Friday, July 28, 2017

தேவர் அரிசன உயர்வுக்கு போராடிய தலைவர்



தேவர் அரிசன உயர்வுக்கு போராடிய தலைவர்
தேவர் திருமகனை சமூகம் என்கிற சிமிழ்லுக்குள்ளே அடைத்து வைக்கிற முயற்சிக்க கூடாது .பசும்பொன் தேவர் 
சாதிக் கூண்டுக்குள்ளே ,சமூகம் கூண்டுக்குள்ளே தன்னை 
அடைத்து கொண்டாரா ?என்றால் இல்லை 
ஆங்கில அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பேசியவர் .ஆசியாவே ஓன்று திரள வேண்டும் ''என்று பேசியவர் .அப்படி பேசிய பெருமகனை-திருமகனை -ஒரு குறிப்பிட்ட சமூக முத்திரை குத்தி அவரை சிருமைப்படுத்துவதற்கு சிலர் முயற்சி செய்தார்கள் .
அவரை பெற்றுரெடுத்த இந்த முக்குலத்து சமுதாயம் ,அந்த சமூக கூண்டுக்குள்ளே அடைத்ததா ? என்றால் இல்லை எந்த முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த பெருமக்களும் தேவர் பெருமகன் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம் .அவருடைய தேசீய உணர்வை நாங்கள் மட்டும்தான் போற்றுவோம் ;மற்ற சமூகத்துக்காரர்களுக்கு இதிலே பங்கு கிடையாது என்று யாரும் சொன்னது கிடையாது .
இன்னும் குறிப்பிட விரும்புகிறேன் .
பசும்பொன் தேவர் தொகுதிக்குள்ளே போகாமல் வெற்றி பெற்றார் .அவரை எதிர்த்து போட்டியிட்டவர்கள் எல்லாம் டெபாசிட் தொகையே இழக்க வைத்தார் என்றால் ,அவருக்கு முக்குலத்தோர் மட்டும்மா வாக்கு போட்டார்கள் ?
முக்குலத்தோர் மட்டும்மா வாக்கு போட்டு மற்றவர்ர்களுடைய டெபாசிட் தொகையே இழக்க வைக்க முடியும் ?
முக்குலத்தோர் மட்டுமா எங்கள் ஜாதியே சேர்ந்தவர் என்று அவருக்கு ஓட்டு போட்டார்கள் ?அனைத்து பெரு மக்களுடைய அன்பையும் அவர் பெற்றிருந்தார்
இன்னும் நான் தெரிவிக்க விரும்புகிறேன் ''அரிசன சமுதாயம் உயர வேண்டும் ;அந்த சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடியவர் 
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 
மதுரை மீனாட்ச்சி அம்மன் ஆலயத்திற்குள் அரிசன பெருமக்கள் அடியெடுத்து வைக்க கூடாது ,ஆலய பிரவேசம் கூடாது என்று சனாதனிகள் அன்றைக்கு எதிர்த்து நின்ற நேரத்தில் ,அந்த சனாதனக் கோட்டையே தகர்த்தெறிந்து விட்டு அரிசனப்பெருமக்களை அழைத்து கொண்டு உள்ளே சென்றவர் பசும்பொன் தேவர் என்கிற வரலாற்று செய்தியே நினைவுபடுத்த விரும்புகிறேன் .
தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு உயர்வுக்காக உழைத்த தலைவர் . தன் சொத்த்துக்களை தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு வழங்கியவர் இன்றும் அந்த அரிசன மக்கள் தேவரை தெய்வமாக வணங்கி வருகிறார்கள் .
தொகுப்பு ;பா .ராமசந்திரன் 
பத்திரிக்கையாளர் .
கள்ளர் முரசு

No comments:

Post a Comment