Saturday, July 7, 2018

முருகன் ஜி தேவர் இனத்திற்கும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமுதாய அமைப்பிற்கும் ,ஆனமீக அமைப்பிற்கும் பாதுகாப்பு அரணாக அய்யா முருகன் ஜி விளங்குகிறார்

முருகனின் மறுஉருவம் என்றால் அய்யா பசும்பொன்முத்துராமலிங்கத்தேவரை குறிக்கும் .
அதேபோல் நேதாஜி என்ற பெயரில் இருந்துவந்ததுதான் ஜி
இதன் மொத்த வடிவமாக உள்ளவர் தான் தமிழ்நாட்டில் உசிலம்பட்டி என்றவுடன் தனித்துவம் பெயர் கொண்ட தேவரினத்தின் தலைவர் கம்பிரமிக்க தாடியும் தோற்றமும் ,ஏறிய நெற்றியில் விபூதிப்பட்டையும் அவற்றில் குங்குமமும் ,சிங்கப்பார்வையும் ,வெண்ணிற ஆடையும் ,காவி தூண்டும் ,வெண்பற்கள் கொண்ட வீரமிக்க சிரிப்பும் ,பொதுக்கூட்டத்தில் தனித்துவமாக தெரியக்கூடியவர்
மதயானைக்கூட்டத்திற்கும் மட்டுமல்ல ,சிங்கக்கூட்டத்திற்கும் தலைவர் முருகன் ஜி
தேவர் இனத்திற்கும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமுதாய அமைப்பிற்கும் ,ஆனமீக அமைப்பிற்கும் பாதுகாப்பு அரணாக அய்யா முருகன் ஜி விளங்குகிறார் .கள்ளர் முரசு இதழுக்காக நிறுவனர் சுரேஷ் , நிருபர் ஜான் சுந்தரராஜ் சந்தித்த போது
தேவரின் கொள்கைகளை அறியாமல் தன்னைத்தானே தலைவராக அறிவித்து கொண்ட தகுதியற்ற தலைவர்களால்தான் மாற்று சமூகத்தினருடன் சமூக உறவு ஏற்படவில்லை
முருகன்ஜி
உங்களின் அரசியல் வாழ்க்கை எப்போது ஆரம்பித்தது ?உங்கள் தந்தையார் பார்வர்ட் பிளாக் இயக்கத்தில் இருந்திருக்கிறார் .உங்களுக்கு அந்த அரசியல் ஆர்வம் எப்படி ஏற்பட்டது ?
அப்பா 1974 கால கட்டத்தில் சமாதான பார்வர்ட் பிளாக்கை தொடங்கினார் ஆண்டித்தேவருக்கும், மூக்கையாத்தேவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலைக்கால கட்டத்தில் அப்பா முத்துசாமி தேவர் டீம் இணைந்து சமாதான பார்வர்ட் பிளாக்கை தொடங்கினர் .அடுத்தபடியாக மதுரை காமராஜர்
பல்கலைக்கழகத்திற்கு தேவர் பெயரினை சூட்ட வேண்டும்என நடைபெற்ற போராட்டம் பார்வர்ட் பிளாக் இயக்கம் நடத்திய வெகுஜன போராட்டம் ஆகும் .அப்போது பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர் .
அப்போது சிறுவனாக இருந்த போதே நான் இந்த போராட்டத்தில் கைதாகி மைனர்சிறைச்சாலைக்கு செல்கிறேன் .சுவரொட்டி ஓட்டினேன் என குற்றம் சாட்டுகிறார்கள் அப்போது எனக்கு 7 ஆவதோ 8 ஆவதோ படித்துக்கொண்டிருக்கிறேன் .அப்போது எம் .ஜி.ஆர் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது பெயர் வைக்கும் போராட்டம் ,எம்.ஜி.ஆர்.உசிலம்பட்டி வழியாக செல்வதை அறிந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு கருப்பு கொடிபோராட்டத்தை அறிவிக்கிறோம் .
அப்போது மூக்கையாத்தேவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார் .ஆண்டித்தேவர் தலைமை தாங்குகிறார் .கடும் போராட்டம் நடக்கிறது .அப்போது எல்லா தலைவர்களும் கைது செய்யப்பட்டு விட்டனர் .50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விட்டனர் .அப்போது போஸ்ட்டர் ஓட்ட ஆள் கிடையாது ஓ.பி.ராஜன் என்னிடம் எப்படியாவது போஸ்ட்ரை ஒட்டி விட வேண்டும் என்று சொல்ல போஸ்ட்டர் ஒட்டி கைதாகி 9 நாட்கள் மைனர் சிறையில் இருந்தேன் .
