நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை... பிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் பரபரப்பு தகவல்!
பாரீஸ்: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தால் இறக்கவில்லை என்று பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் உறுதிபடுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பாரீஸ் நகரத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜே.பி.பி மோரே கூறுகையில்,தைவான் விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. விமான விபத்தில் தான் சுபாஷ் சந்திரபோஸ் இறந்தார் என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. 1945 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி நடந்த விமான விபத்தில் அவர் இறக்கவில்லை. இதற்கான சான்றுகள் உள்ளன என்றார். மேலும் 1947ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ம் தேதி நடந்த விமான விபத்து ஒன்றில் வேறு யாரோ இறந்து இருக்கலாம் என்றும் அது சுபாஷ் சந்திர போஸ் என்பதற்கு சான்றுகள் இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரான்ஸ் உளவுத்துறை அதிகாரிக்கள் கூறுகையில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1945ம் ஆண்டில் நடந்த விபத்தில் இறக்கவில்லை, அவர் தப்பி சென்று உயிரோடு இருந்தார்." என்கிறது . ஆனால் 1947ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அவர் இறந்திருக்கலாம் என்று அதே பிரான்ஸ் ரகசிய சேவை அறிக்கை கூறுகிறது. ஆனாலும் அவர் இப்போதும் உயிரோடு இருக்கலாம், அல்லது இறந்திருக்கலாம் என்று ஒரு தகவல் உலா வந்துகொண்டுதான் இருக்கிறது. மத்திய அரசும் நேதாஜி மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன்கள் அமைத்தும் ஆவணங்களை வெளியிட்டும் வருகிறது. மேற்கு வங்க அரசும் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்பது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment