Sunday, July 30, 2017

தெக்கத்தி மண் பேசும் முக்குலத்து வீர புருஷர்கள் மருதுபாண்டியர் சரித்திரம்

தெக்கத்தி மண் பேசும் முக்குலத்து வீர புருஷர்கள் மருதுபாண்டியர் சரித்திரம்
===============================
காளையார் கோவில் 151 அடி உயர கோபுரம் கட்டி சிவகங்கை மக்களுக்கு மதுரை கோபுரத்தை தெரிய வைத்தவர்கள் மருது பாண்டியர்கள்.
அந்தக் காலத்தில் சிவகங்கை மக்கள் இந்தக் கோபுரத்தில் ஏறி அங்கிருந்தே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை தரிசித்தனர்.
குறுநில மன்னர்கள் என்றாலும் பேரரசர்களுக்கு இணையான சாதனை இது.
தமிழக வரலாற்றில் எப்படி முக்குலத்தின் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் போற்றப்படுகிறார்களோ அதே போல அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல இந்த முக்குலத்தின் மருது சகோதரர்கள். ஒருவேளை 10ம் 12ம் நூற்றாண்டுகளில் இவர்கள் பிறந்திருந்தால் வரலாற்றையே இவர்கள் மாற்றியிருப்பர்.
அந்த முக்குலத்தின் சேர, சோழ, பாண்டிய மாமன்னர்கள் எல்லாம் பெரும் நிலப்பரப்பை ஆண்டவர்கள் அவர்கள் அரசிற்கு கிடைக்கும் வரி வருவாயோ பலமடங்கு அதிகம் மிகப்பெரிய படைபலம் அவர்களுக்கு இருந்தது, ஆனால் அந்த அளவு படைவழுவோ பெருநிலமோ அவர்களின் வழி தோன்றலாக வந்த முக்குலத்து தேவர் குல சிங்கங்கள் மருது அய்யாக்களிடம் இருந்தது இல்லை, ஆனால் சர்வ வல்லமை காரர்கள் பிரிட்டிஷ்க்காரர்களை அழவைத்த வீரம் மருது மாமன்னர்களை சேரும்,
ராசராசன் தஞ்சை பெரிய கோவிலும் ராசேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தையும், சுந்தரபாண்டியன் மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தியும் கட்டினான். இந்ந பேரரசர்களுக்கு இது பெரிய விசயம் இல்லை.
ஆனால் மருது பாண்டியர்களின் சிவகங்கை என்னும் சிறிய நிலப்பரப்பை ஆட்சி செய்வதில் சின்ன மருதுவை விட மதிநுட்பம் கொண்டவர் யாரும் இல்லை என ஆங்கிலேயர்களே புகழ்ந்துள்ளனர். மருது சகோதரர்கள் வேலுநாச்சியாரின் தளபதிகளாவர். சிவகங்கையை வேலுநாச்சியாருக்கு மீட்டுக்கொடுத்தனர். கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரையை காப்பாற்றி பாஞ்சாலங்குறிச்சியை மீட்க உதவினர். இதனால் இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு நிரந்தர எதிரிகளாக மாறினர். ஆங்கிலேயர் மட்டுமா? ஆற்காட்டு நவாப்பும் எதிரி, அதே போல திருவிதாங்கூர் மன்னனும் எதிரி இப்படி சுற்றிலும் பல இடையூறுகளை சமாளித்துக்கொண்டே வெறும் எட்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தவர்கள் இவர்கள்.
