தியாகத்தின் திருஉருவம், தெய்வத்தின் மறுஉருவம்
தன் வாழ்நாளை மக்களுக்காக மட்டும் வாழ்ந்த மகான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
33 கிராமங்களுக்கு சொந்தகாரராக இருந்தாலும் கதர் ஆடை அணிந்து மக்களோடு மக்களாகவே வாழ்ந்தார்.
அரசியல், ஆன்மீகம், பொதுஉடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தொழிலாளர்கள் போராட்டம் என பன்முக தன்மை கொண்டவர் பசும்பொன் தேவர்
தமிழ் மொழி மீதும் தேசத்தின் மீதும் அவர் கொண்ட பற்றை அவரது மேடை பேச்சுக்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்
வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கு சிறையில் கழித்தவர்.
வாய்ப்பூட்டு சட்டம் போட்ட வெள்ளையனை தனது வெற்றியின் மூலம் வாயடைக்க செய்தவர்
இவர் எழுதிய கட்டுரைகள் மூலம் தேவரின் உலக பார்வை தெரிய வருகிறது, இதில் "காஷ்மீரில் மூன்று பாகிஸ்தான் ","பாகிஸ்தான் கேட்டவனூம் முட்டாள்,கொடுத்தவனும் முட்டாள்",காஷ்மீரில் நேருவின் தடுமாற்றம் ",வட- அட்லாண்டிக் மாநாடு ","57 ஜூலையில் துவக்கிய புதிய சகாப்தம்", "மேற்கை குடைசாய்க்கும் கிழக்கு ",மாசேதுங்கின் மாஸ்கோ பயணம் " போன்ற கட்டுரைகள் மூலம் அவரது உலக பார்வை பற்றி தெரிந்து கொள்ளலாம்
தேசப்பற்றும் தெய்வபற்றும் மிகுந்தவர்பசும்பொன் தேவர்.
மனிதராக பிறந்து தெய்வமாக வணங்கப்படும் வெகு சிலரில் ஒருவர் பசும்பொன் தேவர்.
No comments:
Post a Comment