காளையார்கோயில் தேரோட்டம்
காளையார்கோயில் தேர் மருது சகதோதரர்களால் செய்விக்கப் பட்டதாகும் .இதை செய்தவர் குப்பமுத்து ஆசாரி என்பவர் .தேர் செய்து முடித்ததும் தேரோட்டத்திற்கு நாள் குறித்தனர் .அந்நன்நாளில்தேரோட்டம் காண மக்கள் குழுமியிருத்தனர்.மருது சகதோரர்கள் தேரின் மீது ஏறி நின்றனர் ..குப்பமுத்து ஆசாரியும் அவர்கள் அருகில் நின்றார் .ஆடவர் ஆடவரும் அனைவரும் தேர்வடம் பிடித்து தேரினை இழுக்க தொடங்கினர் .ஆயினும் தேர் நிலை கொண்ட இடத்தை விட்டு நகரவில்லை வியப்பும் வருத்தமும் கொண்ட மருது சகோதரர் நோக்கி ஆசாரி ஆறுதல் கூறினார் .
பெரிய மருது கைவிரல் மோதிரத்தையும் செங்கோலையும் ஆசாரி தம்மிடம் தர வேண்டினார் .மேலும்,தேர் நிலை கொள்ளும்வரை சிவகங்கை சீமையின் அரசராக தம்மை அறிவிக்கவேண்டும் என்றும் இது ஆண்டவன் இட்ட கட்டளை என்றும் பெரிய மருதுவை நோக்கி பணிந்து கூறினார் .
தேர் நகர மறுத்ததை பெருங்குற்றமாக எண்ணி மருது சகோதர்கள் ஆசாரியின் வேண்டுகோள் இதற்க்கு தக்க கழுவாயாக அமையும் என்றெண்ணி அவர் விரும்பியவாறு செய்தனர் . அவர் மன்னராக அறிவிக்கப்பட்டவுடன் தேர் நகர தொடங்கியது.தங்கு தடையின்றி ஊர்வலம் வந்து நிலையில் நின்றது .தேர் நிலையில்நிற்கும் நேரத்தில் ஆசாரி கையில் பிடித்திருந்த செங்கோல் சாய்ந்தது .அவரும் தேர் சக்கரத்தின் அடியில் இடறி விழுந்து உயிர் நீத்தார் .உயிர் பிரிவதற்குமுன் அவர் தம் இடுப்பில் இருந்த ஓலையே பெரிய மருதுவிடம் கொடுத்தார் .ஆவோலையில் தம்மை மன்னிக்கவேண்டும் தேர் நிலைக்கு வந்து சேரும் நேரத்தில் மன்னரின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று சோதிட குறிப்பு இருந்ததால் அதை மாற்றி அமைத்தற் பொருட்டு தாமே மன்னராக வேடம் தாங்கி இறந்ததாகவும் எழுதியிருந்தது .மன்னர் வாழ்வே மக்கள் வாழ்வாக கருதி மருதுவின் உயிர்காத்து தம்முயிர் நீத்த குப்பமுத்து ஆசாரியின் பெருங்கருணைனையே நினைத்து பெரிய மருது உள்ளம் உருகினார் .
இஷ்செவிவழி செய்தியே காளையார்கோயில்
தலைமை குருக்கள் கூறினார் .
மருது சகோதரர்கள் மீது மக்கள் கொண்டிருந்த அன்பினை
ஒரு சாதாரணக் குடிமகன் வாயிலாக அறிவதற்கு தகுந்த நிகழ்ச்சியாக இது விளங்குகிறது .
தலைமை குருக்கள் கூறினார் .
மருது சகோதரர்கள் மீது மக்கள் கொண்டிருந்த அன்பினை
ஒரு சாதாரணக் குடிமகன் வாயிலாக அறிவதற்கு தகுந்த நிகழ்ச்சியாக இது விளங்குகிறது .
No comments:
Post a Comment