அதற்க்கு அடுத்தபடியாக குறிப்பிட தகுந்த போராட்டங்களை சொல்ல வேண்டுமென்றால் 1983 -ல் இலங்கை தமிழர்களுக்காக தீ வெட்டி ஊர்வலம் நடத்திட முடிவு செய்யப்பட்டது .இலங்கை தமிழர்களுக்காக தமிழ்நாட்டிலே முதல் முறையாக ஆண்டித்தேவர் தலைமையில் தீ வெட்டி ஊர்வலம் நடத்தி 10000 பேர் கைதானோம் .
அடுத்தபடியாக உசிலம்பட்டி பேருந்து நிலையத்திற்கு பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் பெயரினை வைத்திட போராட்டம் பாண்டியம்மாள் எம்.எல் ஏ.கார் தீ வைத்த வழக்கு .பாலத்திற்கு வெடிகுண்டு வைத்ததாக வழக்கு .1991 ,1992 நடைப்பெற்ற சம்பவம் இது .இதற்காக 15 நாட்கள் கிராம கிராமமாக பிரசாரம் செய்த பிறகு வன்முறை வெடித்தது .பாண்டியம்மாள் எம்.எல் ஏ.கார் தீ வைக்கப்படுகிறது .அதன் பிறகு கோரிக்கை ஏற்கப்பட்டு உசிலம்பட்டி பேருந்து நிலையத்திற்கு பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்டப்படுகிறது.
பாரதிய பார்வர்ட் பிளாக் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?என்ன காரணம் ?
1998 ஆம் ஆண்டில் 3 தலைவர்கள் ஆண்டித்தேவர் ,சந்தானம் ,வல்லரசு பிரிந்து இருந்தார்கள் .நாங்க நான்கு பேரு ஆண்டித்தேவர் செயல்படாமல் முடங்கி விடுகிறார் .சந்தானமும் ,வல்லரசும் திமுகவிற்கு ஆதரவாக இருந்தார்கள் .நான் ஆண்டித்தேவரை மட்டும் தலைவராக ஏற்றுக்கொண்டவன் .58 கிராம கால்வாய் போராட்ட திட்டத்தை வடிவம் கொடுத்து அதனை வல்லரசு கையில் எடுத்து சென்று அவரை இறக்கி போராட செய்தது நான் .SIRDI தொண்டு நிறுவனத்திடம் இருந்து அந்த போராட்டத்தை வல்லரசு கைக்கு வந்ததே நான் தான் .58 கிராம போராட்டம்பல்வேறு கட்ட போராட்டங்களாக நடைபெற்று அதில் 3 ,4 வது முறை சிறைக்கு சென்று இருக்கிறேன் .
திராவிட கட்சிகளின் ஆதரவு நிலைப்பாட்டை அவர்கள் எடுத்ததால் உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதா ?
திராவிட கட்சிகளின் ஆதரவு என்பதைவிட அவருடைய பார்வர்ட் பிளாக் விரோதப் போக்கை என்னை மாற்றியது.பார்வர்ட் பிளாக் கமிட்டிற்கு தெரியாது வல்லரசு கருணாநிதிக்கு ரகசிய கடிதம் எழுதுகிறார் .அந்த கடிதம் தான் எங்களை பிரிக்கிறது .நான் சிறையில் இருந்தேன் .அதிமுக பார்வர்ட் பிளாக்கிற்கு எம் .பி தருவதாக இருந்தது .கருணாநிதிக்கு கருப்பு கொடி காட்டி சிறையில் இருந்தேன் .ஒரு சீட் பார்வர்ட் பிளாக்கிற்கு தருவதாக அதிமுக முடிவு செய்து விட்டது .அப்போது என்னை மையப்படுத்திதான் தென் மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் நடக்கிறது .
இந்த கடித்ததால் எனக்கும் வல்லரசுக்கும் சண்டை ஏற்படுகிறது .நாங்கள் அதிமுக உடனான எம்.பி.சீட் தொடர்பான உடன்பாட்டை பேசி முடித்திருந்த நேரத்தில் அப்போது கருணாநிதி உள்ளே அமர்ந்து கொண்டு கட்சியே உடைக்கும் வேலை நடக்கிறது .அப்போது வல்லரசுவின் குணாதிசியங்களை நான் ஆதாரத்தோடு பார்த்த பிறகு எனக்கும் அவருக்கும் மோதல் உண்டாகிறது .
