கொட்டும் மழை வெள்ளத்திலும் தேவரய்யா பேச்சை ஆவலாகக் கேட்ட மக்கள், வியப்பைத் தரும் உண்மைச் சம்பவம்
நான் 1977 – 1978 ஆம் ஆண்டு கீழச்சேவல்பட்டியில் உள்ள S.M.S. உயர்நிலைப் பள்ளியில் (இப்போது மேல்நிலைப் பள்ளி) 10 ஆம் வகுப்பு
நான் 1977 – 1978 ஆம் ஆண்டு கீழச்சேவல்பட்டியில் உள்ள S.M.S. உயர்நிலைப் பள்ளியில் (இப்போது மேல்நிலைப் பள்ளி) 10 ஆம் வகுப்பு
படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தமிழாசிரியர் திரு. சேது ஐயா அவர்கள் எனது 10. A. பிரிவிற்கு தமிழ் வகுப்புகள் எடுத்தார்.
திரு. சேது ஐயா அவர்கள் மிகச் சிறப்பாக தமிழ் வகுப்புகள் எடுப்பார். அவரது வகுப்பு மிக சுவாரஸ்யமாகவும், கலகலப்பாகவும், அத்தனை மாணவர்களையும் கவர்வதாகவும் இருக்கும். எந்தப்பாடம் எடுத்தாலும், அந்தப் பாடத் தலைப்பு குறித்து பல நல்ல எடுத்துக்காட்டுகளையும், கருத்துக்களையும் சொல்லிவிட்டு, அதன் பிறகு பாடத்தைத் தொடர்வது தமிழாசிரியர் திரு. சேது ஐயா அவர்களின் தனிச்சிறப்பு. அவர் திறமைமிக்க, சிறந்த மேடைப் பேச்சாளர். பல பட்டி மன்றங்களில் பங்கு பெற்று புகழ் பெற்றவர். செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
அப்போது எங்களுக்கு 10 ஆம் வகுப்பில் உரைநடைப் பாடப் பிரிவில் "பேச்சாற்றல்" என்ற பாடம் இடம்பெற்றிருந்தது. பேச்சாற்றல் பற்றி பேச ஆரம்பித்த அவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த டெமாஸ்தனிஸ் பற்றி விளக்கினார்.
குழந்தைப் பருவத்தில் திக்கி திக்கி பேசிய டெமாஸ்தனிஸ், பள்ளிக்குச் சென்றபோது சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்து, கற்களால் அடித்ததால், ரத்தக் காயங்களோடு வீடு திரும்பிய டெமாஸ்தனிஸ், பள்ளிக்குச்செல்ல மறுத்து விட்டார். தான் திக்கி திக்கி பேசுவதால் மற்றவர்கள் ஏளனம் செய்கிறார்களே என்று கவலையடைந்த டெமாஸ்தனிஸ், தினமும் காலையும், மாலையும் கடற்கரை சென்று வாயில் கூலாங்கற்களை போட்டுக்கொண்டு பேசி, பேசி பயிற்சி பெற்று, நன்றாக பேச துவங்கினார். அப்படி வளர்ந்த டெமாஸ்தனிஸ் தான் பிறகு உலகப்புகழ் பெற்ற பெரும் பெச்சாளரானார் என்று கூறினார்.
மேலும் தொடர்ந்த தமிழாசிரியர் மேலச்சிவல்புரி அருகே ஒரு மாலை நேரத்தில் தான் கேட்ட சொற்பொழிவைப் பற்றி விளக்கத்தொடங்கினார். அவரை அவரின் உறவினர் ஒருவர் அங்கு அலைத்துச் சென்றிருக்கிறார். அந்த சொற்பொழிவு நடந்த மேடை கூரை வேயப்படாத திறந்தவெளி மேடையாக இருந்திருக்கிறது. அந்தச் சொற்பொழிவைக் கேட்க பெரும் மக்கள் கூட்டம் கூடி இருந்தார்களாம்.
