இன்று ஜார்ஜ் ஜோசப் 131வது பிறந்தநாள்
இந்நாளில் கள்ளர்முரசு அவரது தியாகத்தினை போற்றுகிறது.
பிறந்தாரைப் போற்றுவோம் !
ரோசாப்பூத்துரை என்று மேற்குச்சீமை மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவரும் ,
கைரேகை சட்டத்தில் பாதிக்கப்பட்ட பிரமலைக்கள்ளர்களுக்கு வழக்காடிய ஜார்ஜ் ஜோசப் (எ) ரோசாப்புதுறை அவர்களின் பிறந்தநாள் இன்று ஜூன் -5
ஜார்ஜ் ஜோசப்
ரோசாப்பூத் துரை என அழைக்கப்பட்டஜார்ஜ் ஜோசப் (George Joseph, சியார்ச்சு சோசப்பு 5 சூன் 1887 – 5 மார்ச்சு 1938) கேரளாவைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; வழக்குரைஞர் ; 1937-ஆம் ஆண்டு சென்னை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்; இதழாசிரியர்; காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களுடன் நேரடித் தொடர்பில் முன்னின்றவர். கேரளத்தில் நடைபெற்ற வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கிறித்துவர். ஆங்கில அரசு குற்றப் பரம்பரை சட்டத்தை செயல்படுத்திய போது, அது தொடர்பாகப் பலரின் வழக்கைத் தானே முன்வந்து நடத்தி வெற்றி கண்டவர். கேரளாவில் பிறந்தாலும் தமிழகத்தை மையமாகக் கொண்டு தன்னை மிகச்சிறந்த தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்
இளமை[தொகு]
1887ம் ஆண்டு கேரளாவின் திருவாங்கூர் பகுதியின் செங்கானூரில் சிரியன் மரபுவழிக் கிறித்தவப் பிரிவில் (ஆர்த்தடாக்சு) பிறந்தவர் பின்னர் கத்தோலிக்க கிறித்தவ சபைக்கு மாறினார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்று, பின்னர் இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். கேரளத்திற்கு திரும்பியபோது ஆங்கிலேய அரசாங்கம் பல உயர் பதவிகளைத் தர இருந்த நிலையில் தந்தையாரின் வற்புறுத்தலையும் மீறி அந்தப் பதவிகளை ஏற்க மறுத்தார். அவரின் திருமணமும் ஆங்கில அரசில் உயர்பதவி வகித்த குடும்பத்தில் நடந்தேறியது. அப்போதும் அவர் ஆங்கிலேயர் தந்த பதவிகளை ஏற்க மறுத்தார்.
கிறித்தவராகப் பிறந்தாலும் காந்தியின் எதிர்ப்பையும் மீறி வைக்கம் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியவர்.[1] தனது மகளுக்கு மாயா என புத்த மதப் பெயரை வைத்து அனைத்து மதத்தினரையும் மதிப்பவராக இருந்தார். பின்னர் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபடலாம் எனத் தமிழகத்திற்கு வந்தவருக்குச் சென்னை போதிய ஒத்துழைப்பைத் தராத நிலையில் மதுரையில் தனது வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கத் திட்டமிட்டு 1909 -இல் மதுரையில் குடியேறினார். மதுரையில் நடைபெற்ற பல வழக்குகளின் போது குறுக்கு விசாரணைகளில் சிறந்து விளங்கினார்.
இறுதிக் காலம்[தொகு]
பல்வேறு புகழுக்கும், பெருமைகளுக்கும் சொந்தக்காரரான விடுதலை வீரர் ஜார்ஜ் ஜோசப்பின், தியாகமும், வீரமும் மறைக்கப்பட்டது.[7] காங்கிரஸ் கட்சியினரே இவரது வளர்ச்சியையும், உண்மையையும் விரும்பவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் தீவிர அரசியல் பணியில் இருந்து விலகிக் கிறித்தவத்தில் தனது கவனத்தைச் செலுத்திய நிலையில் இந்திய விடுதலையைக் காணாது 1938-ஆம் ஆண்டு மார்ச் 5 ம் தேதி சிறுநீரகக் கோளாறு காரணமாக மதுரை அமெரிக்க மிஷன் மருத்துவமனையில் காலமானார். மதுரை புது நல்லமுத்துப் பிள்ளை ரோட்டில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு இன்றும் கள்ளர் சமூக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. கக்கன் உள்துறை அமைச்சராக இருந்தபோது ரோசாப்பூதுரைக்கு மார்பளவு சிலையை யானைக்கல் பகுதியில் அமைத்துப் பெருமைப்படுத்தியுள்ளார்

கள்ளர்முரசு சுரேஷ்
No comments:
Post a Comment