Saturday, July 7, 2018

ஆனந்தமுருகன் மீனவர் குப்பத்தில் பறக்கும் புலிக்கொடி தமிழ்நாட்டின் தலைநகரில் தேவர் திருமகனாரின் பெருமைகளை பேச வைத்திருக்கும்

மீனவர் குப்பத்தில் பறக்கும் புலிக்கொடி
தமிழ்நாட்டின் தலைநகரில்
தேவர் திருமகனாரின் பெருமைகளை
பேச வைத்திருக்கும் ஆனந்தமுருகன்
ஆல் இந்தியா பெடரல் பார்வர்ட் பிளாக் இயக்கத்தின் மூலம் தமிழ் நாட்டின்
தலைநகரான சென்னை மாநகரில் தேவர் திருமகனாரின் பெருமைகளை முன்னெடுத்து செல்லக்கூடிய செயல் வீரர் ஆனந்தமுருகன்
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி எனது சொந்த ஊர்.அப்பா மத்திய அரசு பணியில் இருந்ததால் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே
சென்னைக்கு குடும்பத்தோடு சென்று விட்டோம் .அப்பா தளவாய் பாண்டியன் அரசு பணியில் இருந்து கொண்டே தேவர் மக்கள் இயக்கம் என்ற அமைப்பினை நடத்தி வந்தார் .அப்பா , டாக்டர் ராமகிருஷ்ணன் ,சீனிச்சாமித்தேவர்,மாடசாமி தேவர் ,மலைச்சாமி IAS என ஒரு அணியாக தேவர் திருமகனாரின் பெருமைகளை முன்னெடுத்து செல்கின்றனர் .
தேவர் ஜெயந்தி விழா நடைபெறுகிற ஒரு மாத காலமும் திருவிழாவைப்போல ,கபாடி ,பேச்சு போட்டி பெற்றவை நடக்கும் .அப்போது வருடம் தவறாமல் பசும்பொன்னிற்கு சென்று வருகிற நான் ''தேவர் இதயநாதம் '' என்ற பெயரில் தேவரின் பெருமைகளை பேசும் புத்தகத்தை விற்பதற்காகவும் ,தேவரின் பாடல்கள் ,தேவரின் வரலாற்றை வில்லுப்பாட்டு மூலம் பேசிடும் கேசட்டுகளை விற்பதற்காகவும் வருவேன் .இருபது நாட்கள் பசும்பொன்னிலே தங்கியிருந்து இந்தப்பணிகளை செய்வேன் .
அப்போதுதான் பார்வர்ட் பிளாக் இயக்கத்துடனான தொடர்பு ஏற்பட்டது .ஆண்டித்தேவர் ,தனிக்கொடித் தேவர் ,கார்த்திக் ,சந்தானம் ஆகியோரது அறிமுகம் கிடைக்கிறது .கார்த்திக் நீக்கத்திற்கு பிறகு மாணவர் அணி பொறுப்பு எனக்கு பார்வர்ட் பிளாக் சென்னை மாவட்ட செயலாளராக 3 வருடம் பொறுப்புடன் செயல்பட்டேன் .பின்னர் மயிலாப்பூர் தொகுதியில்
போட்டியிட சட்டமன்றதேர்தலில் விருப்பம் தெரிவித்தேன் .ஆனால் அந்த தொகுதி நெப்போலியன் அவர்களுக்கு வழங்கப்பட்டது .பின்னர் கடும் எதிர்ப்பு அலைகளுக்கு மத்தியில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டேன் .
அப்போது இடைக்கால முதல்வராக இருந்த ஓபிஸ் தனது ஆளும் அதிகாரம் முழுவதையும் எனக்கு எதிராக செயல்படுத்தியபோதும் சிங்கம் சின்னம் கேஜெட்டில் ஏற்றப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ,எதிர்ப்புகள் அனைத்தையும் சமாளித்து என்னோடு இருந்தவர்கள் கூட விலை பேசப்பட யாரையும் நம்ப இயலாத சூழலில் மதுரைபெரியார் பேருந்து நிலையத்தில் மூன்று நாட்கள் சுற்றி திரிந்தேன் .இந்த ரகசியம் பிஷ்வாஸ் அவர்களுக்கு மட்டுமே தெரியும் .700 ஓட்டுக்களை பெட்ரா போதும் சிங்கம் சின்னத்தை நிறுத்தி விட்டோம் .பெரியகுளம் மண்ணில் என்ற திருப்தி இருந்தது .