மூக்கையாத்தேவர் மணி மண்டபத்திற்கு வல்லரசு தலைமையிலும் எனது முன்னிலையிலும் தான் அடிக்கல் நாட்டப்பட்டு விழா நடைபெற்றது .அப்போது இப்ப இருக்கிறவர்கள் யாரும் இல்லை . மூக்கையாத்தேவர் மணி மண்டப பணிகளை சந்தானத்திடம் இருந்து பிரிந்து விட்டு வல்லரசும் நானும் தான் ஆரம்பிக்கின்றோம் .மூக்கையாத்தேவர் மணி மண்டபம் கட்டி முதன்முதலில் மாலை அணிவிக்க நீதிமன்றத்தில் எனக்குத்தான் அனுமதி அளிக்கப்பட்டது .வல்லரசு மறைந்து விடுகிறார் .சந்தானத்திற்கும் ,கதிரவனக்குமிடையே வழக்கு நடக்கிறது .
யார் மணி மண்டபத்தை திறப்பது போட்டி சந்தானத்திற்கும் ,கதிரவனக்குமிடையே ஏற்பட உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது .என்னை 3 பிரதிவாதியாக அரசே சேர்க்கிறது .அப்போது நீதிபதி அளித்த உத்தரவில் மூக்கையாத்தேவருக்கு முதன் முதலில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் உரிமை எனக்கு தரப்படுகிறது .சந்தானம் தலைமை தாங்க வேண்டும் .கதிரவன் குத்து விளக்கை ஏற்ற வேண்டும் . நான் மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது .

அந்த விவாதம் நடைபெற்ற பொது சந்தானம் ஏற்க மறுக்க .நான் என்னுடைய முன்னிலையும் வல்லரசு தலைமையில்தான் அடிக்கல் நாட்டு விழா நடந்தது என்பதை நீதிபதியிடம் ஆதாரங்களோடு சமர்பித்தேன் .இந்த படத்தில் யாராவது இருக்கிறார்களா ?10001 ரூபாய் நான் நிதியாக அளித்து ரசீதுஉள்ளிடடவைகளை அளித்தேன் .
இன்றைக்கு சொல்லுகிறார்கள் சீர்மரபினர் டி,என்.டி. கோரிக்கை அன்றைக்கே 2000 பேரை திரட்டி 1999 -ல் கள்ளர் சீரமைப்பு துறை எடுக்கப்படுவதாக இருந்த சூழலில் கருணாநிதி அவர்களோடு சண்டையிட்டு அதனை இரண்டு முறை தடுத்து நிறுத்தி வைத்திருந்தேன் .மாநில அரசு நினைத்தால்
அரசாணை மூலம் செயல்படுத்திடலாம் .சீர்மரபினர் என்ற சொல்லாடலின் கீழ் வந்தால்தான் டி.என்.டி உரிமை போனது அப்படி இருக்கையில் பெயரே சீர்மரபினர் நலசங்கம் என வைத்து கொள்வது எப்படி ஏற்புடையதாகும்.அந்த போராட்டத்தை மக்கள் கையில் கொடுத்தால்தான் அது வெற்றிபெறும் .இருந்தபோதும் அவர்களுக்கு ஆதரவு அளித்துதான் வருகிறேன் .
விமான நிலைய போராட்டத்தைப்பற்றி ?
1997 -ல் மும்பையில் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டு பொது அங்கு கலவரம் ஏற்பட்டது .அப்போது முதன் முதலில் நான் சுப்பிரமணிய சுவாமியே சந்திக்கின்றேன்அவரிடம் இரண்டு கோரிக்கைகள் வைக்கிறோம் .1 .டெல்லியில் தேவர் சிலை வைக்கப்படவேண்டும் .2 .மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் பெயர் வைக்கப்படவேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகள் வைக்கப்பட்டு 2001 -ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் இந்த கோரிக்கைகள் முன் வைத்து அவரோடு ஏர் உழவன் சின்னத்தில் நின்றேன் .இரண்டு கோரிக்கைகளில் முதல் கோரிக்கை நிறைவேறியது .
விஷ்வ இந்து பரிஷித் அகிலஇந்திய தலைவர் பிரவீன் தொகாடியா அவர்களே விமான நிலைய கோரிக்கையே வைத்தார் .அதன் பிறகு பல்வேறு போராட்டம் நடத்தினோம் .டெல்லியில் சரத் யாதவை சந்தித்தோம் .சுப்பிரமணிய சுவாமியின் தொடர் முயற்சியால் 2010 -ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விமான நிலையத்திற்கு பெயர் வைத்திட தயாராக .பிரபு படேல் அவர்களும் இதற்க்கு ஒப்புதல் அளிக்க தயாராக சிதம்பரம் அதனை தடுக்கிறார் .சிதம்பரத்திற்கு தேவரை பிடிக்காது என்பதால் அவர் இதனை தடுத்து விடுகிறார் .
