ற காட்சியே காட்சி... அதோ வந்துவிட்டது... கத்தபட்டு என்னும் இடத்தில்
வைரமுத்தனை கொல்லுவதற்கு உறங்காப்புலி சதிசெய்து படுகுழி வெட்டி வைத்திருக்கிறான்
அங்கே குழி இருப்பது யாருக்கும் தெரியாமல்
இலைகள் பரப்பிவிடப்பட்டு அதன்
மீது மண்பத்தைகளும் வைத்து மூடப்பட்டிருகிறது . படைகளுக்கு தலைமையேற்றுள்ள
வாளுக்கு வேலி அம்பலம் அந்தகுழியிருப்ப
து தெரியாமலேயே படைகளுக்கு முன்பு ஐம்பது அடி தொலைவில்
பயங்கர வேகத்தில் குதிரையில்
சென்று கொண்டிருகின்றான் . பின்னால் திரும்பி "வேகமாக வாருங்கள் விரைவில்
திருப்பத்தூர் சென்றடைந்தால்தான்
மருது சகோதரர்களை மரண படுகுழியில்
இருந்து மீட்க முடியும்" என்று முழங்கியபோது... அந்த பயங்கர படுகுழியில்
குதிரையோடு விழுந்தான். அந்த தீடீர்
பயங்கரத்தை கண்ட
படை நிலைகுலைந்து ஓடி வந்தது அதற்குள்
குழியை மண் மலைபோல மூடிக்கொண்டது.
அத்தனை படைவீரர்களும் ஓரிரு நொடியில் அந்த குழியை தோண்டி மண்ணை அகற்றி வாளுக்கு வேலியை வெளியே கொண்டு வந்தனர்.
அந்த தென்பாண்டி சிங்கம் கத்தப்பட்டுப் படுகுழியில்
இருந்து சவமாக வெளியே வந்தான்!
இன்றைக்கும் கத்தபட்டில் சிலையாக
நின்று கொண்டிருக்கிறான்--------ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்பு, 1798 ஆம் ஆண்டு கயத்தாறு புதியமரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட அந்த துயரம் தோய்ந்த நாட்களில் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு இந்த நாட்டின் மீது தொழு நோயாக பரவிக்கொண்டிருந்த கால கட்டத்தில் பெரிய மருது, சின்ன மருது என்ற பேராண்மை மிக்க வீரர்கள் பிரிட்டிஷ் கம்பெனிப் படைகளை எதிர்த்து நின்ற நேரத்தில் காலனி ஆதிக்கத்தை தன்னுடைய காலடியால் மிதிப்பேன் என்றுரைத்த வீரர் குல நாயகன் தான் வாளுக்கு வேலி. நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, உதடுகளுக்கு மேலே உரைவிட்டெழுந்த வாள் இரண்டை பதித்தது போல மீசை, கம்பீரத்தை காட்டும் விழிகள், அவற்றில் கருணையின் சாயலையும் அன்பின் பொழிவையும் கூட காண முடியும். நீண்டு உயர்ந்து வளைந்த மகுட தலைப்பாகை, நெடிய காதுகளில் தங்க வளையல்கள், விரிந்த மார்பகத்தில் விலை உயர்ந்த பதக்கமும் சலங்கையும், இரும்புத்தூனனைய கால்களிலும் எஃகு குண்டனைய முகங்களிலே காப்பு, கையிலே ஈட்டி, இத்தனை சிறப்புகளையும் சிலைவடித்து, கத்தப்பற்று என்னும் கிராமத்தில் இன்றைக்கும் காட்சி தருகிற தென்பாண்டி சிங்கமாம் வாளுக்கு வேலி இடத்தே காணலாம். வாளுக்கு வேலி, வீரம் துள்ளுகின்ற வார்த்தைகளால் அமைந்த பெயர்.
தென்பாண்டி சிங்கம் வாளுக்கு வேலி அம்பலம்
விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு
கருத்து