''உயிர் உள்ளவரை உணர்வு இருக்கவேண்டும் ''
சுந்தர செல்வி ஒச்சாத்தேவர்
சுந்தர செல்வி ஒச்சாத்தேவர்
ஆசிரியை போல் அனைவரையும் அரவணைத்து செல்லும் அன்னை உள்ளம் முக்குலத்து சமுதாயத்திற்கு தீங்கு ஓன்று நேர்ந்ததென்றால் புறநானுற்று தாயாய் புயலென புறப்பட்டு களம் காணும் போர்க்குணம் கொண்டவர் அவர்தாம் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிரணி செயளார் சுந்தர செல்வி ஒச்சாத்தேவர்
தேவர் ஜெயந்தி நாளன்று மட்டும் தேவர் திருமகனார் மீதான பக்தி உணர்வு இல்லாமல் வருடத்தின் 365 நாட்களும் அந்த உணர்வு இருக்கவேண்டும் .உள்ளபடி சொல்வதென்றால் ''உயிர் உள்ளவரை உணர்வு இருக்கவேண்டும் ''
2013 -ஆம் ஆண்டில் இருந்து மாநில மகளிரணி செயலாளராக இருக்கிறேன் .கட்சி நடத்துகின்ற அனைத்து போராட்டங்களையும் முன் நின்று நடத்தி இருக்கின்றோம் .டி.என்.டி.உரிமைக்காக பல்வேறு போராட்டக் களம் கண்டுள்ளோம் .எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதனை இன்முகத்தோடு சந்தித்து வருகிறேன் .மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்பதே முதன்மையான குறிக்கோள் ஆகும் .
குறிப்பாக நமது சமுதாய மக்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தக்கூடிய பி.சி.ஆர்.ஆக்ட் தொடர்ந்து தவறான நோக்கத்தோடு பயன்படுத்தப்படுகிறது .அதனை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெறவேண்டும் .மாற்று சமூகத்தினரை நாங்கள் எதிரியாக நினைக்கவில்லை .எல்லா இன மக்களும் நன்மைபெற வேண்டும் என்பதால் தான் 68 சாதிகள் உள்ளடக்கிய மக்களுக்கு டி.என்.டி.உரிமைவேண்டும் என்பதற்காக போராடி வருகிறோம் .முக்குலத்தோர் இணைந்து தேவர் என அரவிக்கப்படவேண்டும் .சலுகைகள் அனைத்தும் பொருளாதார ரீதியாக தரப்படவேண்டும் .
தங்கள் இயக்கத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரை பற்றி ?
தங்கள் இயக்கத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரை பற்றி ?
ஒப்பாரும் இல்லாத ஒப்பற்ற தலைவர் அவர் .எந்தச்செயலையும் தானே முன்னின்று செய்திட கூடியவர்.தானே புயல் பாதிப்பின் போது தனி ஒருவராக பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார் .20 ஜே.சி.பி.இயந்திரங்கள் கொண்டு ஆகாய தாமரைகளை அகற்றும் மகத்தான பணிகளில் ஈடுபட்டார் .பெயர் வாங்கிடவேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் சொந்த செலவில் போராட்டங்களை நடத்துவதோடு இளைஞர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மகத்தான தலைவராக செயல்படுகிறார் .பெண்கள் நினைத்தால் அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியும் .அத்தகைய அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்பதே என் இலட்சியம் . இவரை போல் தலைவர் உண்டா ?என தேவர் திருமகனாரை நாம் சொல்வது போல் உண்மையான அரசியல்வாதிகள் உலகிற்கு அடையாளம் காட்டப்படவேண்டும் .
தேவர் திருமகனார் எல்லா இன மக்களையும் ஒன்றாக நேசித்தார் .இறக்கும் தருவாயில் கூட முருகன் அருள் பெற்ற உண்மையான ஆன்மிகவாதியாய் திகழ்ந்தார் .அத்தகைய சமூக நல்லிணக்க தேசியவாதி நம் இனத்தில் பிறந்ததற்கு நாம் பெருமைப்படவேண்டும் .எல்லா மக்களும் ஒற்றுமையோடு இணைந்து சமுதாய ஒற்றுமைக்காக செயல்படவேண்டும் என்றார்,. .
கள்ளர் முரசு சுரேஷ்
No comments:
Post a Comment