Sunday, July 30, 2017

வீரர்களுக்கு வீரவணக்கங்கள்.கள்ளர்முரசு

வீரர்களுக்கு வீரவணக்கங்கள்.கள்ளர்முரசு
மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் தகனம்!
மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் தகனம்!
சென்னை(26 ஏப் 2017): சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் நேற்று விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, அவரவர் சொந்த ஊர்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர் பத்மநாபனின் உடலுக்கு அமைச்சர் காமராஜ் அஞ்சலி செலுத்தியபின், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு வீரர் செந்தில்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் காமராஜ், அவரது குடும்பத்தினரிடம் நிதியுதவி வழங்கினார்
சேலம் மாவட்டம் நல்லூரில் வீரர் திருமுருகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் அன்பழகன், அவரது மனைவியிடம் தமிழக அரசு அறிவித்த 20 லட்சம் ரூபாயை வழங்கினார். பின்னர் திருமுருகனின் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் பெரிய பூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்த வீரர் அழகுபாண்டியின் உடலுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment