தமிழ் நாட்டின் ''தவ நடிக பூபதி ''
பி .யு .சின்னப்பா சேர்வை
பி .யு .சின்னப்பா சேர்வை
நடிகர்கள் என்றாலே கூத்தாடிகள் என்று ஒதிக்கித் தள்ளின அந்த காலத்தில் அற்புதமான நடிப்பினால் வசனம் பேசும் பாங்கினாலும் ,மற்போர் கத்திச்சண்டை ,போன்ற சண்டைகாட்ச்சிகளினாலும்,ரசிகர்களிடையே ஒரு தனி மதிப்பைப் பெற்ற
ஓரே நடிகர் தமிழ் நாட்டின் ''தவ நடிக பூபதி ''பி .யு .சின்னப்பா சேர்வை ஆவார்.
நடிப்பு கலை மன்னன் என்ற பட்டமும் பெற்றுப் பெருமையின் சிகரமாக விளங்கினார் .
ஓரே நடிகர் தமிழ் நாட்டின் ''தவ நடிக பூபதி ''பி .யு .சின்னப்பா சேர்வை ஆவார்.
நடிப்பு கலை மன்னன் என்ற பட்டமும் பெற்றுப் பெருமையின் சிகரமாக விளங்கினார் .
சின்னப்பா சேர்வைவின் சொந்த ஊர் புதுக்கோட்டை.
உலக நாதசேர்வை, மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாகப் பிறந்த இவருக்கு இரண்டு தங்கைகள். சின்னப்பாவின் தந்தை நாடக நடிகராக இருந்ததால் ஐந்து வயது முதலே நாடக ஆர்வம். அப்பாவிடம் நாடகப் பாடல்களைக் கற்றுக்கொண்டு பாடத் தொடங்கிய சின்னப்பா ஆறு வயதில் ‘சதாரம்’ என்ற நாடகத்தில் குட்டித் திருடனாக நடித்து பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.

பிறகு எட்டு வயதில் குஸ்தி, சிலம்பம் கற்று, பத்து வயதில் தத்துவ மீனலோசனி வித்வபால சபாவில் சேர்த்துவிடப்பட்டார். பிறகு பன்னிரண்டு வயதில் புதுக்கோட்டைக்கு நாடகம் போட வந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தவருக்கு மாதச் சம்பளம் 15 ரூபாய். பிறகு மதுரைக்கு குழுவுடன் பயணித்த சின்னப்பாவுக்கு 14 வயதில் 75 ரூபாய் சம்பளம் கொடுக்க உத்தரவிட்டார் முதலாளி.
ஒரு நாள் பாய்ஸ் கம்பெனி நடிகர்கள் அனைவரும் தங்கியிருக்கும் வீட்டில் ‘சதி அனுசூயா’ நாடகத்தில் இடம்பெறும் பாடல்களை ரசித்துப் பாடிக் கொண்டிருந்தார். இவர் சாரீரமும் பாவமும் காற்றைக் கிழித்துக்கொண்டு மேல் மாடியிலிருந்த
ஸ்ரீ சச்சிதானந்தப் பிள்ளையின் காதுகளை நிறைத்தது. அவர்தான் கம்பெனி முதலாளி. “இவ்வளவு திறமையான பாடகன் யாரப்பா!?” என்று எழுந்துபோய்ப் பார்த்திருக்கிறார்.முதலாளி எதிரில் வந்து நின்றாலும் பாடலைப் பாதியில் நிறுத்தாத சின்னப்பா சேர்வைவின் ஈடுபாட்டையும் திறமையையும் பார்த்துச் சம்பளத்தை 15 ரூபாயிலிருந்து 75 ரூபாய்க்கு உயர்த்திவிட்டார்.

அதே கம்பெனியில் நடித்துவந்த எம்.ஜி.ஆர். , எம்.ஜி.சக்ரபாணி, பி.ஜி.வெங்கடேசன், பொன்னுசாமி , அழகேசன், காளி என்.ரத்தினம் என எண்ணற்ற நண்பர்கள் அவருக்குக் கிடைத்தார்கள். அதிக நண்பர்கள் இருந்தாலும் சின்னப்பாசேர்வைவிடம் கொஞ்சம் தள்ளியே இருப்பார்களாம். காரணம் அவர் கொஞ்சம் கோபக்காரர்.
இன்று நமது கதாநாயகர்கள் ‘சிக்ஸ் பேக்’ ‘ எய்ட் பேக்ஸ்’ என்று உடலை முறுக்கேற்றுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் 190 பவுண்ட் எடை வரை தூக்கி பரிசுகளை வென்று முறுக்கான வெயிட் லிஃப்டராக விளங்கினார் . இந்தியா, பர்மா, பினாங்கு, மலேசியா, ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நடித்து வந்த ‘சந்திரகாந்தா’ நாடகத்தின் புகழ் பிரிட்டிஷ் இந்தியா முழுக்கப் பரவியது. அதை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படமாகத் தயாரித்து 1936-ல் வெளியிட்டது. டெல்லியிலும் கல்கத்தாவிலும்கூட மேடையேறியது.
அதில் சுண்டூர் இளவரசனாகத் தோன்றிய சின்னப்பா சேர்வைவின் வரவு தமிழ் சினிமாவின் முதல்
சகலகலா கதாநாயகனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு ஆர்யமாலா, ஜகதலப் பிரதாபன், கண்ணகி, குபேர குசேலா, ஹரிச்சந்திரா, மஹாமாயா, பிருதிவிராஜன், மனோன்மணி, உத்தமபுத்திரன் (இரட்டை வேடம்), மங்கயர்க்கரசி, கிருஷ்ண பக்தி என்று தொடர் வெற்றிகளைக் கொடுத்த கதாநாயகனாகக் கவர்ந்தார்.

தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் வீடுகளை வாங்கிக் குவித்தார். இதை அறிந்த புதுக்கோட்டை ராஜா, இனி சின்னப்பா இங்கே வீடுகளை வாங்கக் கூடாது என்று தடையே போட்டாராம்.
பிருதிவிராஜன் படத்தில் பிருதிவியாக நடித்த சின்னப்பாவுக்கும், சம்யுக்தையாக நடித்த ஏ.சகுந்தலாவுக்கும் இடையிலான திரைக்காதல் நிஜத்திலும் காதல் மணமாய் முடிந்தது. பாட்டையும் நடிப்பையும் தன்னிரு கண்களெனக் காத்து வந்த பி.யு. சின்னப்பா தனது 35வது வயதிலேயே திடீர் உடல்நலக்குறைவால் பூவுலகை விட்டு நீங்கினார். ஆனால் அவர் நடித்த படங்களும் பாடிய பாடல்களும் இன்னும் மவுசு குறையாமல் கலையுலகின் பொக்கிஷங்களாக விளங்குகின்றன
No comments:
Post a Comment