Friday, July 28, 2017

இந்த நாட்டுக்காக பாடுபட்ட தியாகிகளை மதிக்காத இந்த நாடு உறுப்படும்மா என்றார் தேவர்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக சென்னையில் இருந்த நேரம் முத்துராமானுஜத் தேவரை அழைத்து பாண்டியனூருக்கு போய் காவி ஸ்டோரில் சிவப்பு புள்ளி வைத்த இரண்டு புடவைகளை வாங்கிட்டு வா என்கிறார்
முத்துராமானுஜத் தேவருக்கோ குழப்பம் யாருக்காக வாங்கிவரச் சொல்கிறார் என்று போய் இரண்டு புடவைகளை வாங்கி வருகிறார் டாக்ஸி பிடித்து நேரே மயிலாப்பூர் குளத்திற்கு அருகே காஞ்சி சாலையில் உள்ள மிருதங்க வித்வான் முருகபூபதி வீட்டுக்கு வருகிறார் .தங்கையான இந்திராணி அம்மையாரிடம் உள்ளே சென்று அம்மாவை அழைத்துவா என்று சொல்ல
அவரும் வயதான பெண்மணியை அழைத்து வருகிறார் அவர் வந்ததும் சாஷ்டாங்கமாக அந்த அம்மையார் காலில் விழுந்து வணங்குகிறார் தேவர் கொண்டு வந்திருந்த காவிப் புடவைகளையும் பணத்தையும் கொடுக்கிறார் கண்களில் கண்ணீர் அரும்ப தேவர் முத்துராமானுஜத் தேவரை பார்த்து கேட்டார் இந்த அம்மையார் யார் என்று தானே உனக்கு குழப்பம்? இந்த அம்மையார் மாவீரன் வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் என்றார்
காங்கிரஸ் ஆடசியில் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கினார்கள்
அதில் வாஞ்சிநாதன் மனைவி பொன்னம்மாள் அவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை ,
அரசால்கிடைக்க வேண்டிய எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை
தன் வாழ்வை இழந்து தேசம் காத்த மாவீரன் வாஞ்சிநாதன்
மனைவியே எண்ணி வேதனையோடு
இந்த நாட்டுக்காக பாடுபட்ட தியாகிகளை மதிக்காத இந்த நாடு
உறுப்படும்மா என்றார் தேவர்
நாட்டுக்காக சிறு வயிதிலேயே தூத்துக்குடி மணியாட்சி இரயில் நிலையத்தில் கொடுங்கோலன் ஆஷ்துறையை சுட்டுக்கொன்ற வீர வாஞ்சிநாதன் நினைவுதினம் இன்று ஜீன் 17......

No comments:

Post a Comment