துரோக ஆட்சியின் சூழ்ச்சியை முறியடித்து மெய்ப்பிக்கப்பட்ட வரலாற்று தலைவராம் தேவர் திருமகனாரின் பெயரினை விமான நிலையத்திற்கு உடனே சூட்ட வேண்டும் :அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிறுவனர் மூர்த்தி தேவர் பேட்டி
மதுரை விமான நிலையதிற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் .முக்குலத்து மக்களின் மக்களின் வாழ்வாதார பிரச்சனையான டி என் டி உரிமை மீட்டேடுக்க்கப் பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மதுரையில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிறுவனர் மூர்த்தி தேவர் ,மாநில அரசை பொருத்தமட்டில் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது .மாநிலத்தில் உள்ள துரோக ஆட்சியின் சூழ்ச்சியை முறியடித்து மெய்ப்பிக்கப்பட்ட வரலாற்று தலைவராம் தேவர் திருமகனாரின் பெயரினை விமான நிலையத்திற்கு உடனே சூட்ட வேண்டும்.தேவர் இனத்தின் சுவடுகளை தெரிந்தே அழித்திட முயற்சி செய்யும் ஆட்சியாளர்களை மாற்றி நமது கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும் . முக்குலம் பிறந்த மண் என்று சொல்லக்கூடிய மதுரை மண்ணில் இந்த போராட்டக்களம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை தரும் .தாத்தா சேதுராமபாண்டியன் வழியில் அவரது நினைவுகளை போற்றி மார்ச் மாதம் மிகப்பெரிய அளவில் நினைவேந்தலை நடத்திட உள்ள்ளதோடு ,இனியும் தாமதிக்காமல் வரலாற்று தலைவராம் ,தலைவர்களை உருவாக்கிய தலைவராம் அய்யா பசும்பொன் தேவர் பெயரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்றார்
கள்ளர்முரசு சுரேஷ்
No comments:
Post a Comment