Saturday, July 7, 2018

தேவர் தந்த தேவர் மூக்கையாத்தேவர் பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர்

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.
ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு என திருக்குறளுக்கு ஏற்ப வாழ்ந்து பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர்
தேவர் தந்த தேவர் மூக்கையாத்தேவர்
மூக்கையாத்தேவர் வீட்டிற்கு ஒருநாள் இருவர் கல்கத்தாவிலிருந்து சென்னை வந்தவர் திரும்பி செல்வதற்கு பணம் இல்லாததால் தங்களின் பணத்தேவைக்கு மூக்கையாதேவரை நாடினார்கள் .அப்போது மூக்கையாத்தேவர் அவர்கள் உடல்நலக்குறைவாக மருத்து செலவுக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தார் .இருப்பினும் தன்னை நம்பி நாடி வந்தவர்களுக்கு உதவ வேண்டுமென எண்ணி தனக்காக மற்றவர்கள் வாங்கி வந்த ஹார்லிக்ஸ் பாட்டில்களை ஒருவர் மூலம் விற்று வரச்சொல்லி அவர்கள் கேட்ட பணத்தினை கொடுத்து அனுப்பினார் . அந்த ஏழை தலைவனுக்கு என்னா ஒரு ஈகை உள்ளம் .
அது இன்றைய கால கட்டத்திற்கு எத்தனை பேருக்கு உதவ வேண்டும் என எண்ணம் வரும் .
கள்ளர் முரசு சுரேஷ்

No comments:

Post a Comment