Friday, July 28, 2017

ஒருவன் அழிவில் மற்றவன் வாழ்வு என்று எண்ணாதீர்கள்--பி .கே .மூக்கையாத்தேவர்



பி .கே .மூக்கையாத்தேவர்
பேசினால் கொலைக் குற்றம்,
ஒருவன் அழிவில் மற்றவன் வாழ்வு என்று எண்ணாதீர்கள் .
பி .கே .மூக்கையாத்தேவரை இன்று முத்துராமலிங்கத்தேவரின் வாரிசாக தன்னிகரில்லாத தலைவராக உலகம் கொண்டாடுகிறது .
ஆனால் அன்று காங்கிரஸ் ஆடசியில் அவர் 
கொலை குற்றவாளி ,அவர் செய்தது வேறு
ஒன்றும் இல்லை மேடையில் பேசியதுதான் .
தலைவர் தேவர் கைதாகி விட்டதை கண்டிக்க 
விருதுநகரில் கூட்டம் ஏற்பாடு செய்ய்யப்பட்டது .
அந்த கூட்டத்தில் மூக்கையாத்தேவர் பேசினார் .
எங்களை அழித்துவிட்டு வாழலாம் என்று நினைக்கிறிர்களா?
ஒருவன் அழிவில் மற்றவன் வாழ்வு என்று எண்ணாதீர்கள்
எங்களை அளிக்க நினைப்பவர்கள் 
அதன் மூலம் அழிய நினைக்கிறிர்கள் என்றால் 
அதற்க்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?
தனக்கு இம்சை என்றால் இம்சை செய்கிறவரை கொழு கொழு என்று இருக்கும் கோயில் காளைதான் குத்தும் என்கிறது
இல்லை நொண்டிமாடு கூட குப்பைகூளம் அள்ளிப்போடும் போது கூடக் குத்திவிடும் இப்படித்தான்
மூக்கையாத்தேவர் பேசினார் அது கொலை குற்றம் என்று கருதப்பட்டது .
செய்தி - விருதுநகர் ஏ. வேலுக்குடும்பன். 
தேவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது தாழ்த்தப்பட்ட மக்கள் வேட்பாளராகப்போட்டியிட்டவர். பார்வர்டு பிளாகின் மாநில துணைத் தலைவராக இருந்தவர் ........
Vsnavamani Maran
கள்ளர் முரசு

No comments:

Post a Comment