இவ்வளவு இடையூறுகளுக்கு மத்தியில் காளையார்கோவிலை கட்டினர். இந்தக் கோயில் கோபுரம் மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்துக்கு இணையான 151 அடி உயரத்தில் கட்டி சிவகங்கை மக்களுக்கு அங்கிருந்தே மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் கிடைக்க செய்தனர். இந்தக் கோவிலை கட்டுவதற்காக திருவிதாங்கூர் மன்னன் நடத்திய மல்யுத்த போட்டியில் மாறுவேடத்தில் கலந்து பெரும் பரிசை வென்று வந்தனர் எவ்வளவு தியாகம் எவ்வளவு வீரம்?
குன்றக்குடி முருகன் கோவில், ஆவுடையார் கோவில், செம்பொன் நாதர் கோவில், சிங்கம்புனரி சேவகப் பெருமாள் கோவில், ஆகிய திருக்கோவில்களுக்கு சீரமைப்பு, திருப்பணிச் செலவு ஆகியவற்றை நல்கி உள்ளனர். காஞ்சி சங்கரமடத்திற்கு முத்து வடுகநாதர் பெயரில் தானம் வழங்கப் பட்டதாக செப்பேடு செய்தி ஒன்றும் உள்ளது. குன்றக்குடியில் அரண்மனை ஒன்றையும் கட்டினர்.
அவர்கள் செய்த கோவில் திருப்பணிகளை கணக்கு பார்த்தால் தெரியும் மீனாட்சி அம்மன் கோவில் கல்யாண மண்டபம், திருப்த்தூர், நரிக்குடி, வீரக்குடி, திருக்கோட்டியூர், அழயான்குளம், திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் இதில் விடுபட்ட கோவில்கள் ஏராளம்.
மதச் சார்பு அற்று ஆட்சி செய்தவர்கள் இவர்கள். சருகணி மாதா கோவில் கட்டவும் உதவினர் அனைத்து சமூகத்தையும் அரவணைத்து ஆண்டனர் போரினால் நிதி நிலைமையும் சீர் செய்தனர்.
இதோடு நிற்கவில்லை பாண்டியர் என்ற பெயருக்கேற்றவாறு தங்கள் அரசவையில் புலவர் குழு சங்கம் வைத்து தமிழ் மொழியும் வளர்த்தனர்.
இவர்கள் செய்த போர்கள் எதுவும் இவர்களுக்காக இல்லை. சுயநலம் இல்லா போராளிகள். வேலுநாச்சியாருக்கு சிவகங்கையை மீட்டுக்கொடுத்தது, கட்டபொம்மன் குடும்பத்தை மீட்டு அடைக்கலம் குடுத்து பாஞ்சாலங்குறிச்சையை மீட்க உதவியது, இது தவிர வெள்ளையர்களின் மறைமுக இடையூறு அத்துடன் இவை எல்லாம் போதாது என்று மேலும் பல போர்களையும் சமாளித்து அத்தனைக்கும் இடையில் இவ்வளவு பணிகளையும் செய்தனர். இவ்வளவு சாதனையும் செய்த இந்த உடன் பிறப்புகள் நாட்டை ஆண்டது 8 ஆண்டுகள் கூட இல்லை. இவர்கள் சாதித்தது இவர்கள் சக்திக்கு 100 மடங்கு அதிகம். ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையக்காரர்களில் இவர்கள் மட்டுமே கப்பம் கட்டாதவர்கள்.
ஆங்கிலேயர்கள் தான் பொதுவாக வரி கேட்டு போர் தொடுத்து வந்தனர். ஆனால் ஆங்கிலேய நரிகளை நாட்டை விட்டு வெளியேற சொல்லி போர் பிரகடனம் செய்தனர். போர் அறிவிப்பு வெளியிட்டு கோவில் சுவர்களில் ஒட்டினர் ஆங்கிலேயருடன் பெரும்பாலான போர்களில் வென்றதும் இவர்களே.
கடைசியில் இவர்கள் பெரும்பாடுபட்டு கட்டிய காளையார் கோவிலை பீரங்கி வைத்து இடித்து விடுவோம் என கூறவே சரணடைந்தனர். இப்படியாக ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி செய்தே இவர்களை கைது செய்தனர். கடைசியில் தூக்கிலும் போட்டனர்.

No comments:

Post a Comment