Monday, July 9, 2018

காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நார்வேயிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,
நார்வேயிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல் தமிழ்நாட்டில் தென் மாநிலங்களில் காலா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் சமூக நீதியின் மீது பற்று கொண்ட மக்களை சமூக விரோதிகள் என்று கூறிய
சிவாஜி ராவு என்ற ரஜினிகாந்த் காலா படத்தினை ஒட்டு மொத்த தமிழ் மக்களும் புறக்கணிக்கிறார்கள்
ரஜினி நடித்த காலா படம் ஜூன் மாதம் 7 - ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட்வர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் சமூக விரோதிகள் தான் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணம் என பேட்டியளித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு பல தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து ரஜினியின் காலா படத்தை நார்வேயில் திரையிடமாட்டோம் என நார்வே தமிழ்த் திரைப்பட
விநியோகஸ்தர் குழுவின் நிர்வாக உறுப்பினர் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் தூத்துக்குடி சம்பவத்திற்கு பிறகு இனிமேல் தமிழர்களை, தமிழினத்தை கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடமாட்டோம் என உறுதி கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்வேயைத் தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடான சுவிட்சர்லாந்திலும் காலா படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாக உள்ள நிலையில் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து காலா பட வெற்றிக்கு எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம

No comments:

Post a Comment