Saturday, July 7, 2018

கள்ளர் முரசு மாத இதழ் நிறுவனர் சுரேஷ் குமார் சார்பாக அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் : நல்லாசியுடன் தை பொங்கல் முன்னோரிடம் நல்லாசி பெறுவோம்தித்திக்கும் பொங்கலாகட்டும்.
கள்ளர் முரசு மாத இதழ்
நிறுவனர் சுரேஷ் குமார் சார்பாக
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
என் இதயம் கனிந்த
தமிழர் திருநாள் வாழ்த்துகள்…!
தமிழர்கள் பல திருநாள்களைக் கொண்டாடுகிறார்கள். அவற்றுள் முக்கியமானது பொங்கல் திருநாள். இத்திருநாளைத் தைத்திங்கள் முதல்நாளில் கொண்டாடுகிறார்கள்
தமிழர்கள் பொங்கல் திருநாளை மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள். முதலாவது நாள் பெரும்பொங்கல். அன்று அனைவரும் புத்தாடை அணிவார்கள். புதிய பானையில் புத்தரிசி இடுவார்கள். அதனைப் பொங்கல் இடுவார்கள். பொங்கல் பொங்கும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். பின்னர் பொங்கலைக் கதிரவனுக்குப் படைப்பார்கள். எல்லோரும் கதிரவனை வழிபடுவார்கள்.
இரண்டாவது நாள் மாட்டுப் பொங்கல். அன்று மாடுகளை நன்றாக அலங்கரிப்பார்கள். மூன்றாவது நாள் காணும் பொங்கல். அன்று மக்கள் ஒருவரையொருவர் சந்தித்து மகிழ்வார்கள். இந்நாளில் 'மஞ்சு விரட்டு' என்னும் வீரவிளையாட்டு நடைபெறுகிறது. பொங்கல் உழைப்பின் பலனை உணர்த்தும் திருநாள்.

No comments:

Post a Comment