Tuesday, July 25, 2017

தேவர் ஸ்ரீ இராமனைபற்றி பேசப்போகின்றோம் அல்லவா ,அதனால்தான் ஆஞ்சநேயர் வந்து வாழ்த்து தெரிவிக்கின்றனர் -

ஸ்ரீ வைகுண்டத்தில் நடைபெற இருந்த பொது கூட்டத்தில் தேவர் திருமகனாரை ஆத்தான் ஐயங்கார் அவர்கள் ஆழ்வார் திரு நகருக்கு அழைத்து சென்று இராமாயணம் பற்றி ஆன்மிக உரை ஆற்ற கோயிலுக்கு அழைத்து சென்றார் 
தேவர் அவர்கள் கோயிலின் வாசல் முன்பு வந்து இறங்கியவுடன் ஆத்தான் ஐயங்கார் அவர்களும் பிற ஆன்மிகப்பெரியோர்களும் தேவர் அவர்களுக்கு மரியாதை செய்வும் பொருட்டு ஒரு யானையே முன்நிறுத்தி அதன் தும்பிக்கையில் மாலையே கொடுத்து தேவர் அவர்களுக்கு அணிவிக்க செய்தார்கள் .யானைத்தேவரவர்களுக்கு மாலை அணிவித்தவுடன் அங்கு இருந்த அனைவரும் சந்தோசத்துடன் கரஒலி எழுப்பினார்கள் . அனைவரும் எழுப்பிய கரஒலி நின்ற போதும் தொடர்ந்து கரஒலி கேட்டுக்கொண்டேயிருந்தத்தை கண்டு அனைவரும் ஓசை வந்த திசையே நோக்கி திரும்பி பார்த்தார்கள் அந்த கோயில் மதில்களின் மேலே உட்கார்ந்திருந்த குறங்குகள் கைதட்டிக்கொண்டு இருந்தன .அதைப்பார்த்த அனைவரும் ஆசாரிய பட்டு போனார்கள் .இதை கவனித்த
தேவரவர்கள் ஸ்ரீ இராமனைபற்றி பேசப்போகின்றோம் அல்லவா ,அதனால்தான் ஆஞ்சநேயர் வந்து வாழ்த்து தெரிவிக்கின்றனர் -என்றார்

மாலை மரியாதையே பெற்றுக்கொண்ட தேவரவர்கள் கோயில் தரிசனம் முடிந்த பின்பு கொடிமரத்து அருகில் அமர்ந்து சொற்பொழிவு ஆற்ற தொடங்கினார் .சொற்பொழிவை கேட்க ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தார்கள் .தேவர் திருமகன் தன்னுடைய உரையே துவங்கி ஓரிரு நிமிடங்கள் தான் இருக்கும் மதி சுவரில் இருந்த குரங்குகள் கைதட்டி வரவேற்று குரங்குகள் அனைத்தும் கொடி மரத்து அருகில் வந்து அமர்ந்து கொண்டன .எல்லோரும் அருகில் அமர்ந்த அக்குரங்குகளை பதட்டத்துடன் பார்த்ததை கண்ட தேவரவர்கள் ''யாரும் பயப்படவேண்டாம் சொற்பொழிவு முடிந்தவுடன் அவர்கள் சென்றுவிடுவார்கள் .அவர்களை தொந்தரவு செய்யவேண்டாம் -எனக்கூறி தன்னுடைய சொற்பொழிவை தொடர்ந்தார் .

இராமனுடைய சிற்றப்புகளையும் அது சம்பந்தமான கம்பனின் பாடல்களையும் எடுத்து கூறி உரையாற்றும் சமயங்களில் குரங்குகள் கொடிமரத்தை சுற்றியிருந்த வேலி கம்பிகளில் குதித்து குதித்து தங்களுடைய சந்தோசத்தினை வெளிப்படுத்தின.தேவரவர்கள் பேசி முடித்ததும் ,குரங்குகள் அனைத்தும் அந்த இடத்தை விட்டு வெளியேரி சென்ற பின்புதான் எல்லோரும் கலைந்து சென்றார்கள்

No comments:

Post a Comment