Friday, July 28, 2017

இந்திய நாட்டு மக்களுக்ககாக தன்னுடைய ஐ.சி.எஸ் பதவியே உதறித்தள்ளியவர் ---நேதாஜி

வங்கம் தந்த சிங்கம் ‘நேதாஜி’சுபாஷ் சந்திர போஸ்
ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு மிகப்பெரிய தலைவலியாய் விளங்கிய, இந்திய இளைஞர்களின் கனவாய் வாழ்ந்த இந்த சிங்கம் இவரது மரணம் வேண்டுமானால் சர்ச்சைக்குள்ளானதாக இருக்கலாம், ஆனால் இந்திய சுதந்திரத்திற்கான இவரது முழக்கங்களும் போராட்டங்களும் அழியாப்புகழ் பெற்றவை. நேதாஜி என்ற ஒற்றைச் சொல்லை சொன்னால் ஒவ்வொருவரின் ரத்த நானங்களும் துடிப்பது எதனால், ஆங்கிலேயர்கள் இந்த ஒற்றை மனிதனைப் பார்த்து அரண்டது எதனால்? ஏன் இவருக்கு மட்டும் அப்படியொரு தனித்துவம்?இதோ…
ஐ.சி.எஸ் பதவியை உதரினார்:
இநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், தன்னுடைய ஆரம்பக் கல்வியை, கட்டாக்கிலுள்ள “பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில்” தொடங்கினார். பின்னர், 1913ல் “கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில்” தன்னுடைய உயர் கல்வியை முடித்த அவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங்கினார். சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை ஆர்வமுடன் படித்தும் வந்தார். 1915 ஆம் ஆண்டு “கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில்” சேர்ந்த அவர், “சி.எஃப் ஓட்டன்” என்ற ஆசிரியர், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை சொன்னதால், ஏற்பட்ட தகராறால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர், “ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்” சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக 1919 ஆம் ஆண்டு ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க லண்டனுக்கு சென்றார்.ஐ.சி.எஸ் தேர்வில், 1920-ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்திலே நான்காம் இடம்பெற்று தேர்ச்சியடைந்தார்
( நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஐ.சி.எஸ் படித்தவர்கள் அன்று பிரிட்டிஷ் அரசு கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவில் அரசுத்துறை ,
நீதித்துறை ,இராணுவத்துறை ,காவல்த்துறை ,மாவட்ட ஆடசியாளர் போன்ற துறையில் ஐ.சி.எஸ் படித்தவர்கள் எந்த துறையில் பணியாற்றலாம்.
.இன்று IAS .படித்தவர்கள் மாவட்ட ஆடசி தலைவர்,குறிப்பிட்ட அரசு பதவி மட்டும் வகிக்க முடியும் ) ,
சுபாஷ். மிகப்பெரிய பதவி.. சர்க்கார் உத்தியோகம்… ஆனால் அவையெல்லாம் ஆங்கிலேயர் முன் அவரை மண்டியிடச் செய்யவில்லை. தேர்ச்சி பெற்ற உடனேயே தனது ராஜினாமா கடிதத்தை மான்டேகு பிரபுவிடம் அளித்தார் சுபாஷ். மதிப்புமிக்க பதவியை உதரித்தள்ளிய அவரைப் பார்த்து, “உன் பெற்றோர் வருத்தப்படமாட்டார்களா” என்று அவர் கேட்டதற்கு, “என் தாய் தந்தையருக்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் என் தாய்நாட்டின் வருத்தம் அதை விடப் பெரியது” என்று சொல்லி அவருக்கே அதிர்சியளித்தார் .
இந்திய வரலாற்றின் ஒப்பற்ற நாயகன். வரலாற்றை அலைக்கழிக்கும் ஓர் அழியா சரித்திரம் ‘நேதாஜி’
ஜெய்ஹிந்த்
நன்றி
தேவரின புத்தகம்
v .s .நவமணி

No comments:

Post a Comment