Friday, July 28, 2017

தேவர் தேசிய தலைவர் மாண்புமிகு அன்பில் தர்மலிங்கம்

தேவர் தேசிய தலைவர்
மாண்புமிகு அன்பில் தர்மலிங்கம்
நாட்டில் எத்தனையோ தலைவர்கள் தோன்றினாலும் ஒரு சிலர் தான் மறையும் வரை ஏன் அதற்க்கு பின்னரும் கூட மக்களின் உள்ளங்களில் இடம்பெறமுடியும் .அவர்களின் வரிசையில் உத்தம தலைவர் முத்துராமலிங்கத்தேவரையும் சொல்ல முடியும் .அவருடைய இதயம் பொன்னானது ,அவரது ஊர் மட்டும் பசும்பொன் அல்ல ;அவரால் உருவாக்கப்பட்ட மூக்கையாத்தேவரும் ஒரு பசும்பொன்தான்.
தலைவர் முத்துராமலிங்கத்தேவர் மறைந்து விட்டாலும் அவர் விட்டு சென்ற எண்ணங்கள் இன்னும் பசுமையாக இருக்கின்றன .அந்த எண்ணங்களை ஈடுஏற்றும் பணியில் அவரது வாரிசான மூக்கையாத்தேவர் ஈடுபட்டு வருகிறார் .
இன்று முத்துராமலிங்கத்தேவர் இல்லை என்றாலும் அவரது புகழ் வான் ஓங்கி இருக்கிறது ;ஆனால் அவரது புகழை தடுக்க முயன்ற தலைவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் ?ஆனால் ,தேவரின் சிறப்போ இன்று கடல் கடந்து வாழும் உள்ளங்களில் எல்லாம் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது .
தேவர் அவர்கள் முற்போக்கு கட்சி [பார்வர்ட் பிளாக் } என்று கட்சி தொடங்கினார்க்கள் ;அந்த கட்சி பல இனத்தவர்களும் ''சமூகத்தினரும்-இருந்தனர் .இன்னும் இருக்கிறார்கள் .அவருடைய வழக்கில் வாதாட வந்தவர் வேலாயுத நாயர் வேறு இனத்தவர் சேர்ந்தவர்தான் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களின் கட்சியாக அது இருந்ததே தவிர -ஒரு குறிப்பிட்ட இனத்தவர் கட்சியாக இருந்ததில்லை .
பசும்பொன் தேவர் அவர் ஆரம்பித்த கட்சியும் ஒரு குறிப்பிட்ட இனத்தினுடையது அல்ல என்பதை இன்று உலகுக்கு காட்டி வருகிறார் மூக்கையாத்தேவர் ஆவார் .தென்னாட்டுக்கும் வட நாட்டுக்கும் ஏன் அகில இந்தியாவுக்கே தலைவராக மூக்கையாத்தேவர் இருந்து வருகிறார் .அதாவது தேசியத் தலைவராகி இன்று இருந்து வருகிறார் .அதன் மூலம் பசும்பொன் தேவர் ஒரு சாதியத் தலைவர் என்று சித்தரிக்க முயன்றவர்களின் சித்தங்களை கலங்கடித்து இருக்கிறார் ..அவர் ஆற்றிய பணிகளை போற்றிகொண்டாட வேண்டியவை ஆகும் .இந்த நாடும் நாட்டு மக்களும் நலம் பெறுவார்கள் நல்லதொண்டுகள் பல புரிந்தவர் .
!!வாழ்க பசும்பொன்தேவர் நாமம் !!
கள்ளர் முரசு

No comments:

Post a Comment