Tuesday, July 25, 2017

முருகா ...பழனிமுருகா ...திருமுருகா என் தெய்வம் மனதினில் வாழும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

அதிவீர ராம பாண்டிய அரசர்குல மணியே
அதிசயமான மரபு தந்த அறிவுச்சுடர் மணியே
செம்பிய சோழர் குல செழும்பொன்மணியே
செரு வென்ற பாண்டியர் வழிவந்த மணியே
பசும்பொன் நகர் தந்த முத்துராமலிங்க மணியே 
தித்திக்கும் தமிழ் தத்துவமெல்லாம்
கற்று தெளிந்த தங்கம்
பக்தியுடன் அருள் தத்துவமெல்லாம்
பார்த்துத் தெளிந்த தங்கம்
சித்தியுடன் நறுமுத்தி யளித்திடும்
செந்தமிழ் முருகா எங்கும்
தேடியலைந்தேன் எங்கே -எங்கள்
தேவர் முத்துராமலிங்கம் எங்கே
முருகா.... பழனி முருகா ... திருமுருகா
தேவரை போல தமிழில் பேசிட
ஜெகமேல் யாரும் உண்டா ? செய்த
சேவையைப் போல பூமியில் யாரும்
செய்திட வீரம் உண்டா
தன்னலம் கருதா அத்தலைவரைப் போல
தரணியில் யாரும் உண்டா ?
தத்துவம் பேசிடும் உத்தமராகிய
முத்துராமலிங்கத்தேவர் எங்கே ?
முருகா.... பழனி முருகா.... திருமுருகா
பொன்னும் மணியும் அணியா ஞானி
பூமியில் எங்கள் தேவர்
போக கடலில் விழா ஞானி
புண்ணிய மூர்த்தி தேவர்
எண்ணற்கரிய செல்வம் இருந்தும்
ஏதும் எண்ணாதவர் தேவர்
எத்தனை எத்தனை தியாகம் செய்தார்
என்னருந் தெய்வம் தேவர் எங்கே ?
முருகா ...பழனிமுருகா ...திருமுருகா
என்மனம் வாழும் தெய்வம்
ஈடோ இணையோ இல்லாத ஞானி
இன்பத்து தமிழக தெய்வம்
பாடும் சேது மொக்கையன் போற்றிடும் பசும்பொன் வாழ்ந்திடும் ,தெய்வம்
பக்தி கருளும் பழனிகுமரா
பாரதம் போற்றிடும் தெய்வம் எங்கே
முருகா ...பழனிமுருகா ...திருமுருகா
என் தெய்வம் மனதினில் வாழும்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

இந்த பாடலை சட்டசபையில் பாடி
தேவரின் படத்தை சட்டசபையில்
வைக்க (எம் .ஜி .ஆர் ) ஏற்பாடு செய்தார்
பாட்டுக்கார மொக்கையன் (ராஜபாளையம் முன்னாள் எம் .எல் .ஏ)
கள்ளர்முரசு

No comments:

Post a Comment