Friday, July 28, 2017

தேவரை சிறையிலிட்டால் தெய்வம் பொறுக்குமா?? கிருபானந்தவாரியார்

தேவரை சிறையிலிட்டால் தெய்வம் பொறுக்குமா??
கிருபானந்தவாரியார்
முத்துராமலிங்கத்தேவரை காங்கிரஸ் ஆடசி சிறைப்படுத்தியநேரம் மதுரை மீனாக்ஷி ஆலய ஆடி வீதியில் திருமுருக கிருபானந்தவாரியார் கந்தரலங்காரம் கூறி வந்தார் .
அன்று காலையில் தேவரவர்கள் கைது பற்றி செய்தி வந்திருந்தது .மாலையில் கிருபானந்தவாரியார் அறப்போரை வர்ணிக்கும்போது இந்திரன் முதலிய தேவர்களை அசுரர்கள் சிறையில் தள்ளியதை குறிப்பிட்டார் .முருகப்பெருமான் அசுரர்களை அழித்து தேவர்களை மீட்டதை நயம்பட கூறிய கிருபானந்தவாரியார்
'''தேவரை சிறையிலி ட்டால் தெய்வம் பொறுக்குமா ?என்று கேட்டு ஒரு நிமிஷம் நிறுத்தினார்.ஆடி வீதிகளில் அலைமோதி நின்ற மக்கள் வெள்ளம் உடனே அவர் குறிப்பிடும் ''தேவர் யார் என்பதை புரிந்துகொண்டு கையொலித்து தங்கள் தலைவனிடமுள்ள அன்பை வெளிப்படுத்தியது 1967 -ல் தேர்தலில் தெய்வமாகிய மக்களே அன்றைய ஆட்ச்சிக்கு தகுந்த பாடமும் புகட்டினார்கள்.

No comments:

Post a Comment