2007 ஆண்டு மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்கிற நான்
5 செயல் திட்டங்களை முன் வைக்கிறேன் .சிங்கள ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து 1 ,300 கி.மீ நடைபயணம் முடிவு செய்கிறேன் .சாதாரண நடைபயணமாக இல்லாமல் ஒரு படகு ஒன்றை தயார் செய்து அதனை இழுத்து செல்கிற வகையில் வடிவமைக்கப்படுகிறது .புலிக்கொடி, தேவர் திருமகனாரின் படங்களோடு சிங்களவர்கள் தமிழக மீனவர்களை தாக்குவது போன்று காட்ச்சியையும் அதில் தத்ரூபமாக இடம் பெற்று இருந்தது .
அந்த நடை பயணத்தை முத்த கம்யூனிஸ்ட் இயக்கத்தலைவர் தா .பாண்டியன் பார்வார்ட் பிளாக் பொது செயலாளர் கதிரவன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர் .இரவு ,பகலாக பயணம் செய்து கடந்து 34 நாட்கள் நடந்து இராமேஸ்வரத்தில் அதன் நிறைவு விழா நடைபெறுகிறது
''மேதகு பிரபாகரன் '' அவர்களின் பெரிதான கவனத்தை பெற்ற இந்த நடைபயணம் நிறைவு விழாவிற்கு யாழ்ப்பாணம் என்.பி .சிவாஜி லிங்கத்தை அவர் அனுப்பி வைத்ததோடு ''தமிழ் இளைஞன் நம்மவர்களுக்காக புலிக்கொடி ஏந்தி வருகிறான் ''அவனை வரவேற்க வேண்டும் எனக்கூறியது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியே தந்தது .
அப்போதே கட்சிக்குள் என் மீதான வெறுப்புணர்வு தொடங்குகிறது 2008 -ம் ஆண்டு முதலே நேதாஜிக்கு இந்திய செய்த துரோகத்தையும் ,தேவருக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தையும் வெளிப்படுத்தும் விதமாக கருப்பு உடை அணிந்து வருகிறேன் .கட்சியினர் என் மீது காண்பித்த சில உணர்வுகளால் மூன்று மாத காலம் அமைதியாக இருந்தேன் .பார்வார்ட் பிளாக் தொழிற் சங்க பிரிவில் பின்னர் பணியாற்ற தொடங்கிய எனக்கு 27 ,28 வயதிலேயே தொழிற்சங்க மாநிலத்தலைவர் பொறுப்பு கிடைத்திட அதற்க்கு பி.வி.கதிரவன் அவர்களுக்கு தெரிய வர பிரச்சனை ஏற்பட்டது .
பின்னர் 2011 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கதிரவன் அவர்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுகிறது .அவர் அளித்த வர்த்தக அணி பொறுப்புகளில் உடன்பாடு இல்லை .பின்னர் டாக்டர் முத்துராமலிங்கம் ,எஸ்.ஆர்.தமிழன்,ஜெயராமன் ஆகியோருடன் இணைந்து செயல்பட தொடங்குகிறேன் .எஸ்.ஆர் .தமிழனின்மறைவுக்கு பிறகு பின்னாளில்
கேரளா எம்.பி.ஜார்ஜ் அவர்களோடு பேசி அகில இந்திய பெடரல் பிளாக் என்ற அமைப்பை தொடங்கி செயல்படுத்தி வருகிறேன் .இதில் அனைத்து அணிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு மீனவர் இயக்கத்தினர் என் மீது கொண்ட பிரியம் காரணமாக இதில் பெருமளவு பெருமளவு இடம் பெற்றுள்ளதோடு தேவர் அவர்களை ஒரு சாதியின் தலைவராக அவர்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை .அதனால்தான் மீனவர் குப்பத்தில் புலிக்கொடி கம்பிரமாக பறக்கிறது என்றார் ஆனந்த முருகன் .
கள்ளர்முரசுசுரேஷ்

No comments:

Post a Comment