மாநில அரசு எங்கள் போராட்டங்களை கண்டு இரண்டு முறை அறிவித்தது .மருதுபாண்டியர் நூற்றாண்டு விழாவில் கருணாநிதி அறிவித்தார் .அப்புறம் பசும்பொன் சென்ற போது மு.க ஸ்டாலின் என்னிடம் போனில் பேசிய போது பெயர் வைப்பது உறுதி என்று எனச்சொன்னார் .பெயர் வைக்கப்படுகிற நேரத்தில் சிதம்பரம் அதனை தடுத்து விட்டார் அதிமுக உட்கட்சி பிரச்சனையால் தற்போது இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை .ஹெச்.ராசா ,தமிழிசை .ஆர் .எஸ்.எஸ்.போன்றோரை சந்தித்த போது அவர்கள் முழு ஆதரவு அளித்தனர் .வி.எச்.பி இதற்க்கு ஆதரவாக தீர்மானமே போட்டனர் .அடுத்த கட்ட போராட்ட வடிவம் குறித்து ஆலோசித்து வருகிறோம் .
தேசியம் என்பது கொள்கை முத்துராமலிங்கத்தேவர் என்பவர் யார் ?என்பதையும் அவர் எதற்க்காக சமரசமற்ற போராட்டத்தை நாட்டில் நடத்தினார்கள் .?என்பதையும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் .அவரை எதுக்கு கொண்டாடுகிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அவர் அரசியலைத்தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம் .
அதிமுக -திமுக இரண்டில் எதற்கு ஆதரவு ?என்றால் நாத்திக சக்தியாக இருக்கக்கூடிய திமுகவை ஆதரிக்க முடியாது என்பதர்க்காக
அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தோம் .கடந்தகால நிலைப்பாடுகள் இப்படியாக இருந்தது .எங்கள் கொள்கை நேதாஜி -தேவர் மட்டும்தான் .முத்துராமலிங்கத்தேவர் யார் ?என்பதை முதலில் தலைவர்கள் தெரிந்து அறிந்திருக்க கொள்ள வேண்டும்.தான் சார்ந்த தலைவனுடைய வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் .1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை கொண்டாடவில்லை ஏன் என்பதற்கு எத்தனை பேருக்கு தெரியும் .
சாதாரணமாக தேவர் பெயரையும் பார்வர்ட் பிளாக்கையும்எடுத்து கொள்ள கூடாது .எந்த ஒரு கொள்கையும் கோட்பாடும் இல்லாமல் வெறும் கோசம் எழுப்புவது பிரயோஜனமில்லை .தேவர் அவர்கள் சமூகதத்திற்கும் ,தேசத்திற்கும்செய்தது என்ன ?உள்ளிட்டவற்றை அறியவேண்டும் .மாற்று சமூகம் தேவரை தூக்கி பிடித்தது .அதே மாற்று சமூகம் ஏன் இன்று வெறுப்புக்குள்ளாகிறது .
இன்றைக்கு தேவர் பெயரை சொல்லி கொண்டு வரலாற்று பெருமையை தெரிந்து கொள்ளாமல் மொட்டை போடுவதும்,முளைப்பாரி எடுப்பதும் மட்டுமே அவரை பெருமைப்படுத்தக்கூடிய இருக்க கூடாது .அப்பழுக்கற்ற அந்த தியாகியின் தியாகத்தை வெளியே சொல்லிட தெரியாத தொண்டனாக இருந்தால் அதனால் பயன் என்ன ?
நேதாஜியினுடைய அரசியலையும் ,நெப்போலியனுடைய போர்க்குணத்தினையும் சுமந்து கொண்டு புலிக்கொடி ஏந்திய பிரபாகரனுக்கு பார்வர்ட் பிளாக் தெரியும் .தேசிய நீரோட்டத்தில் தமிழ் நாடு வளர்ச்சி பெரும் .எந்த தவறு நடந்தாலும் தட்டி கேட்டோம் என்பதை பார்வார்ட் பிளாக்காரனாகிய எனது கொள்கை .மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன்முத்துராமலிங்கத்தேவரின் பெயரினை வைத்தால் அவருக்கு பெருமை அல்ல ,நாட்டிற்கு தான் பெருமை .
1996 க்கு பிறகு மாற்றுச்சமூகத்தினரோடு சுமூகமான போக்கு ஏற்படாதற்கு
காரணம் தன்னைத்தானே தலைவராக அறிவித்துக் கொண்ட தேவரை பற்றி அறியாத தலைவர்கள் தான் காரணம் .
கள்ளர் முரசு சுரேஷ்

No comments:

Post a Comment