சிறிது நேரத்தில் ஒரு பெரியவர் பேசத்துவங்கி இருக்கிறார். அழகிய தமிழில் இனிமையாக, தெளிவாக, கருத்தாழத்தோடு பேசி இருக்கிறார். அவரது பேச்சைத் தவிர, சிறு சத்தம் கூட இல்லாமல், அப்படி ஒரு அமைதியாக, நெகிழ்ச்சியோடு பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்திருகிறார்கள் மக்கள்.
சிறிது நேரத்தில் ஒரு பெரியவர் பேசத்துவங்கி இருக்கிறார். அழகிய தமிழில் இனிமையாக, தெளிவாக, கருத்தாழத்தோடு பேசி இருக்கிறார். அவரது பேச்சைத் தவிர, சிறு சத்தம் கூட இல்லாமல், அப்படி ஒரு அமைதியாக, நெகிழ்ச்சியோடு பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்திருகிறார்கள் மக்கள்.
பேசத்துவங்கிய சுமார் 30 நிமிடங்களில் கன மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. அங்கு கூடி இருந்த பெரும் மக்கள் கூட்டம், மழை பெய்வதை சிறிதும் பொருட்படுத்தாமல் பேச்சைக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்திருக்கிறார்கள். மேடையில் பேசிக்கொண்டிருக்கும் பெரியவர் தனது ஒற்றை ஆள் காட்டி விரலால் நெற்றியில் வழியும் மழைநீரை வழித்துக்கொண்டு, கம்பீரமாக நின்று கொண்டு, பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அந்தப் பெரியவர் மழைநீரை வழித்துக்கொண்டு நின்று பேசிய அழகை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது என்றார் தமிழாசிரியர்.
கடும் மழை நிற்கவில்லையாம். அந்தச் சொற்பொழிவு நடந்த பகுதி சிறிது தாழ்வான இடமாம். மழைநீர் சொற்பொழிவு நடந்த இடத்தைச் சூலத்தொடங்கியதாம். சொற்போழிவைக் கேட்டுக் கொண்டிருக்கும் மக்களின் இடுப்புக்கு மேல் தண்ணீர் உயரத் தொடங்கியதாம். சிலருக்கு கழுத்து வரை தண்ணீர் உயர்ந்து விட்டதாம். ஆனால் அந்த பெரும் மக்கள் கூட்டம் சிறு அசைவு கூட இல்லாமல் தண்ணீரில் அமர்ந்திருந்து அந்த பெரியவரின் சொற்பொழிவில் மூழ்கி இருந்தார்களாம். மழை பெய்ய, பெய்ய அந்த பெரியவரின் பேச்சு மிக மிகக் கருத்தாழத்தொடும், உருக்கத்தோடும் கூடியிருந்த மக்களை மெய்மறக்க வைத்ததாம்.
கொட்டும் மலையில், மக்கள் கழுத்து வரை தண்ணீர் சூழ்ந்த நிலையில் சுமார் 2 மணி நேரம் அந்த சொற்பொழிவு நடந்ததாம். அந்த பெரியவர் சொற்பொழிவை நிறைவு செய்து மேடையிலிருந்து இறங்கும் வரை, கூடிய மக்கள் கூடத்தில் ஒருவர் கூட எழவில்லையாம். உலகிலேயே தனது பேச்சாற்றலால் மழையையும், தண்ணீரையும் பொருட்படுத்தாது, மக்களை உருக வைத்த அந்த பெரியவர் தான் "பசும்பொன் முத்தராமலிங்கத்தேவர்" என்றார்.
இன்று வரை "பசும்பொன் முத்தராமலிங்கத்தேவர்" அன்று ஆற்றிய சொற்பொழிவு நிகழ்ச்சியை போல், மக்கள் மெய்மறந்து இருந்த ஒரு நிகழ்ச்சியை நான் பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை. வரும் காலத்திலும் "பசும்பொன் முத்தராமலிங்கத்தேவர்" போன்று ஆற்றல் மிக்க, நாவன்மை பொருந்திய, பேச்சாளர் இந்த உலகில் பிறப்பது ஐயமே” என்று கூறி முடித்தார் தமிழாசிரியர்.
இவ்வாறு தனது அனுபத்தை முகநூலில் பதிந்திருந்தார் நம் உறவினர் ஒருவர்.
No comments:
Post a Comment