நேதாஜி அவர்களைப் பற்றி நீங்கள் அறிந்த சில விஷயங்கள்..
INA வின் இதயமும், உயிரோட்டமும் தமிழர்கள்
நேதாஜியின் INA வில் 65 முதல் 70% வரைத் தமிழர்களே இருந்தனர். நேதாஜிக்கு அப்போது பெருமளவு ஆதரவு அளித்ததும் நமது தமிழர்கள் என்பது உலகரிந்த விஷயம்.
ஒரு சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வு. 18 மார்ச் 1944 அன்று, INA பர்மா வழியாக இந்தியாவில் நுழையத் திட்டமிடுகின்றனர். இப்போது உள்ள மணிப்பூரில் “மோரெ” என்ற இடத்தை பிரிட்டிஷ் அரசுடன் போரிட்டு INA வீரர்கள் கைப்பற்றுகின்றனர். அந்த மாகாணத்தை மூன்று மாதம் INA ஆட்சி செய்தது பெரும் சாதனை. இந்த நிகழ்வும் வரலாற்றில் பெரிதாகக் கூறப்படவில்லை. இன்று வரை INAவில் 60000 பேர் போரில் இறந்திருக்கிறார்கள். ஆனால் INA விற்கு ஒரு நினைவுச் சின்னம் கூட நம் நாட்டில் இல்லை.
INA வீரர்களைச் சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய ராணுவத்தில் (INDIAN ARMY) நேரு அரசு சேர அனுமதிக்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம் மவுண்ட்பேட்டனின் மனைவி. அவர் நேருவைக் கேட்டுக் கொண்டதனால் தான் INA வீரர்களை இந்திய ராணுவத்தில் பணிக்கு சேர்த்துக்கொள்ளவில்லை என்று அதிகாரப்பூர்வமானப் பதிவுகள் (OFFICIAL RECORDS) உள்ளன. மவுண்ட்பேட்டனின் மனைவியின் வாழ்க்கை வரலாற்றில் கூட இந்தத் தகவல் பதிவாகி உள்ளது.
நீண்ட வருடங்கலாக தடை விதிக்கப்பட்டிருந்த INA விவரங்கள், ஆறு வருடத்திற்கு முன் தடைநீங்கப் பெற்று, இப்போது ஆவணக் காப்பகங்களில் (ARCHIVES) இருக்கிறது. நம் நாட்டில் கிடைப்பதை விட நிறைய ஆவணங்கள் லண்டனில் இருக்கின்றது.
இந்திய சுதந்திர வரலாற்றைப் பற்றி நாம் அனைவரும் படித்துத் தெரிந்துக்கொள்ள வேண்டும். இத்தனைக் கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்தை நினைத்து, நல்ல வழியில் வாழ்ந்து பேணிக் காக்க வேண்டும். அது நம் அனைவரதுக் கடமை
No comments:
Post a Comment