Saturday, July 7, 2018

டாக்டர் மஞ்சு கணேஷ் மேனேஜிங் டிரஸ்ட்டி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கலைக்கப்படவேண்டும் டி.என்.டி .கோரிக்கை குறித்து வி.கே.சி.நடராஜன் நினைவு அறக்கட்டளை

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கலைக்கப்படவேண்டும்
டி.என்.டி .கோரிக்கை குறித்து வி.கே.சி.நடராஜன் நினைவு அறக்கட்டளை
மேனேஜிங் டிரஸ்ட்டி
டாக்டர் மஞ்சு கணேஷ்
எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளரும் வி.கே.சி.நடராஜன் ஐ.ஏ .எஸ் குடும்ப பாரம்பரியத்தை சேர்ந்த டாக்டர் மஞ்சு கணேஷ்
அவர்களை சந்தித்தபோது அவர் அளித்த பேட்டி
காராபட்டி வெள்ளைத்தேவர் மகன் சின்னாத்தேவர் (எ) நடராஜன் சாதாரண குடும்பத்தில் பிறந்து 1947 மதுரை அமெரிக்கா கல்லூரியில் இளங்கலை பட்டமும் ,காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றார் .திருநெல்வேலி இந்து கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார் .திருமணத்திற்கு பிறகு நடைபெற்ற போட்டி தேர்வில் நேரடியாக உதவி ஆட்சியாளராக பொறுப்பேற்றார் .
உசிலம்பட்டி மக்களுக்கு கல்வி கிடைத்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஐயா மூக்கையாத்தேவர் மற்றும் வி.கே.சி.நடராஜன் அவர்களின் முயற்சியால் தான் கள்ளர் கல்விக்கழகம் என்ற அமைப்பே உருவாக்கப்பட்டது .கள்ளர் சீரமைப்பு துறை நிர்வாகத்தின் கீழ் இருந்த பொது நலகமிட்டி கலைக்கப்பட்டு அதன் சொத்துக்களும் ,வைப்பு தொகைகளும் கள்ளர் கல்வி கழகத்திற்கு மாற்றப்பட்டது .அதன் தலைவராக திரு .மூக்கையாத்தேவர் அவர்களும், செயலாளராக திருமதி இராஜேஸ்வரி நடராஜன் அவர்களும் பொறுப்பேற்றார்கள் .இந்த அமைப்பில்தான் பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் பெயர் உசிலம்பட்டி மண்ணில் கல்லூரி அமைய காரணமாக இருந்தது .
ஆனால் மூக்கையாத்தேவர் பதவி விலகிய பிறகு கள்ளர் கல்வி கழகத்தில் பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்தது.பின்னர் எனது கணவர் கணேஷ் நடராஜன் , மாமனார் வி.கே.சி.நடராஜன் மறைவுக்கு ,வி.கே.சி.நடராஜன் நினைவு அறக்கட்டளை தொடங்கி குறிப்பாக பெண் குழந்தைகளின்
பள்ளி கல்விக்கும், கல்லூரி கல்விக்கும்உதவி செய்து வருகிறோம் .எனது மாமியார் திருமதி இராஜேஸ்வரி நடராஜன் அவர்களும் மிகப்பெரிய முற்போக்கான எழுத்தாளர் . பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் குடும்பம் என்ற கோட்டையே கட்டி காத்திடும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டார் .
இக்கால பெண்களும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முடிவுகளை எடுத்து விவகாரத்து செய்ய கூடிய மோசமான சூழ்நிலை இன்று உள்ளது.ஆகையால் குடும்ப கட்டமைப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு பெரும்பங்கு உண்டு என்பதை அவர்கள் உணர்ந்து செயல்படவேண்டும் .பசும்பொன்முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழாவை பொறுத்தமட்டில் அவரது விழாவை இன்னும் மதுரை தாண்டி கொண்டு வராமல் இருக்கிறோம் .144 தடை உத்தரவால் தேவரை கூண்டுக்குள் அடைக்க முயற்சிக்கிற தமிழக அரசின் வேண்டாத செயலாகும் .தேவரது அரசியலை நாம் மிடெடுக்க வேண்டும் .
இன்றைக்கு x ,y ,z பார்வர்ட் பிளாக்குகளால் இதனை செய்திட முடியுமா ?
என்றால் அது கேள்விக்குறிதான் .டி.என்.டி கோரிக்கையே பொறுத்தமட்டில் போக்குடிகளாக ,பூர்வக்குடிகளாகஇருந்த கள்ளர் சமூக மக்களை 1976
ஆம் ஆண்டு அரசாணை 1310 மூலம் 68 சாதியினருக்கு பழங்குடி என்று ஒதுக்கி இந்த சாதி சான்றிதழை சமுதாயம் என மாற்றி நம் மக்களில் அடிப்படை உரிமைகளை பறித்து விட்டது .உடனடியாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கலைத்து மறுசீராய்வு செய்யப்பட்ட
டி.என்.டி.உரிமையை மீட்டெடுக்க வேண்டும் .
கள்ளர் முரசு சுரேஷ்

No comments:

Post a Comment