தெரிந்ததும் தெரியாததும் --தேவர்
எனக்கு மக்களை தான் தெரியும் --ஆனால்
மன்னர்களையும் மந்திரிகளையும் தெரியாது .
மன்னர்களையும் மந்திரிகளையும் தெரியாது .
எனக்கு வாழத்தான் தெரியும் --ஆனால்
வயிறு வளர்க்க தெரியாது .
வயிறு வளர்க்க தெரியாது .
எனக்கு பாய் தான் தெரியும்
பட்டு மெத்தை தெரியாது .
பட்டு மெத்தை தெரியாது .
எனக்கு அடக்கம் தெரியும்
ஆடம்பரம் தெரியாது .
ஆடம்பரம் தெரியாது .
எனக்கு பாடுபடத் தெரியும்
பாராட்டு பெற தெரியாது .
பாராட்டு பெற தெரியாது .
எனக்கு வெற்றி பெறத் தெரியும் --ஆனால்
வெற்றிக்காக விழா எடுக்க தெரியாது
வெற்றிக்காக விழா எடுக்க தெரியாது
எனக்கு பதுங்கவும் தெரியும் ,பாயவும் தெரியும்
--ஆனால் பயப்பட தெரியாது
--ஆனால் பயப்பட தெரியாது
எனக்கு விவசாயம் தெரியும்
வியாபாரம் செய்ய தெரியாது .
வியாபாரம் செய்ய தெரியாது .
எனக்கு பாசங்கொள்ள தெரியும்
பகைமை கொள்ள தெரியாது .
பகைமை கொள்ள தெரியாது .
எனக்கு தொண்டனாகவும் --அவசியப்படுகிற இடத்தில்
தலைவனாகவும் நடக்க தெரியும் ---ஆனால்
நடிக்க தெரியாது .
தலைவனாகவும் நடக்க தெரியும் ---ஆனால்
நடிக்க தெரியாது .
கள்ளர் முரசு
No comments:
Post a Comment