வருகுதைய்யா மறவர்படை வானவில் சேனைதளம்,
மறவரோட எதிராளி மாண்டவர் கோடி லட்சம்...
மறவரோட எதிராளி மாண்டவர் கோடி லட்சம்...
கையிலே வீச்சருவா காலிலே வீரத்தண்டை,
நெத்தியில் பொட்டுவச்சு நீலவண்ணப் பட்டுடுத்தி,
தோளே வாளான துடியான வீரனடா...
தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா...
வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா...
படை நடுங்கும் தோள்களடா எந்த பகைவரின் மனதும் பதைக்குமடா...
வைரம் பாய்ந்த நெஞ்சமடா அவன் வாளெடுத்தால் வரும் வாகையடா...

இருநூறு வருஷம் முன்னே இனமானம் காத்தவன்டா...
வெள்ளை இருட்டை வெளியே விரட்டி அடிச்சவன்டா...

ஊமைத்துரைக்கு தான் உற்ற நண்பனாம் சீமைத்துரைகளுக்கு சிம்ம சொப்பனம்...

சிம்ம சொப்பனம்... அவன் சிம்ம சொப்பனம்...
தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா...
வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா...
கைவளரி வீசிவிட்டால் கைலாசம் கலங்குமடா...
வேல்க்கம்பு விட்டெறிஞ்சா வெண்ணிலவில் தைக்குமடா...

வானத்தைக் கீறி உனக்கு வைகறைய பரிசளிப்பான்...
மானம் காக்கும் மறவனடா நம்ம மருதுபாண்டியர் தோழனடா...
மருதுபாண்டியர் தோழனடா... மருதுபாண்டியர் தோழனடா...
தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா...
வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா...
படை நடுங்கும் தோள்களடா எந்த பகைவரின் மனதும் பதைக்குமடா...
வைரம் பாய்ந்த நெஞ்சமடா அவன் வாளெடுத்தால் வரும் வாகையடா...
தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா...
வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா...
தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா...
வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா...
படை நடுங்கும் தோள்களடா எந்த பகைவரின் மனதும் பதைக்குமடா...
வைரம் பாய்ந்த நெஞ்சமடா அவன் வாளெடுத்தால் வரும் வாகையடா...
தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா...
வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா... ---
No comments:
Post a Comment