Friday, July 28, 2017

இளைஞர்நெஞ்சில் நேதாஜி

நேதாஜி
கூட்டத்தில் உணர்சி அலை மோதியது .திடீரென நேதாஜி தனக்கு அணிவித்த ஒரு மாலையே எடுத்தார்'' இப்போது இந்த மாலையே ஏலம் விடப்போகிறேன் .ஏலத்தில் கிடைக்கும் பணம் நம்முடைய இந்திய தேசிய இராணுவ
நிதிக்கு செல்லும் என்றார் .கூட்டம் திகைத்து போனது அடுத்து அடுத்து கேட்கப்பட்டஏலத்தொகைகள் அனைவரின் திகைப்பையும் மேலும் அதிகமாக்கியது .
ஒன்றறை லட்சம் ,
இரண்டு லட்சம்,
நான்கு லட்சம்,
ஐந்து லட்சம்,
ஆறு லட்சம் என கிடுகிடுவென ஏறியது ஏலத்தொகை .
நேதாஜியை திகைத்துப்போனார் .
முதலில் ஒரு லட்ச ருபாயிக்கு ஏலம்
கேட்டவர் ஒரு பணக்கார பஞ்சாபி இளைஞர் .
மாலை ஏழு லட்ச ரூபாய் வரை விலை உயர்ந்தது .நேதாஜிக்கு அணிவிக்கப்படட மாலை தனக்கு
கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஏக்கம் அந்த இளைஞரிடம் காணப்பட்ட்து .அந்த வெறியில் தன்னை மறந்த அந்த இளைஞர் மேடைமீது தாவி ஏறினார் .
இந்த மாலை எனக்கு வேண்டும் .இதற்காக என் சொத்து முழுவதையும் தருகிறேன் .மாலையே தவிர வேறெதுவும் எனக்கு வேண்டாம் ''-என்று வெறி பிடித்தவர் போல அலறினார் அந்த இளைஞர் உணர்சி பெருக்கத்தில் அவர் உடல் ஆடியது .
கூட்டம் கண் கலங்கி நின்றது.
நேதாஜி அந்த இளைஞரின் கைகளைப் பற்றி அவரை அமைதிப்படுத்தினார் .தம்பி பதறாதீர்கள் மலை உங்களுக்குத்தான் நம்முடைய விடுதலைப்படை பெரும் பெருமை அனைத்தும் உங்களைப்போன்ற இளைஞர்களையே சேரும் ''என்று அந்த மாலையை இளைஞரிடம் தந்தார் .மகிழ்ச்சி பெருக்கத்தில் தன் மார்பில் அணைத்தபடி கூத்தாடினார் அந்த இளைஞர்!
ஜெய்ஹிந்த் கள்ளர் முரசு

No comments:

Post a Comment