Sunday, July 30, 2017

தென்பாண்டி சிங்கம் வாளுக்கு வேலி அம்பலம்

தென்பாண்டி சிங்கம் வாளுக்கு வேலி அம்பலம்
மருதுபாண்டியரைக் காப்பாற்ற படை திரட்டி சென்ற
தென்பாண்டி சிங்கம் வாளுக்கு வேலி அம்பலம்:::
மருதுபாண்டியர்கள் ஆங்கிலயர் கையில்
சிக்கிவிட்டார்கள் காளையார் கோவில்
வெள்ளைக்காரர் வசமாகிவிட்டது.
ஊமைத்துரை மற்றும் விடுதலைப் படையை சேர்ந்தவர்கள் அனைவரும்
கைது செய்யப்பட்டனர் பெரியமருதுவையும்
சின்னமருதுவையும் திருப்பத்தூர்
கோட்டையிலே தூக்கு மாட்டி கொன்று தண்டனையை நிறைவேற்ற
போகிறார்கள் என்று கதறினான் மேகநாதன். வாளுக்கு வேலிஅம்பலம் புதிய தெம்புடன்
நம்பிக்கையுடன்கம்பீரமாக பேசினான்...
"முடியாது... மருதுபாண்டியரை தூக்கிலிட
அனுமதிக்க முடியாது கள்ளர் நாட்டுபடைகள்
மருது சகோதரர்களுக்கு கடைசி நேரத்தில்
துணை நிற்காமல் நமது பகைதீர்க்க இங்கு வந்து நமக்குள்
சண்டையிட்டு கொண்டபடியால்
அல்லவா ஆங்கிலேயர்களின் கை ஓங்கிவிட்டது.
இப்போதும் ஒன்றும் ஆகிவிடவில்லை.
பாகனேரி பட்டமங்களபடைகள் என் தலைமையில்
அணிவகுக்கட்டும் திருப்பத்தூர் கோட்டை நோக்கி புறப்படுவீர் இப்போதே... பெரியமருது சின்ன மருது இருவரையும்
விடுவிப்போம் ..
நாம் போகும் வழியெல்லாம் உள்ள ஊர்களில் எல்லாம்
வீரர்களை திரட்டிசெல்லுவோம்
ஆங்காங்கே போர்பயிற்சி பெற்ற வீரர்கள் மட்டுமல்ல
எக்குலதராயினும் அனைவரும் தமிழ்க்குலம்-தல ைதாழாக்குலம், தன்மான மிக்ககுலம்என்ற
உணர்வோடு புறப்படட்டும் ! தீரமிக்க
தமிழ்குடிகளின் முற்றுகை கண்டு திருப்பத்தூரில்
பரங்கியர் பதறட்டும்! அக்னியுவின் ஆணவம்
அடங்கட்டும் விடுவிப்போம்
மருது பாண்டியரை வாரீர் வாரீர் ! நான் முன்னால் செல்கிறேன் எனக்கு பின்னால்
ஒவ்வொரு அணியாக நமது படைகள் வரவேண்டும்"
என்று ஆணையிட்டு குதிரையை தட்டிவிட்டான்
அந்த மாவீரன். வைரமுத்தன், ஆதப்பன், மேகனாதன் மற்றுமுள்ள
படைத்தளபதிகள் ஐம்பது அடி இடைவெளி தூரத்தில்
படைகளுடன் அணிவகுத்து புறப்பட்டார்கள்.
எல்லோருடைய நினைவும் திருப்பத்தூர்
கோட்டை பெரியமருது சின்னமருது தூக்குதண்டனை இவற்றை சுற்றியே அலைந்து கொண்டிருந்தது.
படை வரிசை பாகனேரி எல்லையை கடந்து திருப்பத்தூரை நோக்கி போகின்ற காட்சியே காட்சி... அதோ வந்துவிட்டது... கத்தபட்டு என்னும் இடத்தில்
வைரமுத்தனை கொல்லுவதற்கு உறங்காப்புலி சதிசெய்து படுகுழி வெட்டி வைத்திருக்கிறான்
அங்கே குழி இருப்பது யாருக்கும் தெரியாமல்
இலைகள் பரப்பிவிடப்பட்டு அதன்
மீது மண்பத்தைகளும் வைத்து மூடப்பட்டிருகிறது . படைகளுக்கு தலைமையேற்றுள்ள
வாளுக்கு வேலி அம்பலம் அந்தகுழியிருப்ப
து தெரியாமலேயே படைகளுக்கு முன்பு ஐம்பது அடி தொலைவில்
பயங்கர வேகத்தில் குதிரையில்
சென்று கொண்டிருகின்றான் . பின்னால் திரும்பி "வேகமாக வாருங்கள் விரைவில்
திருப்பத்தூர் சென்றடைந்தால்தான்
மருது சகோதரர்களை மரண படுகுழியில்
இருந்து மீட்க முடியும்" என்று முழங்கியபோது... அந்த பயங்கர படுகுழியில்
குதிரையோடு விழுந்தான். அந்த தீடீர்
பயங்கரத்தை கண்ட
படை நிலைகுலைந்து ஓடி வந்தது அதற்குள்
குழியை மண் மலைபோல மூடிக்கொண்டது.
அத்தனை படைவீரர்களும் ஓரிரு நொடியில் அந்த குழியை தோண்டி மண்ணை அகற்றி வாளுக்கு வேலியை வெளியே கொண்டு வந்தனர்.
அந்த தென்பாண்டி சிங்கம் கத்தப்பட்டுப் படுகுழியில்
இருந்து சவமாக வெளியே வந்தான்!
இன்றைக்கும் கத்தபட்டில் சிலையாக
நின்று கொண்டிருக்கிறான்--------ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்பு, 1798 ஆம் ஆண்டு கயத்தாறு புதியமரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட அந்த துயரம் தோய்ந்த நாட்களில் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு இந்த நாட்டின் மீது தொழு நோயாக பரவிக்கொண்டிருந்த கால கட்டத்தில் பெரிய மருது, சின்ன மருது என்ற பேராண்மை மிக்க வீரர்கள் பிரிட்டிஷ் கம்பெனிப் படைகளை எதிர்த்து நின்ற நேரத்தில் காலனி ஆதிக்கத்தை தன்னுடைய காலடியால் மிதிப்பேன் என்றுரைத்த வீரர் குல நாயகன் தான் வாளுக்கு வேலி. நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, உதடுகளுக்கு மேலே உரைவிட்டெழுந்த வாள் இரண்டை பதித்தது போல மீசை, கம்பீரத்தை காட்டும் விழிகள், அவற்றில் கருணையின் சாயலையும் அன்பின் பொழிவையும் கூட காண முடியும். நீண்டு உயர்ந்து வளைந்த மகுட தலைப்பாகை, நெடிய காதுகளில் தங்க வளையல்கள், விரிந்த மார்பகத்தில் விலை உயர்ந்த பதக்கமும் சலங்கையும், இரும்புத்தூனனைய கால்களிலும் எஃகு குண்டனைய முகங்களிலே காப்பு, கையிலே ஈட்டி, இத்தனை சிறப்புகளையும் சிலைவடித்து, கத்தப்பற்று என்னும் கிராமத்தில் இன்றைக்கும் காட்சி தருகிற தென்பாண்டி சிங்கமாம் வாளுக்கு வேலி இடத்தே காணலாம். வாளுக்கு வேலி, வீரம் துள்ளுகின்ற வார்த்தைகளால் அமைந்த பெயர்.
தென்பாண்டி சிங்கம் வாளுக்கு வேலி அம்பலம்
விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு
கருத்து

No comments:

Post a Comment