Saturday, July 7, 2018

மனிதருள் முருகன் முத்துராமலிங்கத்தேவர் தேவரின் அடிமை கனகவேல் தேவர்

மனிதருள் முருகன் முத்துராமலிங்கத்தேவர்
தேவரின் அடிமை கனகவேல் தேவர்
எத்தனையோ தெய்வங்கள் உலவுகின்ற இந்த மண்ணில் மனிதருள் முருகனாக அலங்கரித்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என பெருமிதம் பொங்கிட குறிப்பிடும் தேவரின் அடிமை என தன்னை காட்டும் கனகவேல் தேவர் .
1980 -ம் ஆண்டு 2 -ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே பார்வர்ட் பிளாக் தலைவர்களை பார்த்து வியந்ததோடு மட்டுமல்லாமல் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை போல் என்னுடைய அனைத்து பாவனைகளும் மாற்றிக்கொண்டேன் .அந்த அளவிற்கு தேவரை பற்றிய அறிதல் அவர் மீதான ஈர்ப்பாக மாறிப்போனது .ராஜபாளையம் மண்ணிற்கும் அந்த மகானுக்குமான தொடர்பு நீண்ட சுமந்து கொண்டு நிற்கிறது .
ஜமீன்தாரின் ஆளுகையால் விவசாயிகள் படும் துயரத்தை கண்டு வெகுண்டுஎழுந்தார் தேவர் .ராஜபாளையம் மண்ணில் மிகப்பெரிய பெரும் விவசாய மாநாட்டை மாநில அளவில் தேவர் நடத்தினார் .அனிதா மாநாட்டில் ஏ. ஜி .ரங்கா கேரளா கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.எம் .எஸ் .நம்பூதிரிபாட் ,ஏ.கே .கோபாலன் ,பி .ராமமூர்த்தி ,ஜீவானந்தம் ,சீனிவாச ராவு போன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர் .இந்த மாநாடு விவசாயிகள் வாழ்க்கையில் வாழ்வில் மறுமலர்ச்சியே ஏற்படுத்தியது .
கடவுளின் பிறப்பாக அவதரித்த தேவர் துன்பம் ,நெருக்கடி பகைமை ,துரோகம் எனப் பலவற்றை தாண்டி வெற்றி கண்டவர் தேவர் .அவர் புகழை எந்நாளும் வணங்கிடுவோம்.

No comments:

Post a Comment